இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். (இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத்
தெட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து
இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.ஆலயம்
ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது.விசேட மூர்த்தி அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி
உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லஷ்மி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு
நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய
வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர்
சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தக்ஷிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர்.சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம்
செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவகர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய
குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். "ஞான கூபம்' என்னும்
தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன.
இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. விசேட மூர்த்தி அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லஷ்மி, பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.
ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர் சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தக்ஷிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர்.சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவகர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். |