|
||||||||
அம்மாவின் செல்லங்கள் |
||||||||
அம்மாவின் செல்லங்கள் !
குட்டி குட்டி பாப்பா குண்டு குண்டு பாப்பா
தவழ்ந்து தவழ்ந்து வருகிறாள் கையை கையை ஆட்டுகிறாள்
அழகு மிளிர சிரிக்கிறாள் அம்மா பெற்ற செல்லம்
பள்ளி செல்லும் முன்னரே எனக்கு முத்தம் தருவாளே
பள்ளி விட்டு வந்த பின் தத்தி தத்தி வருவாளே
உம்மா கொடு என்பாளே ! முத்தம் கொடுத்து கொஞ்சுவேன்
அம்மா எனக்கும் முத்தம் கொடுப்பாளே, இருவரையும் அணைப்பாளே !
நாங்கள் இரண்டு பேருமே அம்மா பெற்ற செல்லங்கள் |
||||||||
Mother child | ||||||||
by Dhamotharan.S on 01 Jun 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|