LOGO

அழகு மலையான்

  கோயில்   அழகு மலையான்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   பதிணெட்டாம்படிக் கருப்பசாமி காவலாக வீற்றிருக்கும் அழகு மலையான்
  பழமை   
  முகவரி
  ஊர்   மதுரை
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

தெய்வ நம்பிக்கை என்பது மனிதனின் மனத்தோடு தொடர்புடையது. ஒரு பொருளின் மீது வைக்கும் பற்று அல்லது விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தெய்வ நம்பிக்கை உருவாகின்றது. தெய்வ நம்பிக்கை என்பது அறிவினைத் தாண்டிய உளவியல் சார்ந்த செய்தியாகும். பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகின்றது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்துப் . பின்பற்றி வருகின்றனர்.

அவற்றில் குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. குல தெய்வ வழிபாடு என்பது மக்களிடம் பெரும் நம்பிக்கையைக் கொண்டிருப்பதாக அமைகிறது. கடவுள் நம்பிக்கை: இயற்கையின் அச்சந்தரும் செயல்கள் மனிதனைக் கடவுள் நம்பிக்கை எனும் நெறிக்கு இட்டுச் சென்றன என்பது மானிடவியலாரின் கருத்தாகும். பழங்கால மனிதன் இயற்கையைக் கண்டு பயந்து, பின்பு அவற்றையே கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினான். சமூகத்தில் மனிதர்கள் தவறு செய்யும்போது அவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்தும் நோக்கில் தவறு செய்பவனைக் கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தனர். சங்ககால மக்களிடம் தெய்வ நம்பிக்கையும் குல தெய்வ வழிபாட்டு முறையும் மிகுந்து இருந்தது. நோய் தீர்க்கும் பொருட்டு.

குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் பழக்கமும் காணப்பட்டது. இறைவனை புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்து நறுமணம் மலர்களையும் வாசனைப் பொருட்களையும் தூவியும் மக்கள் (பக்தர்கள்) வழிபட்டனர். இறை வழிபாடு: வழிபாடு என்னும் சொல் இறைவனை வணங்குதல், தொழுதல் என்னும் பொருள் கொண்டு அமைகிறது. மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தான் விரும்பும் பல்வேறு ஆக்கங்களுக்காகவும் தன் உள்ளத்தில் தோற்றுவித்து "மனக்கலக்கங்களும் வேறு பல துன்பங்களும் நீங்கச் சிறந்த கருவியாக வழிபாடு அமைகின்றது”. படிப்பறிவில்லாத அந்தக் காலத்தில் கதிரவன், நிலவு, விண்மீன்கள், மழை, இடி, மின்னல், நோய்கள், வெள்ளம், நெருப்பு, குழந்தைப்பிறப்பு, மலர்கள் மலரும் புதுமை போன்றவை பண்டைய மனிதனுக்குப் பெரும்வியப்பினை ஏற்படுத்தியது.

இறைவனை அன்போடு வணங்கி வழிபட்டால், தங்கள் எண்ணங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் தெய்வங்களை வழிபட்டனர். சமயம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எனப் பல நம்பிக்கைகள் கொண்டு வாழ்ந்துள்ளான். குலதெய்வம் தன் குல முன்னோரையும் அவர்கள் காலம் காலமாக வழிபட்ட தெய்வத்தையும் குலதெய்வ வழிபாடு என்பார்கள். குல தெய்வ வழிபாடு என்பது பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் வழிபட்ட முறையினை பின்பற்றி அதன் பண்பாடு மாறாமல் வழிபடுவது ஆகும். அவ்வாறு வணங்கிய தெய்வத்தின் பெயரை தனது வீட்டில் பிறக்கும் மூத்த குழந்தைகளுக்கு வைத்து அவர்களின் பழமையை போற்றியும் கலாச்சாரத்தின் தன்மையை இழக்காமல் இருப்பதற்கு இத்தகைய குல தெய்வ வழிபாடு மிகவும் பெரிதும் உதவுகிறது. எனது தாய்வழி குல தெயவத்தின் பெயர் மதுரையில் காணப்படுகின்ற கோச்சடை முத்தையா கோவில் ஆகும்.

தந்தை வழி குலதெய்வத்தின் பெயர் அழகர்மலையில் வீற்றிருக்கும் பதிணெட்டாம்படிக் கருப்பசாமி காவலாக வீற்றிருக்கும் அழகு மலையான் எனது தந்தை வழிக் குல தெய்வமாகும். தாய்வழி குலசாமி இக் கோவிலானது மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் பத்து மைல்கல் தொலைவில் உள்ள இக்கோவிலில் மூலவராக அய்யனார் வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக புளியமரம் கருதப்படுகிறது. இக்கோவிலில் வைகை, அழகர் கோவில் தீர்த்தம் புனித தீர்த்தமாக பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியை கோச்சடை என மக்கள் அழைக்கின்றனர்.

திருவிழாக்கள்: மாசி மாதத்தில் 3 நாள் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கோச்சடை கிராம மக்கள் மட்டும் விழா கொண்டாடுகின்றனர். இந்த விழாவை புரட்டாசி மாத செவ்வாய் கிழமையில் இங்குள்ள பனைமரத்தில் உள்ள பல்லி கொடுக்கும் சத்தத்தை உத்தரவாக வைத்து கொண்டாடுகின்றனர். பல்லி சத்தம் கொடுக்காவிட்டால் அந்த வருடம் புரட்டாசி திருவிழாவே கொண்டாடாமல் அடுத்த வருடம் தான் கொண்டாடுவார்கள். இந்த முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. இங்குள்ள ராக்காயி அம்மனுக்கு பரம்பரை பரம்பரையாக டிரஸ்டிகளால் நடத்தப்படும் சூலாட்டுபூஜையும், முத்தையாசாமிக்கும் நடத்தப்படும் பாவாடை பூஜையும் காண்பது மிகவும் சிறப்பாக கருதுகின்றனர்.

கோவிலின் பொதுவான தகவல்கள்: இந்த கோயிலில் வில்லாயுதம் உடைய அய்யனார், முத்தையா சுவாமி, கருப்பசாமி அக்னிவீரபத்திரர், கருப்பாயி அம்மன், சங்கிலிகருப்பு, மெய்யாண்டி அம்மன், நாகப்பசாமி, சன்னாசி, ஆதிபூசாரி பேச்சியம்மன், முத்துகருப்பசாமி, இருளப்பசாமி, வீரணசாமி, ராக்காயிஅம்மன், இருளாயிஅம்மன், சோணை, முனியாண்டி, பத்திரகாளி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். அய்யனாருக்கு வலது பக்கம் கருப்பசாமி, முத்தையா சன்னதியும், இடது பக்கத்தில் நாகப்பசாமி சன்னதியும் உள்ளது. ஜாதி பேதமில்லாமல் எல்லா இனத்தவரும் இந்த அய்யனாரை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

இந்த அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் மரியாதை நிமித்தம் இந்தப் பகுதியை குதிரையோ, குதிரை வண்டியோ தாண்டிச்செல்லாது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கும், சப்தகன்னிமார்களுக்கும் தனித்தனி விக்ரகங்கள் உள்ளன. மக்களின் பிரார்த்தனை நாகதோஷம் நீங்க புளியமரத்தின் அடியில் உள்ள நாகம்மனுக்கு பால் ஊற்றியும், திருமண வரம் வேண்டுவோர் தாலிக்கயிறும், குழந்தை வரம் வேண்டுவோர் சேலைத்துணியால் இம்மரத்தில் தொட்டில், கட்டியும் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.

இத்திருக்கோவிலில் செய்யப்படும் நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் நாகம்மனுக்கு பால் ஊற்றி பக்தர்கள் தங்கள் நேரத்திங்கடனை நிறைவேற்றுகின்றனர். இத்திருத்தலத்தின்

தலபெருமை: இந்த கோயிலின் உள்ளே நுழைந்ததும் முத்தையாவும், வில்லாயுதம் உடைய அய்யனாரும் குதிரை மீது அமர்ந்தபடி பஞ்சதங்களுடன் நம்மை வரவேற்கிறார்கள். அவர்களை தரிசித்து அப்படியே நேராக சென்றால் இந்திரன் அய்யனாருக்கு அளித்த வெள்ளை யானை உள்ளது. அதையும் தாண்டிச் சென்றால் மூலஸ்தானத்தில் மூலவராக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக வில்லாயுதம் உடைய அய்யனார் பூரண புஷ்கலை சமேதராக கிழக்கு பார்த்து அருள்பாவிக்கிறார். மூலஸ்தானத்தின் வரலாறு முன்பு செண்பகப்பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார், பூரண, புஷ்கலையுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு வெள்ளை யானை தவிர குதிரையும் ரிஷபமும் வாகனங்களாக உள்ளன. இது பாண்டியர் கால புராதன கோயிலாகும். அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம். இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும், ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் முத்தையா சுவாமி என்பவர் இங்கு வந்தார். இங்குள்ள அய்யனாரிடம் அடைக்கலம் புகுந்தார். காலப் போக்கில் முத்தையா சுவாமி பிரபலமாகி விட்டார். அன்று முதல் அய்யனார் கோயில் என்ற நிலை மாறி, முத்தையா கோயில் என்று வழங்கப்பட்டது. கோச்சடை பெயர்க்காரணம் பற்றிய சுவாரஸ்யமான வரலாறு: சிவபெருமான் திருவிளையாடல்களில் கோச்சடை பற்றிய வரலாறு பற்றிய கருத்துக்கள் சொல்லப்படுகிறது. தன் பக்தையான வந்தி என்னும் முதியவளைச் சிவலோகத்திற்கு சேர்க்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் வைகை நதியைப் பெருகச் செய்தார். உடனே நகரில் உள்ளவர்கள் உடைந்த கரையை அடைக்க ஆரம்பித்தனர். பிட்டு விற்று உண்பவளும், பிட்டையே சிவனுக்கு நைவேத்யமாக படைப்பவளுமான வந்திக்காக சிவனே கூலியாளாக மண்கூடையை சுமந்து கொண்டு கரையை அடைக்காமல் இருந்தார். இதனால் பாண்டிய மன்னன் சிவனை கோவிச்சு அடித்ததால் "கோவிச்சடி' என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் "கோச்சடை' என்று பெயர் திரிந்தது. கோச்சடைக்கு மிக அருகில் சொக்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு தான் அன்னை மீனாட்சி முதன் முதலில் இருந்தாக கூறப்படுகிறது.

தந்தை வழி குலதெய்வத்தின் பெயர் அழகர்மலையில் வீற்றிருக்கும் பதிணெட்டாம்படிக் கருப்பசாமி காவலாக வீற்றிருக்கும் அழகு மலையான் எனது குல தெய்வமாகும். உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள் (ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி தாயார் ஆவார், அம்மன்/தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, இக் கோவிலின் ஜோதி விருட்சமும் சந்தனமரமும் தல விருட்சமாக கருதப்படுகிறது, இக்கோவிலின் தீர்த்தம் நூபுர கங்கையாகும், இக்கோவிலின் புராணப் பெயர் திருமாலிருஞ்சோலை, இக்கோவிலானது அழகர்கோவில் வட்டம் மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இக்கோவிலின் மேலே முருகனின் அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலை ஆறாவது படை வீடாகக் கருதப்படுகிறது. சித்திரைத் திருவிழா - 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள் ஐப்பசி மாதத்தன்று அருவி உற்சவம் - 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பாகும். தல சிறப்பு மூலவர் சன்னதியில் தெய்வ பிரதிஷ்டையாக பக்தர்களால் கருதப்படும் அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசமாகும். பிரார்த்தனை இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளை மக்கள் வணங்குகின்றனர்.

இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள். பக்தர்களின் நேர்த்திக்கடன் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பாக விளங்கிகின்றது. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடைசாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணொய் சிறு விளக்குகள், துளசி தளங்கள். பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம் இத்திருத்தலத்தின் பெருமை கருப்பண்ணசுவாமி இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். பதினெட்டாம் (படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். இவரை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் உள்ள தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் ஐதிகமாக இன்றும் கருதப்படுகிறது. கோவிலைச் சுற்றியுள்ள கோட்டை விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். நூபுர கங்கை சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது. பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் – சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார் என்பது இக்கோவிலின் ஐதிகம். அழகர் கோவிலின் சிறப்பு தகவல்கள் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இன்றளவும் கருதப்படுகிறது. காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி மலையில் உள்ள லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை, கோபமடைந்த துர்வாசரோ, 'மண்டூக பவ' அதாவது "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ' என சாபமிட்டார். சாபம் பெற்ற சுதபஸ், "துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்!" என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய், அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்; என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார்.

சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக. மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார். இன்றும் மதுரையில் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் இத்திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இத்திருத்தலத்தின் சிறப்புகள்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம். முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இந்த திருத்தலத்தில் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்; பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தலப் பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர். எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசு செய்கிறார். இம்மலை 7 மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது. முடிவுரை “ எங்கள் குல தெய்வம் ” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட இக்கட்டுரையில் எனது குலசாமியான கோச்சடை முத்தையாவையும் அழகர் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தர்ராஜப் பெருமாளையும் பற்றிய நான் அறிந்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.

இக்கால கட்டத்தில் குலதெய்வ வழிபாடானது குறைந்து வரும் நிலையில் இத்தகைய தலைப்பில் போட்டிகள் நடத்துவதும் இக்குலதெய்வ வழிபாட்டின் மூலம் மாணவர்களுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் இத்தகைய குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினை எடுத்துக்கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும் குலதெய்வ வழிபாட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வகையான முயற்சிகள் பெரிதும் பாரட்டுக்குறியது.

பா.செல்வகுமரன்

ஆய்வு மாணவர் மொழியியல் துறை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை – 625021

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    ராகவேந்திரர் கோயில்     நவக்கிரக கோயில்
    சுக்ரீவர் கோயில்     நட்சத்திர கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     வீரபத்திரர் கோயில்
    விஷ்ணு கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சேக்கிழார் கோயில்     மற்ற கோயில்கள்
    பட்டினத்தார் கோயில்     தியாகராஜர் கோயில்
    விநாயகர் கோயில்     முருகன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    பாபாஜி கோயில்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்