LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

திருவள்ளுவரும், அரும்பாவூர் -தழுதாழை மரச் சிற்பங்களும்

உலகத்திற்கு ஈடு இணை இல்லா வாழ்வியல் இலக்கியத்தை படைத்த வள்ளுவரை தம் இல்ல வாயிலின் முகப்பாக படைத்து, உவப்பாக, வாழ்ந்து வருபவர் திரு பூங்குன்றன் அவர்கள்.
 
அறம் பொருள் இன்பத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டு விளங்குகிறார் திரு பூங்குன்றன் அவர்கள். இவர் ஒரு தூய தமிழ் பற்றாளர், திருக்குறள் அன்பர். நற்செயல்களுக்கு நற்றுணை நிற்பவர் .தமது வாழ்வியலில் இவற்றையெல்லாம் எவ்வாறு பின்பற்றி வருகிறார் என்பதற்கு மேலும் ஒரு சிறந்த உதாரணம் அவருடைய வணிக நிறுவனத்திற்கு அவர் சூட்டியிருக்கும் பெயர்களைக் குறிப்பிடலாம்.
 
மிகவும் பரபரப்பான வணிகப் பகுதியில் ரெடிமேட்ஸ் ,பார்மசி ,ஷூ மார்ட், கிப்ட் ஷாப் என ஆங்கிலத்தில் தெறிக்கவிடும் தெருவில், தமது "கடிகார கடைக்கு" "பவானி மணிப்பொறி அங்காடி "என்ற அழகுப்பெயரில் மிளிரச்செய்வார். மேலும்,ஒரு கடைக்கு "பவானி துணிக்கடை' என்றும் பெயர் சூட்டி இருப்பார்.
 
தமது இயற்பெயரான ஜெயராமன் என்பதையும் பூங்குன்றன் என்று தமிழ்ப்படுத்தி அழகூட்டுவார். நீண்ட காலமாக தூய தமிழ்ப்பணியிலும், திருக்குறள் பரப்புதலிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். பெரம்பலூரில் நீண்ட காலமாக தம் வாழ்நாள் எல்லாம் தமிழ் தொண்டாற்றி, திருக்குறள் பரப்பி வாழ்ந்து மறைந்த "பாவலர் ஆடல்" அவர்களுடன் இணைந்து பணி செய்த சிறப்புக்குரியவர்.
 
இவ்வேளையில் தமது புதிய இல்லத்திற்கு உலக புகழ்பெற்ற அரும்பாவூர்- தழுதாழை மரச்சிற்ப கலைஞர்களைக் கொண்டு திருவள்ளுவர் சிற்பத்தினை தனது வாயிலில் நிறுவ வேண்டும் என்பதை பெருத்த அவாவாக கொண்டு நிறைவேற்றியுள்ளார்.
 
திருவள்ளுவரை முகப்பில் வைப்பதற்கு பலரும் தயங்கி இருக்கின்றனர். அறம், பொருள், இன்பம் படைத்த வள்ளுவரை வாயிலில் படைத்து அனைவரும் அறம் பொருள் இன்பத்தை அடைய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், அதற்கு உள்ளூர் சிறப்பையும் உணர்த்தும் வகையில் அரும்பாவூர் தழுதாழை சிற்பிகளைக் கொண்டு இதனை நிறைவேற்றியுள்ளார்.
 
பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள அரும்பாவூர்-தழுதாழை எனும் ஊர் பழமையான மர வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. சிற்ப கோட்பாடுகளின்படி , தேர்கள்,சிலைகள் போன்ற தலைசிறந்த படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இன்று தமிழ்நாட்டில் பல தேர்கள் அமைப்பதற்கும் ,அதற்கு ஏற்ப சிற்பங்கள் வடிப்பதற்கு பல மாவட்டங்களுக்குச் சென்று அமைத்து வருகின்றார்கள்.அனைத்தும் கைவினைஞர்களைக் கொண்டு கைகளால் செய்யப்படுபவை.
 
மேலும் பல சிற்பங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவருகின்றன. பலருக்கும் பரிசுப் பொருட்களாகவும் அழகுப் பொருட்களாகவும் நினைவுப் பொருட்களாகவும் செய்து கொடுத்து வருகின்றனர்.தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
 
இத்தகைய கலைஞர்களைக் கொண்டு திருவள்ளுவர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இல்லம்தோறும் வள்ளுவம்,
வாயில் தோறும் வள்ளுவர்,
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று என்றும் எண்ணி மகிழ்ந்திடவும், உள்ளூர் கலைகள் யாவும் உலகம் அறிந்திடச் செய்யவும் துணை நிற்கும் திரு பூங்குன்றன் அவர்களின் பணி வணங்கத்தக்கது.
 
என்றும்
தமிழோடும்,வள்ளுவத்தோடும் வாழ்க பல்லாண்டு!
திரு.பூங்குன்றன்,
பெரம்பலூர்.
by Swathi   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.