LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

விவிலியமும் வள்ளுவமும் -முனைவர் அ.பிரான்சிஸ்

"விவிலியமும் வள்ளுவமும்".
முனைவர் அ.பிரான்சிஸ். தமிழ் உறவு பதிப்பகம் .முதல் பதிப்பு 2019 விலை ரூபாய் 90.
மொத்த பக்கங்கள் 100.
# இது ஒரு திருக்குறள் சம்பந்தமான புத்தகம் .
இந்துக்களுக்கு வள்ளுவம் எப்படியோ கிறிஸ்துவர்களுக்கு விவிலியம் அப்படி என்கிற அளவில் ஒப்பீடு செய்ய செய்து எழுதப்பட்டிருக்கிற அருமையான புத்தகம் இது.
**
' விவிலியமும் வள்ளுவமும்' என்ற இந்நூல் அறிஞர்களின் ஆர்வத்துக்கு விருந்தாகி, நற்புகழ் பெறும் எனலாம் .
இருபெரும் நூல்கள் மானுடத்துக்கு வழிகாட்டி வாழ்விக்கும் மறைகள் அவற்றைக் கற்று ஒப்புமை யறிந்துணர்ந்து பின் தாம் காட்டும் கோணத்தில் உள்ள அருமைகளைப் பாராட்டி வாசிப்போர் வரவேற்கும் விதத்தில் ஆய்வாளர் இயற்றியுள்ள பான்மை போற்றத் தக்கது.
இயேசு, தன் அன்னையின் அன்பான கட்டளையை மேற்கொண்டு திராட்சை ரசம் தீர்ந்த நிலையிலிருந்து பெரும் அற்புதம் நிகழ்த்தினார். மரியாள் கர்வம் கொள்ளாமல் பணிவு காட்டிய திறம் இருமறைகளும் ஏற்கும் சால்பெனப் புரியவைத்துள்ளார் ஆசிரியர் .
இது தொடர்பாக ஓர் இனிய தகவல் வாசகர் அறிய வேண்டும். நெடிய ஜாடியில் திராட்சை ரசம் ஊற்றப் பட்டு வழங்கியபின் தீர்ந்து விடும் நிலையில் இயேசுபிரான் ஜாடியில் தண்ணீர் ஊற்றும்படி, செய்து ஆசிபுரிந்தார், தண்ணீர் என்னும் நீர் மடந்தை அருளாளராம் தலைவர் வாழ்த்த வெட்கி சிவந்ததால் அது திராட்சை ரசமாயிற்று என்று ஒரு தேர்வில் கட்டுரைப் போட்டியில் Lord Byron பைரன் பெருங்கவி எழுதிப் பாராட்டு பெற்றார் MAIDEN SAW HER MASTER and BLUSHED என்பதே அந்த ஒற்றைக் கவித்துவ வாக்கியம்.
பழமையான நீதிகள், சாலமோன் லூக்கா வாயிலாக வாய்த்தவை, தமிழ் மறையோடு ஒப்பு நோக்கப்பட்டு, சிறந்த கோணத்தில் வழங்கப்படுகின்றன.
'உழுவார் உலகத்தார்க்காளி"
எனக் குறள் கூறியதற்கு ஏற்ப 2018 நவம்பரில் கஜா புயலில் சிக்கிப் பரிதவித்த மக்களை சமுதாயத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கே உதவி அவசர காலப் பணிபுரிந்ததை நமக்கு மிகப் பொருந்த கூறுகின்றார்.
நீதிகள் நம் கண்ணெதிரே உணர்ந்தோரால் பின்பற்றப் படும் போது அவற்றை, காலத்தால் மறைந்து படா மாட்சியாக, நூலாசிரியர் உணர்த்தியுள்ளார்.
பழம் பெரும் நீதிக் கருத்துகள் நாம் வாழும் காலத்தில் நினைவுட்டல் படுவதோடு மறவா சிறப்புடையான மறைகள் என்று நிலைநாட்டும் ஆசிரியரின் நோக்கம் உயர்ந்தது.
"உறிநட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்' (812 குறள்)
இக்குறள் அரசியலில் 1962 ஆம் ஆண்டு பண்டிதநேரு சீனாவிடம் ஏமாற்றம் கண்ட சரித்திர நிகழ்வு கூறும் போது நினைவு கூறும் ஆசிரியர் கருத்து விழிப்பு மிக்கவர் பழஞ்சரிதம் உணர்ந்த பண்டித நேரு சீனாவை நட்பு நாடாக உணர்ந்து ஏமாற்றம் எதிர் கொள்ள நேர்ந்ததும் கருதலாம்.
அமிர்தம் ஆரோக்கிய மேரி தம்பதிகளுக்குப் பிறந்த கல்வியில் சிறந்த புதல்வர் பற்றிக் குறிப்பிட்டதே வரலாற்றுப் புகழ் தருவது மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி எனவரும் குறள் நேரடி வாழ்வில் மெய்யிருப் பெருவது நூலாசிரியின் நோக்கில் பெருமிதம் சேர்ந்துள்ளது.
இறைமறைகளின் தெளிவோடு காலத்தின் பாதையில் நிகழ்ந்தவற்றை நூலாசிரியர் இயற்றிய இப்பனுவல் கருத்துலகின் கவனத்தைக்கவரும் தகுதியுடையது.
'விவிலியமும் வள்ளுவமும்' எனும் நூல் இயேசுவின் கொள்கைக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக உள்ளது. வள்ளுவன் கூறிய குறள் கருத்துகள் முன் கூட்டியே இயேசுவின் நூல் உரைத்து இருக்கிறது என்பதுதான் வெள்ளியிடை வழியாக விளங்குகிறது. குறளின் கருத்துகள் இயேசுவின் பைபிள் நினைவு படுத்துவதாக உள்ளது.
ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு. அது தான் கனிகளால் மனிதர்க்கு களிப்பூட்டுகிறது என்கிறது பைபிள் அதையே வள்ளுவர்,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்ப்புரிந்தார் மாட்டு."(குறள் : 5)
என்கிறார் இதன் பொருள்-
இறைவனின் பெருமைகளை அறிந்து அவனிடம் அன்பு செலுத்துபவருக்கு நன்மை உண்டாகும்.
ஆக, வள்ளுவத்தின் குறள் கருத்து ஏற்கனவே, விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது கண் கூடு. இப்படி, விவிலியம்- குறள் இரண்டையும் குறிப்பிடும் ஆசிரியர் இந்த ஒவ்வொன்றுக்கும் உள்ள ஒப்புமையை சொல்லி இருப்பது போற்றுதலுக்கு உரியதாக உள்ளது.
இதுபோல், விவிலியத்தில் உள்ள கருத்துக்கள் கொண்ட குறள்கள் முன் பரிமாற இருக்கிறார்,ஆசிரியர்,
"பணிவோடு செய், அவ்வாறாயின் கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவார்" என்கிற விவிலியத்தில் சொல்லப் பட்டதையே குறளும் சொல்கிறது.
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.''(குறள்:121)
இப்படி, விவிலிய வார்த்தைகளையும், குறள் வார்த்தைகளையும் ஒப்புமைப்படுத்தி அதேகேற்ப பொருள் கூறிய தலைவர்களை நமக்கு அடையாளம் காட்டி இருப்பது சிறார் முதல் பெரியவர்கள் வரை பார்த்து படித்து புரிந்து கொள்ள ஏதுவாக அமைத்துள்ளது உதாரணத்துக்கு ஒன்று-
"தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை"( 444)
என்று குறள் சொல்லுகிறது
விவிலியமும்,
"தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவு கூர்மையாலும் மக்கள் வழி நடத்தினார்கள்'' என்று சொல்கிறது தந்தை பெரியாரும் இந்த நாட்டில் நிலவிவரும் மூடநம்பிக்கையை கலைந்து எறிய முற்பட்டார். ஏற்ற தாழ்வு போன்றவற்றால் மக்கள் படும்
அவதிகளை கண்டு அதை நீக்க பரப்புரை செய்தார், என்று நூலாசிரியர் விவிலியத்துக்கும் குறளுக்குமான ஒப்புமையை விதைத்து நடைமுறையில் அந்த கோட்பாடுகள் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
விவிலியம் குறள் கருத்துக்களுடன் எல்லோருக்கும் போய் சேரவேண்டிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. உலக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரும் வத்திகான் என்கிற சிறு நாட்டின் தலைவருமான போப் ஆண்டவர் 2018 டிசம்பர் திங்கள் இரண்டாம் வாரத்தில் உலகம் முழுவதற்கும் அறிவுரை பகன்றார். அதாவது குடும்பத்திலுள்ள தந்தை தாயோ அவர்களின் பிள்ளைகளோ யாரும் மாசற்ற மனிதர் இல்லை .எல்லோருமே குறைபாடுடையவர்கள். எனவே உண்மை நிலை உணர்ந்து பிறரை இன்னொருவர் அனுசரித்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்றார் - என்ற தகவல்களையும் புலப்படுத்துகிறார். ஆசிரியர்.
"நமக்கு கிடைக்கும் பொருள் செல்வத்தை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவ வேண்டும்'' என்கிற கருத்தை கூறும் குறள்.
"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீர் துடைத்து"(குறள் : 231)
ஆசிரியர் ,'பெண்களை காம கண் கொண்டு பார்க்க கூடாது என்று விவிலியம் சொன்னதை அடி யொற்றி வள்ளுவர் படைத்த குறள் ஒன்றும் இருக்கிறது" என்பதை அடையாளம் காட்டி நம்மை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறார். இதோ,
'தகையணங் குறுத்தல் கன்னிப் பெண்ணை உற்று நோக்காதே தடுமாறி அவளால் தண்டனைக்கு வுள்ளாவாய்"
என்கிறது விவிலியம்
குறள் என்ன சொல்கிறது .
குறளின் பொருள் நேரில் பார்ப்போரின் உயிரை குடிக்கும் பேரழகு கொண்டவள் தன் கண்களால் போர் செய்கிறார்.
ஆக, அய்யன் வள்ளுவர் வரிகளும், விவிலிய ஆசிரியர் சொற்களும் விரிந்து விளக்குகின்றது.
இப்படி விவிலிய நூலும் வள்ளுவர் குறளும் ஒத்துப்போவதை சிலவற்றையே சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர்,
"இதைவிட அது பெரிது அதை விட இது பெரிது" என்று பட்டிமன்றப் போர் தொடுக்காமல் அந்தந்த காலகட்டங்களில் இப்படி இப்படி கருத்துக்கள் படைக்கப்பட்டன என்று பரிமாறி இருப்பது நாம் தெரிந்து கொள்ளவும், தெரிந்து செயல்படவும், தவிர வேறொன்றும் அல்ல. ஏற்கனவே பற்றிய குறிப்புகள் போல் இதிலும் ஒப்புமை என விவிலியத்தையும் குறளையும் தேடி சுட்டிக்காட்டியது ஒரு சிறப்பான முயற்சியே ஆகும்.
மத்திய ஆசியாவில் உலகிலுள்ள பெரும்பான்மை கிறிஸ்த்துவர் நம்பிக்கைப் படி யூதக் குலத்தில் பிறந்து இன்று உலகெல்லாம் பரந்துப் பட்டு இருக்கும் கிறிஸ்த்துவ மதத்தின் மூல கர்த்தாவான இயேசு கிறிஸ்து ஒரு தமிழரே என்பதிலும், இயேசு தன் இளமையில் தன்னிலும் 31 ஆண்டுகள் மூத்தவரும், தமிழினத்தின் தலை நிமிர்வுக்குக் காரணமான உலகப் பொது மறையை காத்தவருமான திருவள்ளுவரைச் சந்தித்து, உலக மாந்தரின் இல்லறவியலில் அவர்கள் அடையும் இன்னலுகளுக்கெல்லாம் காரணமான அறன் இன்மை, இல்வாழ்வின் நெறியின்மை, அன்பின்மை, செய் நன்றியின்மை, நடு நிலையின்மை, பொறுமையின்மை, ஈகையின்மை அருளின்மை, அழுக்காறு, பிறன் பொருளின் பால் பேரவா,கூடாவொழுக்கம், பொய்மை, கோபம், பிறர்க்கு இன்னல் விளைவித்தல் ஆகிய வாழ்வியல் தீமைகளை ஒழித்து வாழ்தல் குறித்து பலவாறு விவாதித்து, மனவொருங்கை எட்டியிருப்பர் என்பதில் உறுதியான எண்ணம் அ.பிரான்சிஸ், எம்.ஏ., அவர்கள் படைப்பான 'விவிலியமும் வள்ளுவமும்' என்ற இந்நூலில் விவிலியத்தில் இயேசுபிரான் இச்சமுதாயத்திற்கு கூறியிருக்கும் வாழ்வியல் நெறி முறைகளுக்கும், உலகெல்லாம் வாழும் இம்மாந்த இனத்திற்குப் பொதுமறை காத்த உலகின் முதல் புரட்சியாளரான திருவள்ளுவர் கூறியிருக்கும் குறட்பாக்களுக்கும் இடையிலான ஒப்புவுமையை ஆய்வு செய்ய முனைந்ததில் எவ்வித வியப்பிற்கும் இடமில்லை எனலாம்.
 
தமிழ் மொழியின், இனத்தின் உலகெல்லாம் உள்ள மொழிகளுடனும், இனங்களுடனும் உள்ள தொடர்புகளை முன்னிலைப் படுத்தியுள்ள இவர் அதன் பின் இறைவன் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இறைவனிடம் காட்டும் பக்தி நிலையையும், மக்கட் பேற்றையும், அடக்கமுடைமையையும் பற்றிய கருத்துக் கோளில் வள்ளுவம் இயைந்து வருவதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
அடுத்து வள்ளுவம் கூறும் வாழ்வியல் தத்துவங்களான வலியறிதல், புறங்கூறாமை, நட்பு ஆகிய நிலைகளில் விவிலியத்தின் ஒத்த நிலைப் பாட்டை அரசியலாளர்கள் ஆளுமை எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.
 
மேலும் பெரியாரைத் துணைக் கோடல், ஈகை ஆகிய கருத்துகளில் விவிலியமும், வள்ளுவமும் ஒத்திருப்பதைத் திராவிட இயக்கத் தலைமைகளான தந்தை பெரியார், சர்.தியாகராயர் மற்றும் எம்.எசி. இராசா ஆகியோர் தொடர்புடைய தமிழின மேம்பாட்டு முனைவுகளை விளக்குகின்றார்.
சொல்வன்மை, கல்லாமை, புறங்கூறாமை, நிலையாமை,
 
கூடாநட்பு, வாழ்க்கைத் துணை ஆகியவைக் குறித்து வள்ளுவத்திலும், விவிலியத்திலும் காணப்படும் ஒத்த கருத்துகளைப் பல ஆளுமைகளின் வாழ்வியல் நிகச்சிகளுடன் தொடர்பு படுத்திக்காட்டுகின்றார்.
 
மேலும் விருந்தோம்பல், வரைவின் மகளிர், தீவினை அச்சம், நடுவு நிலைமை, செங்கோன்மை, நிலையாமை, வாய்மை என பல்வேறு வாழ்வியல் நெறிகளில் மேலை நாட்டு விவிலியத்திற்கும், கீழை நாட்டின் குறளுக்கும் இருக்கும் இணக்கமான சிந்தனை ஒற்றுமைகள் பல்வேறு உலகத் தலைவர்கள் அறிஞர்கள் குறித்தான மேற் கோள்களுடன் எடுத்துக் காட்டுகிறார்.
 
ஒரு நல்ல திறனாய்வு புத்தகம் படித்த மனத் தெளிவை அளிக்கிறது.
 
திரு.நா.கருணாமூர்த்தி (முகநூல் பதிவு)
 
 
by Swathi   on 04 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.