LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-62

4.062.திருவாலவாய் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. 
தேவியார் - மீனாட்சியம்மை. 
599 வேதியா வேத கீதா
விண்ணவ ரண்ணாவென்றென்
றோதியே மலர்கள் தூவி
யொருங்கிநின்கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியஞ்சூடும்
ஆதியே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.1
மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே! பார்வதிபாகனே! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே! திருஆலவாயிலுள்ள அப்பனே! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக.
600 நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞானமூர்த்தீ
என்பொனே யீசா வென்றென்
றேத்திநா னேசற்றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப்பிறவா வண்ணம்
அன்பனே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.2
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நான்கு முகங்களை உடையவனே! தலைவனே! ஞான வடிவினனே! என் பொன் போன்றவனே! எல்லோரையும் ஆள்பவனே! அன்பனே! ஆலவாயில் அப்பனே! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி, பொறிபுலன்களின் வழியேசென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக.
601 ஒருமருந் தாகி யுள்ளா
யும்பரோடுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமு தின்சுவையாய்க்
கருமருந் தாகி யுள்ளா
யாளும்வல்வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.3
ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே! அருள் செய்வாயாக.
602 செய்யநின் கமல பாதஞ்
சேருமா தேவர்தேவே
மையணி கண்டத் தானே
மான்மறிமழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங்
கற்றறிவிலாத நாயேன்
ஐயனே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.4
தேவர்தேவனே! நீலகண்டனே! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
603 வெண்டலை கையி லேந்தி
மிகவுமூர் பலி கொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லி
லுண்டது நஞ்சசுதன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனே னுளம தார
அண்டனே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.5
உலகத் தலைவனே! ஆலவாய் அப்பனே! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப் படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன். அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக.
604 எஞ்சலில் புகலி தென்றென்
றேத்திநானேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி
மலரடி காணும்வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமேநாயேற்
கஞ்சலென் றால வாயில்
அப்பனே யருள்செ யாயே.
4.062.6
விடத்தைக் கழுத்தில் அடக்கிய, சிவம் என்ற சொற் பொருளானவனே! ஆலவாயில் அப்பனே! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக.
605 வழுவிலா துன்னை வாழ்த்தி
வழிபடுந் தொண்டனேனுன்
செழுமலர்ப் பாதங் காணத்
தெண்டிரை நஞ்சமுண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தாயுள்ள
அழகனே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.7
தௌளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே! அழகிய வில்லை ஏந்தியவனே! கூத்தனே! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னை வாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக.
606 நறுமலர் நீருங் கொண்டு
நாடொறு மேத்திவாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடிசேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை யங்கமாறும்
அறிவனே யால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.8
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே! ஆலவாயில் அப்பனே! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக.
607 நலந்திகழ் வாயி னூலாற்
சருகிலைப் பந்தர்செய்த
சிலந்தியை யரச தாள
வருளினா யென்றுதிண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான்காண்ப தாக
அலந்தன னால வாயில்
அப்பனேயருள்செ யாயே.
4.062.9
நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன்வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள்செய்வாயாக.
608 பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற்புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்
பிதற்றிநா னிருக்கமாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக்கோன்வந்
தெடுத்தலுமிருபது தோள்
அடர்த்தனே யால வாயி
லப்பனேயருள்செ யாயே.
4.062.10
திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன். கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே! அடியேனுக்கு அருள்செய்வாயாக.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.