LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-76

2.076.திருஅகத்தியான்பள்ளி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அகத்தீசுவரர். 
தேவியார் - மங்கைநாயகியம்மை. 
2291 வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் 
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி 
ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப் 
பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே. 2.076. 1
தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை. 
2292 துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான் 
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர் 
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை 
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே. 2.076. 2
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும். 
2293 உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங் 
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் 
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே. 2.076. 3
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத் திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை. 
2294 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் 
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை 
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 2.076. 4
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான் மகளை. அத் தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 
2295 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை 
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் 
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே. 2.076. 5
போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது புலித்தோல். ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 
2296 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் 
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை 
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே. 2.076. 6
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 
2297 ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் 
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் 
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை 
நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே. 2.076. 7
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண்பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும். 
2298 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம் 
ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம் 
அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான் 
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 2.076. 8
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான். 
2299 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் 
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் 
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை 
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 2.076. 9
தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும். 
2300 செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி 
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி 
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச் 
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 2.076. 10
சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும். 
2301 ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் 
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள் 
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய 
மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே. 2.076. 11
உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய இத்தமிழ்மாலையை ஓத வல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும். 
திருச்சிற்றம்பலம்

2.076.திருஅகத்தியான்பள்ளி 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அகத்தீசுவரர். தேவியார் - மங்கைநாயகியம்மை. 

2291 வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே. 2.076. 1
தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை. 

2292 துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான் மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர் அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே. 2.076. 2
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும். 

2293 உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங் கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே. 2.076. 3
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத் திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை. 

2294 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 2.076. 4
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான் மகளை. அத் தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 

2295 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே. 2.076. 5
போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது புலித்தோல். ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 

2296 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே. 2.076. 6
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான். 

2297 ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே. 2.076. 7
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண்பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும். 

2298 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம் ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம் அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 2.076. 8
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான். 

2299 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 2.076. 9
தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும். 

2300 செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச் சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 2.076. 10
சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும். 

2301 ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள் சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே. 2.076. 11
உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய இத்தமிழ்மாலையை ஓத வல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.