LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-105

4.105.திருவதிகைவீரட்டானம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - திருவதிகைநாயகி. 
1002 மாசிலொள் வாள்போன் மறியு மணிநீர்த்
திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை யன்ன
முறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண்
பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை
வீரட்டமே. 
4.105.1
குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும், பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது.
1003 பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை
நீர்ப்படுகர்
அங்காற் குவளைமே லாவி யுயிர்ப்ப
வருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி
லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீர னருள்வைத்த
வீரட்டமே. 
4.105.2
விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம், பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச, அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது.
1004 அம்மலர்க் கண்ணிய ரஞ்சனஞ் செந்துவர்
வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை
யெடுத்தவர்கள்
தம்மருங் குற்கிரங் கார்தடந் தோண்மெலி
யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை
வீரட்டமே. 
4.105.3
அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய், தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம்.
1005 மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை
வேண்டுகின்றதி
யானுடைச் சில்குறை யொன்றுள தானறுந்
தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத்
திரைதவழும்
கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங்
குறிக்கொண்மினே. 
4.105.4
மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது. குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும்.
1006 ஆரட்ட தேனு மிரந்துண் டகமக
வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி
நீர்பரவைச்
சூரட்ட வேலவன் றாதையைச் சூழ்வய
லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ
வேதனையே. 
4.105.5
விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில், வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது.
1007 படர்பொற் சடையும் பகுவா யரவும்
பனிமதியும்
சுடலைப் பொடியுமெல் லாமுள வேயவர்
தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட்
டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர்
நாமங்களே. 
4.105.6
அவர் தௌந்த நீரை உடைய கெடில நதியில் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர். பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும், பிளந்த வாயை உடைய பாம்பும், குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன. அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும். அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே.
1008 காளங் கடந்ததொர் கண்டத்த ராகிக்கண்
ணார்கெடில
நாளங் கடிக்கொர் நகரமு மாதிற்கு
நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டும் யாழ்கொண்டுந்
தாமங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர்
வீரட்டரே. 
4.105.7
பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி, வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமான். நன்கு பொருந்திய தாளங்கள், குழல், யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி, காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.