LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-77

2.077.திருஅறையணிநல்லூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர். 
தேவியார் - அருள்நாயகியம்மை. 
2302 பீடினாற்பெரி யோர்களும் 
பேதைமைகெடத் தீதிலா 
வீடினாலுயர்ந் தார்களும் 
வீடிலாரிள வெண்மதி 
சூடினார்மறை பாடினார் 
சுடலைநீறணிந் தாரழல் 
ஆடினாரறை யணிநல்லூர் 
அங்கையாற்றொழு வார்களே.
2.077. 1
அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர். 
2303 இலையினார்சூல மேறுகந் 
தேறியேயிமை யோர்தொழ 
நிலையினாலொரு காலுறச் 
சிலையினான்மதி லெய்தவன் 
அலையினார் புனல்சூடிய 
அண்ணலாரறை யணிநல்லூர் 
தலையினாற்றொழு தோங்குவார் 
நீங்குவார்தடு மாற்றமே.
2.077. 2
இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர். 
2304 என்பினார்கனல் சூலத்தார் 
இலங்குமாமதி யுச்சியான் 
பின்பினாற்பிறங் குஞ்சடைப் 
பிஞ்ஞகன்பிறப் பிலியென்று 
முன்பினார்மூவர் தாந்தொழு 
முக்கண்மூர்த்திதன் றாள்களுக் 
கன்பினாரறை யணிநல்லூர் 
அங்கையாற்றொழு வார்களே.
2.077.3
என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர். 
2305 விரவுநீறுபொன் மார்பினில் 
விளங்கப்பூசிய வேதியன் 
உரவுநஞ்சமு தாகவுண் 
டுறுதிபேணுவ தன்றியும் 
அரவுநீள்சடைக் கண்ணியார் 
அண்ணலாரறை யணிநல்லூர் 
பரவுவார்பழி நீங்கிடப் 
பறையுந்தாஞ்செய்த பாவமே.
2.077. 4
அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப் பெறுவர். 
2306 தீயினார்திகழ் மேனியாய் 
தேவர்தாந்தொழு தேவன்நீ 
ஆயினாய்கொன்றை யாயன 
லங்கையாயறை யணிநல்லூர் 
மேயினார்தம தொல்வினை 
வீட்டினாய்வெய்ய காலனைப் 
பாயினாயதிர் கழலினாய் 
பரமனேயடி பணிவனே.
2.077. 5
தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன். 
2307 விரையினார்கொன்றை சூடியும் 
வேகநாகமும் வீக்கிய 
அரையினாரறை யணிநல்லூர் 
அண்ணலாரழ காயதோர் 
நரையினார்விடை யூர்தியார் 
நக்கனார்நறும் போதுசேர் 
உரையினாலுயர்ந் தார்களு 
முரையினாலுயர்ந் தார்களே.
2.077. 6
மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர். 
2308 வீரமாகிய வேதியர் 
வேகமாகளி யானையின் 
ஈரமாகிய வுரிவைபோர்த் 
தரிவைமேற்சென்ற வெம்மிறை 
ஆரமாகிய பாம்பினார் 
அண்ணலாரறை யணிநல்லூர் 
வாரமாய்நினைப் பார்கள்தம் 
வல்வினையவை மாயுமே.
2.077. 7
ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார் பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும். 
2309 தக்கனார்பெரு வேள்வியைத் 
தகர்த்துகந்தவன் றாழ்சடை 
முக்கணான்மறை பாடிய 
முறைமையான்முனி வர்தொழ 
அக்கினோடெழி லாமைபூண் 
அண்ணலாரறை யணிநல்லூர் 
நக்கனாரவர் சார்வலால் 
நல்குசார்விலோம் நாங்களே.
2.077. 8
தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம். 
2310 வெய்யநோயிலர் தீதிலர் 
வெறியராய்ப்பிறர் பின்செலார் 
செய்வதேயலங் காரமா 
மிவையிவைதேறி யின்புறில் 
ஐயமேற்றுணுந் தொழிலரா 
மண்ணலாரறை யணிநல்லூர்ச் 
சைவனாரவர் சார்வலால் 
யாதுஞ்சார்விலோம் நாங்களே.
2.077. 9
வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தௌந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக. 
2311 வாக்கியஞ்சொல்லி யாரொடும் 
 
வகையலாவகை செய்யன்மின் 
சாக்கியஞ்சம ணென்றிவை 
சாரேலும்மர ணம்பொடி 
ஆக்கியம்மழு வாட்படை 
யண்ணலாரறை யணிநல்லூர்ப் 
பாக்கியங்குறை யுடையீரேற் 
பறையுமாஞ்செய்த பாவமே.
2.077. 10
நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர். 
2312 கழியுலாங்கடற் கானல்சூழ் 
கழுமலம்அமர் தொல்பதிப் 
பழியிலாமறை ஞானசம் 
பந்தனல்லதோர் பண்பினார் 
மொழியினாலறை யணிநல்லூர் 
 
முக்கண்மூர்த்திதன் றாள்தொழக் 
கெழுவினாரவர் தம்மொடுங் 
கேடில்வாழ்பதி பெறுவரே.
2.077. 11
உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

2.077.திருஅறையணிநல்லூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர். தேவியார் - அருள்நாயகியம்மை. 

2302 பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.2.077. 1
அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர். 

2303 இலையினார்சூல மேறுகந் தேறியேயிமை யோர்தொழ நிலையினாலொரு காலுறச் சிலையினான்மதி லெய்தவன் அலையினார் புனல்சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.2.077. 2
இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர். 

2304 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக் கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.2.077.3
என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர். 

2305 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.2.077. 4
அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப் பெறுவர். 

2306 தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர் மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.2.077. 5
தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன். 

2307 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் உரையினாலுயர்ந் தார்களு முரையினாலுயர்ந் தார்களே.2.077. 6
மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர். 

2308 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற வெம்மிறை ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.2.077. 7
ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார் பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும். 

2309 தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் றாழ்சடை முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ அக்கினோடெழி லாமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.2.077. 8
தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம். 

2310 வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் செய்வதேயலங் காரமா மிவையிவைதேறி யின்புறில் ஐயமேற்றுணுந் தொழிலரா மண்ணலாரறை யணிநல்லூர்ச் சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.2.077. 9
வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தௌந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக. 

2311 வாக்கியஞ்சொல்லி யாரொடும்  வகையலாவகை செய்யன்மின் சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி ஆக்கியம்மழு வாட்படை யண்ணலாரறை யணிநல்லூர்ப் பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.2.077. 10
நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர். 

2312 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார் மொழியினாலறை யணிநல்லூர்  முக்கண்மூர்த்திதன் றாள்தொழக் கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.2.077. 11
உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.