LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-114

4.114.தனி
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம் 
1060 பவளத் தடவரை போலுந்திண் டோள்களத்
தோண்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை
யச்சடைமேல்
பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந்
நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை சூடும்
பனிமலரே. 
4.114.1
எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.
1061 முருகார் நறுமல ரிண்டை தழுவிவண்
டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி
மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா னுடைய
திதுபிரிந்தால்
தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர்
தலைமறைவே.
4.114.2
நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக.
1062 மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக்
கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை
யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி மாறிய
தில்லையப்பால்
தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த
திரிபுரமே.
4.114.3
என்னும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக்கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.
1063 பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன
விம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந்
தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த்
தடிவணங்கும்
நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட
நன்னெஞ்சமே. 
4.114.4
வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?
1064 அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர்
செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும்
பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச்
சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய
நம்பனையே. 
4.114.5
இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. 'ஐயாறமர்ந்து வந்தென்' 'ஆறமர் செஞ்சடையான்' என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. 'சிந்தி' என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. 'இளங்கண்ணி' எனல் பொருந்தாது. 
1065 உன்மத் தகமலர் சூடி யுலகந்
தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும்
பலிதிரிவான்
என்மத் தகத்தே யிரவும் பகலும்
பிரிவரியான்
தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய
சங்கரனே.
4.114.6
தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப்பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.
1066 அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க
ளையமுணல்
வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு
வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை யாமறை
தேடுமெந்தாய்
உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க
ளுத்தமனே.
4.114.7
விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.
1067 துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந்
தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ
னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப்
பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து
மறுகிடுமே.
4.114.8
பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது.
1068 வேரி வளாய விரைமலர்க் கொன்றை
புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை புகுந்தான்
றிருமுடிமேல்
வாரி வளாய வருபுனற் கங்கை
சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது போலு
மிளம்பிறையே. 
4.114.9
தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது.
1069 கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட
னீர்சுருங்கிப்
பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும்
பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை
யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப்
புகலிடத்தே. 
4.114.10
நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.
1070 மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று
கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி
பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி
மறிந்தசிந்தைக்
கால னறிந்தா னறிதற் கரியான்
கழலடியே. 
4.114.11
பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமானுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திருமால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடிகளைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.
திருச்சிற்றம்பலம்
நான்காம் திருமுறை முற்றும்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.