LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-44

4.044.திருஏகம்பம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர். 
தேவியார் - காமாட்சியம்மை. 
434 நம்பனை நகர மூன்று
மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை
யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட்
செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்
சிந்தியா வெழுகின் றேனே.
4.044.1
நம்மால் விரும்பப்படுபவனாய், மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய், அமுதனாய் பேரின்ப பெருக்காறாய், அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய், ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன். (ஆறு - நெறி எனலுமாம்.)
435 ஒருமுழ முள்ள குட்ட
மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல
மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்
கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக்
கச்சியே கம்ப னீரே.
4.044.2
கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன்.
436 மலையினார் மகளோர் பாக
மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினான் மதில்கண் மூன்றுந்
தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூல மேந்தி
யேகம்ப மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்
தலைவர்க்குந் தலைவர் தாமே.
4.044.3
பார்வதி பாகரான இளையராய், ஒற்றைமழுப்படையை ஏந்தியவராய், வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய், இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும்தலைவராகும் உயர் நிலையினராவர்.
437 பூத்தபொற் கொன்றை மாலை
புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்
திருமுடி திகழ வைத்து
ஏத்துவா ரேத்த நின்ற
வேகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்
மால்கொடு மயங்கி னேனே.
4.044.4
பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய், பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து, தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய், இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன்.
438 மையினார் மலர்நெ டுங்கண்
மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபால மேந்திக்
கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோ ரேன மோட்டி
யேகம்ப மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்
கடுவினை களைய லாமே.
4.044.5
மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய், கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய், தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி, ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும்.
439 தருவினை மருவுங் கங்கை
தங்கிய சடைய னெங்கள்
அருவினை யகல நல்கு
மண்ணலை யமரர் போற்றும்
திருவினைத் திருவே கம்பஞ்
செப்பிட வுறைய வல்ல
உருவினை யுருகி யாங்கே
யுள்ளத்தா லுகக்கின் றேனே.
4.044.6
சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய், எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய், தேவர்கள் போற்றும் செல்வமாய், திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய், உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன்.
440 கொண்டதோர் கோல மாகிக்
கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகி
யுலகெலா முய்ய வுண்டான்
எண்டிசை யோரு மேத்த
நின்றவே கம்பன் றன்னைக்
கண்டுநா னடிமை செய்வான்
கருதியே திரிகின் றேனே.
4.044.7
தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய், உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன்.
441 படமுடை யரவி னோடு
பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக்
கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு
ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண
ஞாலந்தா னுய்ந்த வாறே.
4.044.8
படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி, மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு, செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினையிலிருந்து பிழைத்தது. இது வியக்கத்தக்கது.
442 பொன்றிகழ் கொன்றை மாலை
பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ள
மௌளவே நவில நின்று
குன்றியி லடுத்த மேனிக்
குவளையங் கண்ட ரெம்மை
இன்றுயில் போது கண்டா
ரினியரே கம்ப னாரே. 
4.044.9
குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார். அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார்.
443 துருத்தியார் பழனத் துள்ளார்
தொண்டர்கள் பலரு மேத்த
அருத்தியா லன்பு செய்வா
ரவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை யிசைய வேறி
யேகம்ப மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்
வல்வினை மாயு மன்றே.
4.044.10
அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத்துருத்தி, திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய், விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு, உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும்.
திருச்சிற்றம்பலம்

4.044.திருஏகம்பம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர். 

தேவியார் - காமாட்சியம்மை. 

434 நம்பனை நகர மூன்று

மெரியுண வெருவ நோக்கும்

அம்பனை யமுதை யாற்றை

யணிபொழிற் கச்சி யுள்ளே

கம்பனைக் கதிர்வெண் டிங்கட்

செஞ்சடைக் கடவு டன்னைச்

செம்பொனைப் பவளத் தூணைச்

சிந்தியா வெழுகின் றேனே.(4.044.1)

  நம்மால் விரும்பப்படுபவனாய், மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய், அமுதனாய் பேரின்ப பெருக்காறாய், அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய், ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன். (ஆறு - நெறி எனலுமாம்.)

435 ஒருமுழ முள்ள குட்ட

மொன்பது துளையு டைத்தாய்

அரைமுழ மதன கல

மதனில்வாழ் முதலை யைந்து

பெருமுழை வாய்தல் பற்றிக்

கிடந்துநான் பிதற்று கின்றேன்

கருமுகில் தவழு மாடக்

கச்சியே கம்ப னீரே.(4.044.2)

  கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன்.

436 மலையினார் மகளோர் பாக

மைந்தனார் மழுவொன் றேந்திச்

சிலையினான் மதில்கண் மூன்றுந்

தீயெழச் செற்ற செல்வர்

இலையினார் சூல மேந்தி

யேகம்ப மேவி னாரைத்

தலையினால் வணங்க வல்லார்

தலைவர்க்குந் தலைவர் தாமே.(4.044.3)

  பார்வதி பாகரான இளையராய், ஒற்றைமழுப்படையை ஏந்தியவராய், வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய், இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும்தலைவராகும் உயர் நிலையினராவர்.

437 பூத்தபொற் கொன்றை மாலை

புரிசடைக் கணிந்த செல்வர்

தீர்த்தமாங் கங்கை யாளைத்

திருமுடி திகழ வைத்து

ஏத்துவா ரேத்த நின்ற

வேகம்ப மேவி னாரை

வாழ்த்துமா றறிய மாட்டேன்

மால்கொடு மயங்கி னேனே.(4.044.4)

  பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய், பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து, தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய், இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன்.

438 மையினார் மலர்நெ டுங்கண்

மங்கையோர் பங்க ராகிக்

கையிலோர் கபால மேந்திக்

கடைதொறும் பலிகொள் வார்தாம்

எய்வதோ ரேன மோட்டி

யேகம்ப மேவி னாரைக்

கையினாற் றொழவல் லார்க்குக்

கடுவினை களைய லாமே.(4.044.5)

  மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய், கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய், தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி, ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும்.

439 தருவினை மருவுங் கங்கை

தங்கிய சடைய னெங்கள்

அருவினை யகல நல்கு

மண்ணலை யமரர் போற்றும்

திருவினைத் திருவே கம்பஞ்

செப்பிட வுறைய வல்ல

உருவினை யுருகி யாங்கே

யுள்ளத்தா லுகக்கின் றேனே.(4.044.6)

  சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய், எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய், தேவர்கள் போற்றும் செல்வமாய், திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய், உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன்.

440 கொண்டதோர் கோல மாகிக்

கோலக்கா வுடைய கூத்தன்

உண்டதோர் நஞ்ச மாகி

யுலகெலா முய்ய வுண்டான்

எண்டிசை யோரு மேத்த

நின்றவே கம்பன் றன்னைக்

கண்டுநா னடிமை செய்வான்

கருதியே திரிகின் றேனே.(4.044.7)

  தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய், உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன்.

441 படமுடை யரவி னோடு

பனிமதி யதனைச் சூடிக்

கடமுடை யுரிவை மூடிக்

கண்டவ ரஞ்ச வம்ம

இடமுடைக் கச்சி தன்னு

ளேகம்ப மேவி னான்றன்

நடமுடை யாடல் காண

ஞாலந்தா னுய்ந்த வாறே.(4.044.8)

  படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி, மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு, செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினையிலிருந்து பிழைத்தது. இது வியக்கத்தக்கது.

442 பொன்றிகழ் கொன்றை மாலை

பொருந்திய நெடுந்தண் மார்பர்

நன்றியிற் புகுந்தெ னுள்ள

மௌளவே நவில நின்று

குன்றியி லடுத்த மேனிக்

குவளையங் கண்ட ரெம்மை

இன்றுயில் போது கண்டா

ரினியரே கம்ப னாரே. (4.044.9)

  குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார். அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார்.

443 துருத்தியார் பழனத் துள்ளார்

தொண்டர்கள் பலரு மேத்த

அருத்தியா லன்பு செய்வா

ரவரவர்க் கருள்கள் செய்தே

எருத்தினை யிசைய வேறி

யேகம்ப மேவி னார்க்கு

வருத்திநின் றடிமை செய்வார்

வல்வினை மாயு மன்றே.(4.044.10)

  அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத்துருத்தி, திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய், விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு, உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.