LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-98

4.098.திருநல்லூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர். 
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 
943 அட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை
தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும்
வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங்
கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங்
கொண்டவரே. 
4.098.1
ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய், நிலையாக நடனமாடும் தலைவராய், நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் 'உணவுக்குரிய பிச்சையிடுமின்' என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ?
944 பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக்
கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல்
லூரகத்தே
பண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி
நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு
கறைக்கண்டரே. 
4.098.2
நீலகண்டப் பெருமானார், பெண்கள் ஆசைப்படும் படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப்பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கிநின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு.
945 படவே ரரவல்குற் பாவைநல் லீர்பக
லேயொருவர்
இடுவா ரிடைப்பலி கொள்பவா போலவந்
தில்புகுந்து
நடவா ரடிக ணடம்பயின் றாடிய
கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம்
வாழ்பதியே.
4.098.3
படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல்குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார். அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும்.
946 செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ்
முத்தனைய
நஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை
நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு
தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல காலமும்
நின்றனனே.
4.098.4
சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும், நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான்.
947 வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண்
ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாடல றாதநல்
லூரகத்தே
திண்னில யங்கொண்டு நின்றான் றிரிபுர
மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற்
சேவடியே.
4.098.5
வெண்பிறை சூடி உலகு விளங்கு நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல் கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன. 
948 தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே
சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர்
துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய
வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர்
காண்பதற்கே.
4.098.6
எல்லார் உள்ளத்தும் தௌவு ஏற்படச் சிவபெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய், தம் பொருத்தமல்லாத புத்தியினால், ஆற்றில் இழந்த பொருளைக்குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல, எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர்.
949 நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல்
லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக்
கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர்
வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ்
வகலிடமே. 
4.098.7
காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சுனையாக அதனை மறைத்து, ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள்.
950 950,அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி
யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை யானுநல்
லூரகத்தே
பறைமல்கு பாடல னாடல னாகிப்
பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய
பிஞ்ஞகனே. 
4.098.8
பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய, தலைக்கோலத்தை உடைய பெருமான், ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று, அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான்.
951 மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த
மருவியெங்கும்
துன்னிய தொண்டர்க ளின்னிசை பாடித்
தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய
காதலரை
அன்னிய ரற்றவ ரங்கண னேயரு
ணல்கென்பரே.
4.098.9
நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க, எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ, நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு, பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர். 
952 திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு
நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங்
கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை
யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை
யுள்குதுமே.
4.098.10
திருமகள் தங்கும் தாமரை, சிறப்பு வளரும் செங்கழுநீர், பறித்துச் சூடும் நெய்தல், நிறம் பொருந்திய கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி, நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக.
953 செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில்
சிவபுரமும்
வல்லேன் புகவு மதில்சூ ழிலங்கையர்
காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச் செற்ற
கழலடியான்
நல்லூ ரிருந்த பிரானல்ல னோநம்மை
யாள்பவனே. 
4.098.11
இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புக வல்லேன் அடியேன். மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதியுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடி களை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான்.

950 அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.