LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-78

2.078.திருவிளநகர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர். 
தேவியார் - தோழியம்மை. 
2313 ஒளிரிளம்பிறை சென்னிமேல் 
உடையர்கோவண வாடையர் 
குளிரிளம்மழை தவழ்பொழிற் 
கோலநீர்மல்கு காவிரி 
நளிரிளம்புனல் வார்துறை 
நங்கைகங்கையை நண்ணினார் 
மிளிரிளம்பொறி யரவினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 1
விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும். 
2314 அக்கரவ்வணி கலனென 
அதனொடார்த்ததொ ராமைபூண் 
டுக்கவர்சுடு நீறணிந் 
தொளிமல்குபுனற் காவிரிப் 
புக்கவர்துயர் கெடுகெனப் 
பூசுவெண்பொடி மேவிய 
மிக்கவர்வழி பாடுசெய் 
விளநகரவர் மேயதே.
2.078. 2
எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும். 
2315 வாளிசேரடங் கார்மதி 
தொலையநூறிய வம்பின்வேய்த் 
தோளிபாகம் அமர்ந்தவர் 
உயர்ந்ததொல்கட னஞ்சுடன் 
காளமல்கிய கண்டத்தர் 
கதிர்விரிசுடர் முடியினர் 
மீளியேறுகந் தேறினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 3
அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல்போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர். 
2316 கால்விளங்கெரி கழலினார் 
கையிலங்கிய வேலினார் 
நூல்விளங்கிய மார்பினார் 
நோயிலார்பிறப் பும்மிலார் 
மால்விளங்கொளி மல்கிய 
மாசிலாமணி மிடறினார் 
மேல்விளங்குவெண் பிறையினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 4
காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர். 
2317 பன்னினார்மறை பாடினார் 
பாயசீர்ப்பழங் காவிரித் 
துன்னுதண்டுறை முன்னினார் 
தூநெறிபெறு வாரெனச் 
சென்னிதிங்களைப் பொங்கராக் 
கங்கையோடுடன் சேர்த்தினார் 
மின்னுபொன்புரி நூலினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 5
வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித் தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும். 
2318 தேவரும்மம ரர்களுந் 
திசைகண்மேலுள தெய்வமும் 
யாவரும்மறி யாததோ 
ரமைதியாற்றழ லுருவினார் 
மூவரும்மவ ரென்னவும் 
முதல்வரும்மிவ ரென்னவும் 
மேவரும்பொரு ளாயினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 6
தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னுமாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும். 
2319 சொற்றருமறை பாடினார் 
சுடர்விடுஞ்சடை முடியினார் 
கற்றருவடங் கையினார் 
காவிரித்துறை காட்டினார் 
மற்றருதிர டோளினார் 
மாசில்வெண்பொடிப் பூசினார் 
விற்றருமணி மிடறினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 7
எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும். 
2320 படர்தருஞ்சடை முடியினார் 
பைங்கழலடி பரவுவார் 
அடர்தரும்பிணி கெடுகென 
அருளுவார்அர வரையினார் 
விடர்தரும்மணி மிடறினார் 
மின்னுபொன்புரி நூலினார் 
மிடறரும்படை மழுவினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 8
பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன் போன்ற முப்புரி நூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும். 
2321 கையிலங்கிய வேலினார் 
தோலினார்கரி காலினார் 
பையிலங்கர வல்குலாள் 
பாகமாகிய பரமனார் 
மையிலங்கொளி மல்கிய 
மாசிலாமணி மிடறினார் 
மெய்யிலங்குவெண் ணீற்றினார் 
மேயதுவிள நகரதே.
2.078. 9
கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவரமுற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர்கரிய ஒளி நிறைந்த குற்றமற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும். 
2322 உள்ளதன்றனைக் காண்பன்கீ 
ழென்றமாமணி வண்ணனும் 
உள்ளதன்றனைக் காண்பன்மே 
லென்றமாமலர் அண்ணலும் 
உள்ளதன்றனைக் கண்டிலார் 
ஒளியார் தருஞ்சடை முடியின்மேல் 
உள்ளதன்றனைக் கண்டிலா 
வொளியார் விளநகர் மேயதே.
2.078. 10
கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார். 
2323 மென்சிறைவண் டியாழ்முரல் 
விளநகர்த்துறை மேவிய 
நன்பிறைநுத லண்ணலைச் 
சண்பைஞானசம் பந்தன்சீர் 
இன்புறுதமி ழாற்சொன்ன 
ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் 
துன்புறுதுய ரம்மிலர் 
தூநெறிபெறு வார்களே.
2.078. 11
மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறைசூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.078.திருவிளநகர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர். தேவியார் - தோழியம்மை. 

2313 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே.2.078. 1
விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும். 

2314 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததொ ராமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.2.078. 2
எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும். 

2315 வாளிசேரடங் கார்மதி தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கட னஞ்சுடன் காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.2.078. 3
அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல்போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர். 

2316 கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.2.078. 4
காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர். 

2317 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.2.078. 5
வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித் தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும். 

2318 தேவரும்மம ரர்களுந் திசைகண்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோ ரமைதியாற்றழ லுருவினார் மூவரும்மவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.2.078. 6
தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னுமாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும். 

2319 சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.2.078. 7
எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும். 

2320 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.2.078. 8
பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன் போன்ற முப்புரி நூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும். 

2321 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.2.078. 9
கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவரமுற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர்கரிய ஒளி நிறைந்த குற்றமற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும். 

2322 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.2.078. 10
கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார். 

2323 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுத லண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுதுய ரம்மிலர் தூநெறிபெறு வார்களே.2.078. 11
மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறைசூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.