LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-42

4.042.திருத்துருத்தி 
திருநேரிசை : பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதேசுவரர். 
தேவியார் - முகிழாம்பிகையம்மை. 
414 பொருத்திய குரம்பை தன்னைப்
பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சு
ளிறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
கொருத்தியைச் சடையுள் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.1
எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா. எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள். பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே!
415 சவைதனைச் செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து
மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.2
குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள். மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே!
416 உன்னியெப் போதும் நெஞ்சு
ளொருவனை யேத்து மின்னோ
கன்னியை யொருபால் வைத்துக்
கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியி னடுவு தன்னுட்
பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.3
பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள்.
417 ஊன்றலை வலிய னாகி
யுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
தான்றலைப் பட்டு நின்ற
சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி
வானவர்க் கிறைவா வென்னும்
தோன்றலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.4
உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி, உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று, அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட'எங்கள் தலைவனே' என்ற தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே!
418 உடறனைத் கழிக்க லுற்ற
வுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிய வேண்டி
லிறைவனை யேத்து மின்னோ
கடறனி னஞ்ச முண்டு
காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.5
கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே! உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள்.
419 அள்ளலைக் கடக்க வேண்டி
லரனையே நினைமி னீர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்
புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்
காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.6
பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே, இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய், தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும், காளையை ஏறி ஊரும் பெருமானை, அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள்.
420 பாதியி லுமையா டன்னைப்
பாகமா வைத்த பண்பன்
வேதிய னென்று சொல்லி
விண்ணவர் விரும்பி யேத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.7
பார்வதிபாகன், வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க, பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே!
421 சாமனை வாழ்க்கை யான
சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்
தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்
தொன்னெறி பலவுங் காட்டும்
தூமனத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.8
பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுதுஅவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள்.
422 குண்டரே சமணர் புத்தர்
குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்
கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து
விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத்
துருத்திநான் கண்ட வாறே.
4.042.9
பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத்துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.
423 பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட
வடலரக் கன்ற னாண்மை
கண்டொத்துக் கால்வி ரலா
லூன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4.042.10
உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும், மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள்.
திருச்சிற்றம்பலம்

4.042.திருத்துருத்தி 

திருநேரிசை : பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வேதேசுவரர். 

தேவியார் - முகிழாம்பிகையம்மை. 

414 பொருத்திய குரம்பை தன்னைப்

பொருளெனக் கருத வேண்டா

இருத்தியெப் பொழுதும் நெஞ்சு

ளிறைவனை யேத்து மின்கள்

ஒருத்தியைப் பாகம் வைத்தங்

கொருத்தியைச் சடையுள் வைத்த

துருத்தியஞ் சுடரி னானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.1)

  எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா. எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள். பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே!

415 சவைதனைச் செய்து வாழ்வான்

சலத்துளே யழுந்து கின்ற

இவையொரு பொருளு மல்ல

விறைவனை யேத்து மின்னோ

அவைபுர மூன்று மெய்து

மடியவர்க் கருளிச் செய்த

சுவையினைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.2)

  குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள். மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே!

416 உன்னியெப் போதும் நெஞ்சு

ளொருவனை யேத்து மின்னோ

கன்னியை யொருபால் வைத்துக்

கங்கையைச் சடையுள் வைத்துப்

பொன்னியி னடுவு தன்னுட்

பூம்புனல் பொலிந்து தோன்றும்

துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.3)

  பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள்.

417 ஊன்றலை வலிய னாகி

யுலகத்து ளுயிர்கட் கெல்லாம்

தான்றலைப் பட்டு நின்ற

சார்கன லகத்து வீழ

வான்றலைத் தேவர் கூடி

வானவர்க் கிறைவா வென்னும்

தோன்றலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.4)

  உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி, உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று, அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட'எங்கள் தலைவனே' என்ற தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே!

418 உடறனைத் கழிக்க லுற்ற

வுலகத்து ளுயிர்கட் கெல்லாம்

இடர்தனைக் கழிய வேண்டி

லிறைவனை யேத்து மின்னோ

கடறனி னஞ்ச முண்டு

காண்பரி தாகி நின்ற

சுடர்தனைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.5)

  கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே! உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள்.

419 அள்ளலைக் கடக்க வேண்டி

லரனையே நினைமி னீர்கள்

பொள்ளலிக் காயந் தன்னுட்

புண்டரீ கத்தி ருந்த

வள்ளலை வான வர்க்குங்

காண்பரி தாகி நின்ற

துள்ளலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.6)

  பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே, இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய், தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும், காளையை ஏறி ஊரும் பெருமானை, அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள்.

420 பாதியி லுமையா டன்னைப்

பாகமா வைத்த பண்பன்

வேதிய னென்று சொல்லி

விண்ணவர் விரும்பி யேத்தச்

சாதியாஞ் சதுர்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்

சோதியைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.7)

  பார்வதிபாகன், வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க, பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே!

421 சாமனை வாழ்க்கை யான

சலத்துளே யழுந்த வேண்டா

தூமநல் லகிலுங் காட்டித்

தொழுதடி வணங்கு மின்னோ

சோமனைச் சடையுள் வைத்துத்

தொன்னெறி பலவுங் காட்டும்

தூமனத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.8)

  பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுதுஅவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள்.

422 குண்டரே சமணர் புத்தர்

குறியறி யாது நின்று

கண்டதே கருது வார்கள்

கருத்தெண்ணா தொழிமி னீர்கள்

விண்டவர் புரங்க ளெய்து

விண்ணவர்க் கருள்கள் செய்த

தொண்டர்க டுணையி னானைத்

துருத்திநான் கண்ட வாறே.(4.042.9)

  பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத்துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.

423 பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்

பிரானையே பிதற்று மின்கள்

அண்டத்தைக் கழிய நீண்ட

வடலரக் கன்ற னாண்மை

கண்டொத்துக் கால்வி ரலா

லூன்றிமீண் டருளிச் செய்த

துண்டத்துத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.(4.042.10)

  உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும், மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.