LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-80

2.080.திருக்கடவூர்மயானம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர். 
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை. 
2335 வரியமறையார் பிறையார் 
மலையோர்சிலையா வணக்கி 
எரியமதில்கள் எய்தார் 
எறியுமுசலம் உடையார் 
கரியமிடறு முடையார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பெரியவிடைமேல் வருவார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 1
இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார். 
2336 மங்கைமணந்த மார்பர் 
மழுவாள்வலனொன் றேந்திக் 
கங்கைசடையிற் கரந்தார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
செங்கண்வெள்ளே றேறிச் 
செல்வஞ்செய்யா வருவார் 
அங்கையேறிய மறியார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080.2
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2337 ஈடலிடப மிசைய 
வேறிமழுவொன் றேந்திக் 
காடதிடமா வுடையார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பாடலிசைகொள் கருவி 
படுதம்பலவும் பயில்வார் 
ஆடலரவ முடையார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080.3
ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார். 
2338 இறைநின் றிலங்கு வளையா 
ளிளையாளொருபா லுடையார் 
மறைநின் றிலங்கு மொழியார் 
மலையார்மனத்தின் மிசையார் 
கறைநின் றிலங்கு பொழில்சூழ் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பிறைநின் றிலங்கு சடையார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 4
முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தௌந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2339 வெள்ளையெருத்தின் மிசையார் 
விரிதோடொருகா திலங்கத் 
துள்ளுமிளமான் மறியார் 
சுடர்பொற்சடைகள் துளங்கக் 
கள்ளநகுவெண் டலையார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பிள்ளைமதிய முடையார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 5
வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க 132 அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம்பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர். 
2340 பொன்றாதுதிரு மணங்கொள் 
புனைபூங்கொன்றை புனைந்தார் 
ஒன்றாவெள்ளே றுயர்த்த 
துடையாரதுவே யூர்வார் 
கன்றாவினஞ்சூழ் புறவிற் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பின்றாழ்சடைய ரொருவர் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 6
பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2341 >பாசமான களைவார் 
பரிவார்க்கமுத மனையார் 
ஆசைதீரக் கொடுப்பா 
ரலங்கல்விடைமேல் வருவார் 
காசைமலர்போன் மிடற்றார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
பேசவருவா ரொருவர் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 7
பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்க வரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2342 செற்றவரக்க னலறத் 
திகழ்சேவடிமெல் விரலாற் 
கற்குன்றடர்த்த பெருமான் 
 
கடவூர்மயான மமர்ந்தார் 
மற்றொன்றிணையில் வலிய 
மாசில் வெள்ளி மலைபோல் 
பெற்றொன்றேறி வருவார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 8
சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2343 வருமாகரியி னுரியார் 
வளாபுன்சடையார் விடையார் 
கருமானுரிதோ லுடையார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
திருமாலொடுநான் முகனுந் 
தேர்ந்துங்காணமுன் னொண்ணாப் 
பெருமானெனவும் வருவார் 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 9
தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார். 
2344 தூயவிடைமேல் வருவார் 
துன்னாருடைய மதில்கள் 
காயவேவச் செற்றார் 
கடவூர்மயான மமர்ந்தார் 
தீயகருமஞ் சொல்லுஞ் 
சிறுபுன்றேர ரமணர் 
பேய்பேயென்ன வருவார் 
 
அவரெம்பெருமா னடிகளே.
2.080. 10
தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப் புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயனத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார். 
2345 ரவம்பொழில்சூழ் கடவூர் 
 
மன்னுமயான மமர்ந்த 
அரவமசைத்த பெருமா 
னகலமறிய லாகப் 
பரவுமுறையே பயிலும் 
பந்தன்செஞ்சொன் மாலை 
இரவும்பகலும் பரவி 
நினைவார்வினைக ளிலரே.
2.080. 11
குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர். 
திருச்சிற்றம்பலம்

2.080.திருக்கடவூர்மயானம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர். தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை. 

2335 வரியமறையார் பிறையார் மலையோர்சிலையா வணக்கி எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார் கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார் பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே.2.080. 1
இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார். 

2336 மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக் கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயான மமர்ந்தார் செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார் அங்கையேறிய மறியார் அவரெம்பெருமா னடிகளே.2.080.2
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2337 ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக் காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார் பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார் ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே.2.080.3
ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார். 

2338 இறைநின் றிலங்கு வளையா ளிளையாளொருபா லுடையார் மறைநின் றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார் கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயான மமர்ந்தார் பிறைநின் றிலங்கு சடையார் அவரெம்பெருமா னடிகளே.2.080. 4
முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தௌந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2339 வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத் துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக் கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார் பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே.2.080. 5
வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க 132 அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம்பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர். 

2340 பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார் ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார் கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர்மயான மமர்ந்தார் பின்றாழ்சடைய ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.2.080. 6
பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2341 >பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார் ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார் காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார் பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.2.080. 7
பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்க வரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2342 செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற் கற்குன்றடர்த்த பெருமான்  கடவூர்மயான மமர்ந்தார் மற்றொன்றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்றொன்றேறி வருவார் அவரெம்பெருமா னடிகளே.2.080. 8
சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2343 வருமாகரியி னுரியார் வளாபுன்சடையார் விடையார் கருமானுரிதோ லுடையார் கடவூர்மயான மமர்ந்தார் திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் னொண்ணாப் பெருமானெனவும் வருவார் அவரெம்பெருமா னடிகளே.2.080. 9
தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார். 

2344 தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள் காயவேவச் செற்றார் கடவூர்மயான மமர்ந்தார் தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்றேர ரமணர் பேய்பேயென்ன வருவார்  அவரெம்பெருமா னடிகளே.2.080. 10
தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப் புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயனத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார். 

2345 ரவம்பொழில்சூழ் கடவூர்  மன்னுமயான மமர்ந்த அரவமசைத்த பெருமா னகலமறிய லாகப் பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொன் மாலை இரவும்பகலும் பரவி நினைவார்வினைக ளிலரே.2.080. 11
குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.