LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

முதல் பாகம் - பூகம்பம்-கன்னத்தில் ஒருஅறை

 

சில வருஷங்களுக்கு முன்பு கிட்டாவய்யர், "கொஞ்சம் சுகவாசியாயிருக்க வேண்டும்;நாகரிகமாக வாழ்க்கை நடத்தவேண்டும்" என்று எண்ணியபோது ஊர்க் குளத்தங்கரையில்அவருக்கிருந்த மேட்டு நிலத்தில் ஒரு சவுக்கண்டி கட்டினார். கூரைக்குக் கீத்தும் விழலும்போட்டார். நாலு புறமும் பிளாச்சு வேலி எடுத்தார். முன் பக்கத்தில் குரோடன்ஸு களும் பின் பக்கத்தில் மல்லிகை முல்லை முதலிய புஷ்பச் செடிகளும் வைத்து வளர்த்தார். குளத்தங்கரைப் பங்களா என்றும் கிராம முனிசீப் சவுக்கண்டி என்றும் பெயர் பெற்ற அந்த இடத்தைத் தம்முடையசொந்த ஆபீசாகவும் நண்பர்களுடன் சல்லாபம் செய்யும் இடமாகவும் வைத்துக்கொண்டிருந்தார். முக்கியமாகக் கோடை காலத்தில் அந்தக் குளத்தங்கரைப் பங்களாஜிலுஜிலுவென்று காற்று அடித்துக் கொண்டு வெகு சுகமாக இருக்கும். நாலு பேர் வருவதற்கும்சீட்டுக் கச்சேரி போடுவதற்கும் மிக்க வசதியாயிருக்கும். அதெல்லாம் சவுக்கண்டி கட்டிய புதிதில் சில காலந்தான் நடந்தது. அப்புறம் பங்களா வர வரச் சிதிலம் ஆகிப் பாழடைந்துகிடந்தது. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணம் நடக்க வேண்டியதை முன்னிட்டுக்கிட்டாவய்யர் அந்தச் சவுக்கண்டியைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார். 
 
     திடீரென்று பங்களாவுக்குள்ளே நுழைந்த சூரியாவைப் பார்த்து லலிதா எரிச்சலுடன்,"இங்கேயும் வந்துவிட்டாயா? இங்கே ஒருவரும் பயப்படவும் இல்லை; வீராதி வீரன் சூரியாவின்உதவியும் வேண்டியதில்லை! பொம்மனாட்டிகள் பேசிக் கொண்டிருக்குமிடத்தில்புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே?" என்றாள்."பெரிய பொம்மனாட்டிகள் நீங்கள்! வாயாடித்தனத்தைப் பார்! அத்தங்கா! நீயே சொல்லு!அண்ணாவிடம் தங்கை இப்படித் தானா பேசுகிறது! நாளைக்குக் கலியாணம் ஆகி இவள்புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் யார் இவளைத் தேடிக்கொண்டு போகப்போகிறார்கள்? ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறந்தவீட்டு மனுஷர்களிடம் பிரியமாயிருக்கக் கூடாதோ? பொம்மனாட்டிகளின் சுபாவமே இப்படித்தான்! அவர்களுக்கு மனதில் கொஞ்சமாவது வாஞ்சை என்பதே கிடையாது!" என்றான் சூரியா. "ஆமாம்! நீ ரொம்பப்பெரிய மனுஷன்; பொம்மனாட்டிகளின் சுபாவத்தை ரொம்பக் கண்டு விட்டாய்! வாயை மூடு!"என்று லலிதா மேலும் கடுமையாகப் பேசினாள். அப்போது சீதா குறுக்கிட்டு, "லலிதா!அண்ணாவின் மேல் எதற்காக இப்படி எரிந்து விழுகிறாய்? யாருக்கும் தங்களுக்குக்கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்று தெரிவதில்லை; தெரிந்தாலும் அதைப்பாராட்டுவதில்லை. சூரியாவைப் போல் எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்று நான்எவ்வளவோ ஏங்கிக் கிடக்கிறேன்! நீயானால் இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறாய்"என்றாள். 
 
     "சரியாய்ப் போச்சு! நீயும் சூரியாவின் கட்சியிலே சேர்ந்து கொண்டாயா?" என்றாள்லலிதா. சூரியா குதூகலத்துடன், "பின்னே எப்போதும் உன் கட்சியையே பேசுவாளோ? சீதாஉனக்கு எப்படி அத்தங்காளோ அப்படியே எனக்கும் அத்தங்காள் தானே" என்றான். "நான்ஒருத்தருடைய கட்சியும் பேசவில்லை; நியாயத்தைத் தான் சொன்னேன். நீங்கள் தமையனும் தங்கையும் தயவு செய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்!" என்று சீதா இதோபதேசம்செய்தாள். "நான் ஒன்றும் சண்டை போடவில்லை. இவன் என்னத்துக்காக இப்போது இவ்விடம்வந்தான் என்று கேட்டேன். அவ்வளவுதானே?" "காரியம் இல்லாமல் நான் வரவில்லை, லலிதா!அத்தை சீதாவைத் தேடினாள். இங்கே இருந்தால் அனுப்பும்படி சொன்னாள், அதனாலேதான் வந்தேன். பம்பாய் அத்திம்பேரிட மிருந்து கடிதம் வந்திருக்கிறதாம். சீதா பேருக்கு வந்திருப்பதால் அவள் வந்துதான் உறையைப் பிரிக்கவேண்டும் என்று அத்தை காத்திருக்கிறாள்!நாகரிமுள்ள மனிதர்களுக்கும் பட்டிக்காட்டு மனிதர்களுக்கும் இதுதான் வித்தியாசம், நம்ஊரிலேயானால் பிறத்தியாருக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுத்தான் மறுகாரியம்பார்ப்பார்கள்!" என்றான் சூரியா. 
 
     "அத்தை கூப்பிட்டாள் என்று முன்னாலேயே சொல்வதுதானே? இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுவானேன்? வா சீதா! நாம் போகலாம்!" என்றாள் லலிதா. "நீ என்னத்து க்காக இப்போது போகிறாய்? சீதா போய் விட்டுச் சீக்கிரம் வந்து விடுகிறாள். அதுவரையில் நாம்பேசிக் கொண்டிருக்கலாம்!" என்று சூரியா சொன்னான். "ஆமாம், லலிதா! நீ இங்கேயே இரு!நான் போய் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சீதா புறப்பட்டாள். இரண்டு காரணங்களை முன்னிட்டுச் சூரியா லலிதாவை அங்கேயே இருக்கச்சொன்னான். முதலாவது, அத்திம்பேரிடமிருந்து வந்த கடிதத்தை அத்தையும் சீதாவும் தனியாகப்படிக்கப் பிரியப்படுவார்கள். லலிதா கூடச் சென்றால், கடிதத்தைத் தானும் படித்துப் பார்க்கவேண்டுமென்று தொந்தரவு செய்வாள். அம்மாவும் பெண்ணும் ஒரு நிமிஷம் தனித்திருந்துபேசுவதற்கு விடமாட்டாள். இரண்டாவது, லலிதாவிடம் அவளுடைய கலியாணத்தைப் பற்றிச்சில விஷயங்கள் சொல்ல வேண்டுமென்று சூரியா விரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால்அப்புறம் சௌகரியம் கிடைக்காது என்று எண்ணினான். லலிதாவுக்குச் சூரியாவின் மேல்வாஞ்சை இல்லை என்பது கிடையாது. ஆனால் அவள் அன்று சாயங்காலம் 'அவர்கள்' வரும்போது தான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சீதாவிடம் பேசித் தெரிந்துகொள்ள விரும்பினாள். 
 
     அதற்குத் தடையாக சூரியா வந்து சேர்ந்தபடியால் அவ்வளவு கோபம் அவன் பேரில்அவளுக்கு வந்தது. வீட்டுக்குத் தானும் போனால் திரும்பி வரமுடியாது. சீதாவிடம் தனியாகப்பேசவும் முடியாது. ஆகையால் சீதா போய்விட்டு வருவதே நல்லது என்று குளத்தங்கரைப்பங்களாவில் இருக்கச் சம்மதித்தாள். மற்றபடி சூரியாவுடன் பேசுவதற்கு வேண்டிய பொறுமைஅவளிடம் அப்போது இல்லை. சூரியா எப்படித்தான் பேச்சை தொடங்குவது என்றுயோசித்தான். யோசித்து தவறான முறையிலேயே தொடங்கினான். "லலிதா உன்அத்தங்காளைப் பற்றி, அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ அளந்து கொண்டிருந்தாயே?எல்லாம் பொய்!" என்று சொன்னான். "எது பொய்?" என்றாள் லலிதா. "எல்லாந்தான்! 'பம்பாய்அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள்! ரதி என்றால் ரதிதான்' என்று எவ்வளவோ வர்ணனைசெய்தாய்? அது மட்டுமா? பம்பாயிலிருந்து உன் அத்தங்காள் வந்த பிறகு கூடப் பக்கம்பக்கமாய்க் கடிதம் எழுதினாயே?" "ஆமாம் எழுதினேன். அதிலேயெல்லாம் என்ன தப்பு?""உன்னுடைய அத்தங்காள் ரொம்ப அழகோ?" "அழகு இல்லையோ?" "இல்லவே இல்லை; சுத்த அவலட்சணம் எந்தக் குருடன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள..." மேலே சூரியாபேச முடியவில்லை. ஏனெனில், "என்ன? யார் அவலட்சணம்?" என்று சொல்லிக் கொண்டே தன்தமையனின் கன்னத்தில் பளீர் என்று அறைந்தாள்! 
 
      கொஞ்ச நாளைக்கு முன்னேயாயிருந்தால் சூரியா லலிதாவின் ஒரு அறைக்குப் பதிலாகஅவளுடைய தலையில் ஆறு குட்டுக் குட்டியிருப்பான்! இப்போது அப்படியெல்லாம்செய்யவில்லை. கன்னத்தில் விழுந்த அறை அவனுக்கு உற்சாகத்தை உண்டு பண்ணியது என்றுதோன்றியது. மலர்ந்த முகத்துடன் "அடே அம்மா! அத்தங்காளிடத்தில் எவ்வளவு கரிசனம்?சிநேகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? நான் வெறுமனே சொன்னேன். லலிதா!உன் அத்தங்காள் நல்ல இலட்சணமாய்த்தான் இருக்கிறாள்; புத்திசாலியாயுமிருக்கிறாள்.ஆனால் அழகும் அறிவும் இருந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கு நல்ல இடத்தில்கலியாணம் ஆவதற்கு இந்தக் காலத்தில் பணம் அல்லவா வேண்டியிருக்கிறது?" "ஆமாம்; நம் ஊர்க்காரர்களுக்குப் பணம், பணம், பணம். பணந்தான் பெரிது! பணத்துக்காக உயிரை விடுவார்கள். இங்கிலீஷ்கார தேசத்திலேயெல்லாம் இப்படி இல்லையாமே? அங்கேஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கலியாணம் செய்து கொள்வார்களாம். ஏழைப் பணக்காரர்என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்களாம். நம் ஊர்ப் பிள்ளைகள், நீங்களும் இருக்கிறீர்களே!இங்கிலீஷ்காரர்களைப் பார்த்துத் தலையைக் கிராப் செய்து கொள்ளவும் கால் சட்டை மேல்சட்டை போட்டுக் கொள்ளவும் தஸ்புஸ் என்று இங்கிலீஷ் பேசவும் கற்றுக் கொள்கிறீர்கள்.கல்யாணம் என்றால் மட்டும், 'பதினாயிரத்தைக் கொண்டு வா! இருபதினாயிரத்தைக் கொண்டு வா!' என்கிறீர்கள். இங்கிலீஷ்காரர்களிடமிருந்து நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் துப்பு இல்லை!" என்று லலிதா பொரிந்து கொட்டினாள். 
 
     "லலிதா! முன்னேயெல்லாம் உன்னை ஒரு வார்த்தை பேசச் சொல்வது பிரம்மப்பிரயத்தனமாயிருக்குமே! எப்போது இவ்வளவு பெரிய வாயாடி ஆனாய்? உன்னைக் கலியாணம்செய்து கொள்ளப் போகிற ராஸ்கல் என்ன பாடுபடப் போகிறானோ தெரியவில்லையே?""அண்ணா! உனக்கு என்மேல் கோபமாயிருந்தால் யாரையோ பிடித்து எதற்காக வைகிறாய்?""அப்பப்பா! இனிமேல் வரப்போகிற புருஷனுக்கு இதற்குள் பரிந்து கொண்டு வந்துவிட்டாயா?போனால் போகட்டும், லலிதா! உன்னிடம் ஒரு விஷயம் சொல்வதற்காகவே முக்கியமாக வந்தேன். அதை இப்போது சொன்னால்தான், சொன்னது; அப்புறம் ஒரு வேளை சந்தர்ப்பம்கிடைக்காது." "என்ன சொல்ல வேணுமோ அதைப் பளிச்சென்று சொல்லேன்! மூடுமந்திரம்என்னத்திற்கு?" "மூடு மந்திரம் ஒன்றும் இல்லை, லலிதா! உன்னுடைய நன்மைக்காகவே ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். சாயங்காலம் யாரோ மதராஸிலிருந்து உன்னைப் பார்க்க வருகிறார்கள் அல்லவா? 'மாப்பிள்ளை'யாக வரப்போகிறவனை உனக்குப் பிடித்திருந்தால் சரி; பிடிக்கவில்லையென்றால் தைரியமாகச் சொல்லிவிடு. அப்பா அம்மா சொல்வதற்காகவோ,வெறுமனே சங்கோசப்பட்டுக்கொண்டோ, வாயை மூடிக்கொண்டு இருந்துவிடாதே!தெரிந்ததா? கலியாணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏதாவது ஒரு சாமான் நமக்குப்பிடிக்காவிட்டால் அதை எறிந்து விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்; கலியாண விஷயம்அப்படியல்ல. ஒரு தடவை முடிந்து போனால் முடிந்துபோனது தானே! அப்புறம் மாற்ற முடியாதல்லவா?" "சரி! அண்ணா! நானே அப்படித்தான் மனத்திற்குள் தீர்மானம் பண்ணிவைத்திருக்கிறேன். ஒரு வேளை எனக்குப் பிடிக்காவிட்டால், நீ என் கட்சியில் இருப்பாய்அல்லவா?" "கண்டிப்பாய் இருப்பேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்!"என்றான் சூரியா. 
 
      வீட்டுக்குப் புறப்பட்ட சீதா சவுக்கண்டியின் வெளி 'கேட்டி'ன் அருகே தயங்கி நின்றாள்.'மறுபடியும் இங்கே திரும்பி வருவானேன்? லலிதாவையும் அழைத்துக்கொண்டு போய் விட்டால்என்ன?' என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றியது. எனவே, திரும்ப சவுக்கண்டிக்குள்வருவதற்காக நாலு அடி எடுத்து வைத்தாள். இதற்குள் உள்ளே தமையனும் தங்கையும் பேசியதுகாதில் விழுந்தது. தன்னைப் பற்றிச் 'சுத்த அவலட்சணம்' என்று சூரியா கூறியது அவள்உள்ளத்தில் ஆங்காரத்தை உண்டாக்கிற்று. அதற்குப் பதிலாக லலிதா பளீரென்று கன்னத்தில்அறைந்த சத்தமும் அவள் காதில் விழுந்தது. தன்னுடைய உத்தேசத்தை மறுபடியும் மாற்றிக்கொண்டு வீடு நோக்கிச் சென்றாள். குளத்தங்கரையிலிருந்து கிட்டாவய்யரின் வீடு குறுக்கு வழியாகச் சுமார் அரை பர்லாங்கு தூரந்தான் இருக்கும். அந்த தூரம் போவதற்குள் ஆங்காரம்கொண்ட சீதாவின் உள்ளம் எண்ணாததெல்லாம் எண்ணியது. 'இந்தத் தறுதலைப் பையனுக்குநான் அவலட்சணமாம்! 'என்னைக் குருடன் தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம்!'அம்பிகே! தாயே! சூரியாவைப் போன்றவர்கள் வெட்கித் தலை குனியும்படியாக உயர்ந்த பதவியிலுள்ள சீமான் என்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள மாட்டானா?" என்றுஅவளுடைய குழந்தை உள்ளம் ஆத்திரத்துடன் பிரார்த்தனை செய்தது. அன்று காலையிலிருந்து வீட்டில் நடந்து கொண்டிருந்த தடபுடல்களையெல்லாம் பார்த்துவிட்டு, 'இப்படியெல்லாம்நமக்கு நடக்கப் போகிறதா?' என்று சீதா ஏக்கமடைந்திருந்தாள். சூரியா வேடிக்கையாகச்சொன்ன வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனைஅளித்தன. 
 
     அதே சமயத்தில் லலிதா தன்னிடத்தில் எவ்வளவு அபிமானம் கொண்டிருக்கிறாள்என்பதையும் சீதா ஞாபகப்படுத்திக் கொண்டாள். தன்னைப்பற்றித் தமையன் சொன்ன வார்த்தையைப் பொறுக்காமல் அவன் கன்னத்தில் அறைந்து விட்டாளே? இதுவல்லவா அன்பும்சிநேகமும்! இப்படிப்பட்ட அன்புக்கும் சிநேகத்துக்கும் தன்னால் என்ன பிரதி செய்ய முடியும்?தற்காலத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பிரதி உபகாரம் செய்யக்கூடிய காலம் ஒருசமயம் வராமலா போகும். சற்று நேரத்துக்கெல்லாம் சுண்டுப் பயல் குளத்தங்கரைப்பங்களாவுக்கு ஓடிவந்தான். "அடி லல்லு! அம்மா அழைத்து வரச் சொன்னாள். உனக்குத்தலைவாரிப் பின்னி அலங்காரம் செய்ய ஆரம்பிக்க வேணுமாம். மணி மூன்று ஆகிவிட்டது, இன்னமும் நீ இங்கே உட்கார்ந்திருக் கிறாயே? அண்ணாவுடன் அந்தரங்கம் பேசுவதற்கு இதுதானா சமயம்?" என்று கீச்சுக் குரலில் கத்தினான். "இந்தப் பிள்ளை பண்ணுகிற அதிகாரத்தைப்பார்!... சுண்டு! சீதா அத்தங்கா அங்கேதான் இருக்கிறாளா? இங்கே வருவதாகச்சொல்லவில்லையா!" என்று கேட்டாள் லலிதா. "சீதா அத்தங்காவுந்தான் உன்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னாள், இங்கே அவள் வரமாட்டாளாம். ஏன் என்று தெரியவில்லையா? மிஸ்டர் கே. சூரிய நாராயண அய்யர்வாள் இங்கே விஜயம் செய்திருப்பதனால்தானே!" என்று சுண்டு சொல்லிவிட்டுச் சூரியா தன்னை அடிக்க வந்தால் அவனிடம் அகப்படாமல் தப்பிஓடுவதற்குத் தயாரானான்.

சில வருஷங்களுக்கு முன்பு கிட்டாவய்யர், "கொஞ்சம் சுகவாசியாயிருக்க வேண்டும்;நாகரிகமாக வாழ்க்கை நடத்தவேண்டும்" என்று எண்ணியபோது ஊர்க் குளத்தங்கரையில்அவருக்கிருந்த மேட்டு நிலத்தில் ஒரு சவுக்கண்டி கட்டினார். கூரைக்குக் கீத்தும் விழலும்போட்டார். நாலு புறமும் பிளாச்சு வேலி எடுத்தார். முன் பக்கத்தில் குரோடன்ஸு களும் பின் பக்கத்தில் மல்லிகை முல்லை முதலிய புஷ்பச் செடிகளும் வைத்து வளர்த்தார். குளத்தங்கரைப் பங்களா என்றும் கிராம முனிசீப் சவுக்கண்டி என்றும் பெயர் பெற்ற அந்த இடத்தைத் தம்முடையசொந்த ஆபீசாகவும் நண்பர்களுடன் சல்லாபம் செய்யும் இடமாகவும் வைத்துக்கொண்டிருந்தார். முக்கியமாகக் கோடை காலத்தில் அந்தக் குளத்தங்கரைப் பங்களாஜிலுஜிலுவென்று காற்று அடித்துக் கொண்டு வெகு சுகமாக இருக்கும். நாலு பேர் வருவதற்கும்சீட்டுக் கச்சேரி போடுவதற்கும் மிக்க வசதியாயிருக்கும். அதெல்லாம் சவுக்கண்டி கட்டிய புதிதில் சில காலந்தான் நடந்தது. அப்புறம் பங்களா வர வரச் சிதிலம் ஆகிப் பாழடைந்துகிடந்தது. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணம் நடக்க வேண்டியதை முன்னிட்டுக்கிட்டாவய்யர் அந்தச் சவுக்கண்டியைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்.       திடீரென்று பங்களாவுக்குள்ளே நுழைந்த சூரியாவைப் பார்த்து லலிதா எரிச்சலுடன்,"இங்கேயும் வந்துவிட்டாயா? இங்கே ஒருவரும் பயப்படவும் இல்லை; வீராதி வீரன் சூரியாவின்உதவியும் வேண்டியதில்லை! பொம்மனாட்டிகள் பேசிக் கொண்டிருக்குமிடத்தில்புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே?" என்றாள்."பெரிய பொம்மனாட்டிகள் நீங்கள்! வாயாடித்தனத்தைப் பார்! அத்தங்கா! நீயே சொல்லு!அண்ணாவிடம் தங்கை இப்படித் தானா பேசுகிறது! நாளைக்குக் கலியாணம் ஆகி இவள்புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் யார் இவளைத் தேடிக்கொண்டு போகப்போகிறார்கள்? ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறந்தவீட்டு மனுஷர்களிடம் பிரியமாயிருக்கக் கூடாதோ? பொம்மனாட்டிகளின் சுபாவமே இப்படித்தான்! அவர்களுக்கு மனதில் கொஞ்சமாவது வாஞ்சை என்பதே கிடையாது!" என்றான் சூரியா. "ஆமாம்! நீ ரொம்பப்பெரிய மனுஷன்; பொம்மனாட்டிகளின் சுபாவத்தை ரொம்பக் கண்டு விட்டாய்! வாயை மூடு!"என்று லலிதா மேலும் கடுமையாகப் பேசினாள். அப்போது சீதா குறுக்கிட்டு, "லலிதா!அண்ணாவின் மேல் எதற்காக இப்படி எரிந்து விழுகிறாய்? யாருக்கும் தங்களுக்குக்கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்று தெரிவதில்லை; தெரிந்தாலும் அதைப்பாராட்டுவதில்லை. சூரியாவைப் போல் எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்று நான்எவ்வளவோ ஏங்கிக் கிடக்கிறேன்! நீயானால் இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறாய்"என்றாள்.       "சரியாய்ப் போச்சு! நீயும் சூரியாவின் கட்சியிலே சேர்ந்து கொண்டாயா?" என்றாள்லலிதா. சூரியா குதூகலத்துடன், "பின்னே எப்போதும் உன் கட்சியையே பேசுவாளோ? சீதாஉனக்கு எப்படி அத்தங்காளோ அப்படியே எனக்கும் அத்தங்காள் தானே" என்றான். "நான்ஒருத்தருடைய கட்சியும் பேசவில்லை; நியாயத்தைத் தான் சொன்னேன். நீங்கள் தமையனும் தங்கையும் தயவு செய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்!" என்று சீதா இதோபதேசம்செய்தாள். "நான் ஒன்றும் சண்டை போடவில்லை. இவன் என்னத்துக்காக இப்போது இவ்விடம்வந்தான் என்று கேட்டேன். அவ்வளவுதானே?" "காரியம் இல்லாமல் நான் வரவில்லை, லலிதா!அத்தை சீதாவைத் தேடினாள். இங்கே இருந்தால் அனுப்பும்படி சொன்னாள், அதனாலேதான் வந்தேன். பம்பாய் அத்திம்பேரிட மிருந்து கடிதம் வந்திருக்கிறதாம். சீதா பேருக்கு வந்திருப்பதால் அவள் வந்துதான் உறையைப் பிரிக்கவேண்டும் என்று அத்தை காத்திருக்கிறாள்!நாகரிமுள்ள மனிதர்களுக்கும் பட்டிக்காட்டு மனிதர்களுக்கும் இதுதான் வித்தியாசம், நம்ஊரிலேயானால் பிறத்தியாருக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுத்தான் மறுகாரியம்பார்ப்பார்கள்!" என்றான் சூரியா.       "அத்தை கூப்பிட்டாள் என்று முன்னாலேயே சொல்வதுதானே? இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுவானேன்? வா சீதா! நாம் போகலாம்!" என்றாள் லலிதா. "நீ என்னத்து க்காக இப்போது போகிறாய்? சீதா போய் விட்டுச் சீக்கிரம் வந்து விடுகிறாள். அதுவரையில் நாம்பேசிக் கொண்டிருக்கலாம்!" என்று சூரியா சொன்னான். "ஆமாம், லலிதா! நீ இங்கேயே இரு!நான் போய் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சீதா புறப்பட்டாள். இரண்டு காரணங்களை முன்னிட்டுச் சூரியா லலிதாவை அங்கேயே இருக்கச்சொன்னான். முதலாவது, அத்திம்பேரிடமிருந்து வந்த கடிதத்தை அத்தையும் சீதாவும் தனியாகப்படிக்கப் பிரியப்படுவார்கள். லலிதா கூடச் சென்றால், கடிதத்தைத் தானும் படித்துப் பார்க்கவேண்டுமென்று தொந்தரவு செய்வாள். அம்மாவும் பெண்ணும் ஒரு நிமிஷம் தனித்திருந்துபேசுவதற்கு விடமாட்டாள். இரண்டாவது, லலிதாவிடம் அவளுடைய கலியாணத்தைப் பற்றிச்சில விஷயங்கள் சொல்ல வேண்டுமென்று சூரியா விரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால்அப்புறம் சௌகரியம் கிடைக்காது என்று எண்ணினான். லலிதாவுக்குச் சூரியாவின் மேல்வாஞ்சை இல்லை என்பது கிடையாது. ஆனால் அவள் அன்று சாயங்காலம் 'அவர்கள்' வரும்போது தான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சீதாவிடம் பேசித் தெரிந்துகொள்ள விரும்பினாள்.       அதற்குத் தடையாக சூரியா வந்து சேர்ந்தபடியால் அவ்வளவு கோபம் அவன் பேரில்அவளுக்கு வந்தது. வீட்டுக்குத் தானும் போனால் திரும்பி வரமுடியாது. சீதாவிடம் தனியாகப்பேசவும் முடியாது. ஆகையால் சீதா போய்விட்டு வருவதே நல்லது என்று குளத்தங்கரைப்பங்களாவில் இருக்கச் சம்மதித்தாள். மற்றபடி சூரியாவுடன் பேசுவதற்கு வேண்டிய பொறுமைஅவளிடம் அப்போது இல்லை. சூரியா எப்படித்தான் பேச்சை தொடங்குவது என்றுயோசித்தான். யோசித்து தவறான முறையிலேயே தொடங்கினான். "லலிதா உன்அத்தங்காளைப் பற்றி, அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ அளந்து கொண்டிருந்தாயே?எல்லாம் பொய்!" என்று சொன்னான். "எது பொய்?" என்றாள் லலிதா. "எல்லாந்தான்! 'பம்பாய்அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள்! ரதி என்றால் ரதிதான்' என்று எவ்வளவோ வர்ணனைசெய்தாய்? அது மட்டுமா? பம்பாயிலிருந்து உன் அத்தங்காள் வந்த பிறகு கூடப் பக்கம்பக்கமாய்க் கடிதம் எழுதினாயே?" "ஆமாம் எழுதினேன். அதிலேயெல்லாம் என்ன தப்பு?""உன்னுடைய அத்தங்காள் ரொம்ப அழகோ?" "அழகு இல்லையோ?" "இல்லவே இல்லை; சுத்த அவலட்சணம் எந்தக் குருடன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள..." மேலே சூரியாபேச முடியவில்லை. ஏனெனில், "என்ன? யார் அவலட்சணம்?" என்று சொல்லிக் கொண்டே தன்தமையனின் கன்னத்தில் பளீர் என்று அறைந்தாள்!        கொஞ்ச நாளைக்கு முன்னேயாயிருந்தால் சூரியா லலிதாவின் ஒரு அறைக்குப் பதிலாகஅவளுடைய தலையில் ஆறு குட்டுக் குட்டியிருப்பான்! இப்போது அப்படியெல்லாம்செய்யவில்லை. கன்னத்தில் விழுந்த அறை அவனுக்கு உற்சாகத்தை உண்டு பண்ணியது என்றுதோன்றியது. மலர்ந்த முகத்துடன் "அடே அம்மா! அத்தங்காளிடத்தில் எவ்வளவு கரிசனம்?சிநேகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? நான் வெறுமனே சொன்னேன். லலிதா!உன் அத்தங்காள் நல்ல இலட்சணமாய்த்தான் இருக்கிறாள்; புத்திசாலியாயுமிருக்கிறாள்.ஆனால் அழகும் அறிவும் இருந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கு நல்ல இடத்தில்கலியாணம் ஆவதற்கு இந்தக் காலத்தில் பணம் அல்லவா வேண்டியிருக்கிறது?" "ஆமாம்; நம் ஊர்க்காரர்களுக்குப் பணம், பணம், பணம். பணந்தான் பெரிது! பணத்துக்காக உயிரை விடுவார்கள். இங்கிலீஷ்கார தேசத்திலேயெல்லாம் இப்படி இல்லையாமே? அங்கேஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கலியாணம் செய்து கொள்வார்களாம். ஏழைப் பணக்காரர்என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்களாம். நம் ஊர்ப் பிள்ளைகள், நீங்களும் இருக்கிறீர்களே!இங்கிலீஷ்காரர்களைப் பார்த்துத் தலையைக் கிராப் செய்து கொள்ளவும் கால் சட்டை மேல்சட்டை போட்டுக் கொள்ளவும் தஸ்புஸ் என்று இங்கிலீஷ் பேசவும் கற்றுக் கொள்கிறீர்கள்.கல்யாணம் என்றால் மட்டும், 'பதினாயிரத்தைக் கொண்டு வா! இருபதினாயிரத்தைக் கொண்டு வா!' என்கிறீர்கள். இங்கிலீஷ்காரர்களிடமிருந்து நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் துப்பு இல்லை!" என்று லலிதா பொரிந்து கொட்டினாள்.       "லலிதா! முன்னேயெல்லாம் உன்னை ஒரு வார்த்தை பேசச் சொல்வது பிரம்மப்பிரயத்தனமாயிருக்குமே! எப்போது இவ்வளவு பெரிய வாயாடி ஆனாய்? உன்னைக் கலியாணம்செய்து கொள்ளப் போகிற ராஸ்கல் என்ன பாடுபடப் போகிறானோ தெரியவில்லையே?""அண்ணா! உனக்கு என்மேல் கோபமாயிருந்தால் யாரையோ பிடித்து எதற்காக வைகிறாய்?""அப்பப்பா! இனிமேல் வரப்போகிற புருஷனுக்கு இதற்குள் பரிந்து கொண்டு வந்துவிட்டாயா?போனால் போகட்டும், லலிதா! உன்னிடம் ஒரு விஷயம் சொல்வதற்காகவே முக்கியமாக வந்தேன். அதை இப்போது சொன்னால்தான், சொன்னது; அப்புறம் ஒரு வேளை சந்தர்ப்பம்கிடைக்காது." "என்ன சொல்ல வேணுமோ அதைப் பளிச்சென்று சொல்லேன்! மூடுமந்திரம்என்னத்திற்கு?" "மூடு மந்திரம் ஒன்றும் இல்லை, லலிதா! உன்னுடைய நன்மைக்காகவே ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். சாயங்காலம் யாரோ மதராஸிலிருந்து உன்னைப் பார்க்க வருகிறார்கள் அல்லவா? 'மாப்பிள்ளை'யாக வரப்போகிறவனை உனக்குப் பிடித்திருந்தால் சரி; பிடிக்கவில்லையென்றால் தைரியமாகச் சொல்லிவிடு. அப்பா அம்மா சொல்வதற்காகவோ,வெறுமனே சங்கோசப்பட்டுக்கொண்டோ, வாயை மூடிக்கொண்டு இருந்துவிடாதே!தெரிந்ததா? கலியாணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏதாவது ஒரு சாமான் நமக்குப்பிடிக்காவிட்டால் அதை எறிந்து விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்; கலியாண விஷயம்அப்படியல்ல. ஒரு தடவை முடிந்து போனால் முடிந்துபோனது தானே! அப்புறம் மாற்ற முடியாதல்லவா?" "சரி! அண்ணா! நானே அப்படித்தான் மனத்திற்குள் தீர்மானம் பண்ணிவைத்திருக்கிறேன். ஒரு வேளை எனக்குப் பிடிக்காவிட்டால், நீ என் கட்சியில் இருப்பாய்அல்லவா?" "கண்டிப்பாய் இருப்பேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்!"என்றான் சூரியா.        வீட்டுக்குப் புறப்பட்ட சீதா சவுக்கண்டியின் வெளி 'கேட்டி'ன் அருகே தயங்கி நின்றாள்.'மறுபடியும் இங்கே திரும்பி வருவானேன்? லலிதாவையும் அழைத்துக்கொண்டு போய் விட்டால்என்ன?' என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றியது. எனவே, திரும்ப சவுக்கண்டிக்குள்வருவதற்காக நாலு அடி எடுத்து வைத்தாள். இதற்குள் உள்ளே தமையனும் தங்கையும் பேசியதுகாதில் விழுந்தது. தன்னைப் பற்றிச் 'சுத்த அவலட்சணம்' என்று சூரியா கூறியது அவள்உள்ளத்தில் ஆங்காரத்தை உண்டாக்கிற்று. அதற்குப் பதிலாக லலிதா பளீரென்று கன்னத்தில்அறைந்த சத்தமும் அவள் காதில் விழுந்தது. தன்னுடைய உத்தேசத்தை மறுபடியும் மாற்றிக்கொண்டு வீடு நோக்கிச் சென்றாள். குளத்தங்கரையிலிருந்து கிட்டாவய்யரின் வீடு குறுக்கு வழியாகச் சுமார் அரை பர்லாங்கு தூரந்தான் இருக்கும். அந்த தூரம் போவதற்குள் ஆங்காரம்கொண்ட சீதாவின் உள்ளம் எண்ணாததெல்லாம் எண்ணியது. 'இந்தத் தறுதலைப் பையனுக்குநான் அவலட்சணமாம்! 'என்னைக் குருடன் தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம்!'அம்பிகே! தாயே! சூரியாவைப் போன்றவர்கள் வெட்கித் தலை குனியும்படியாக உயர்ந்த பதவியிலுள்ள சீமான் என்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள மாட்டானா?" என்றுஅவளுடைய குழந்தை உள்ளம் ஆத்திரத்துடன் பிரார்த்தனை செய்தது. அன்று காலையிலிருந்து வீட்டில் நடந்து கொண்டிருந்த தடபுடல்களையெல்லாம் பார்த்துவிட்டு, 'இப்படியெல்லாம்நமக்கு நடக்கப் போகிறதா?' என்று சீதா ஏக்கமடைந்திருந்தாள். சூரியா வேடிக்கையாகச்சொன்ன வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனைஅளித்தன.       அதே சமயத்தில் லலிதா தன்னிடத்தில் எவ்வளவு அபிமானம் கொண்டிருக்கிறாள்என்பதையும் சீதா ஞாபகப்படுத்திக் கொண்டாள். தன்னைப்பற்றித் தமையன் சொன்ன வார்த்தையைப் பொறுக்காமல் அவன் கன்னத்தில் அறைந்து விட்டாளே? இதுவல்லவா அன்பும்சிநேகமும்! இப்படிப்பட்ட அன்புக்கும் சிநேகத்துக்கும் தன்னால் என்ன பிரதி செய்ய முடியும்?தற்காலத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பிரதி உபகாரம் செய்யக்கூடிய காலம் ஒருசமயம் வராமலா போகும். சற்று நேரத்துக்கெல்லாம் சுண்டுப் பயல் குளத்தங்கரைப்பங்களாவுக்கு ஓடிவந்தான். "அடி லல்லு! அம்மா அழைத்து வரச் சொன்னாள். உனக்குத்தலைவாரிப் பின்னி அலங்காரம் செய்ய ஆரம்பிக்க வேணுமாம். மணி மூன்று ஆகிவிட்டது, இன்னமும் நீ இங்கே உட்கார்ந்திருக் கிறாயே? அண்ணாவுடன் அந்தரங்கம் பேசுவதற்கு இதுதானா சமயம்?" என்று கீச்சுக் குரலில் கத்தினான். "இந்தப் பிள்ளை பண்ணுகிற அதிகாரத்தைப்பார்!... சுண்டு! சீதா அத்தங்கா அங்கேதான் இருக்கிறாளா? இங்கே வருவதாகச்சொல்லவில்லையா!" என்று கேட்டாள் லலிதா. "சீதா அத்தங்காவுந்தான் உன்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னாள், இங்கே அவள் வரமாட்டாளாம். ஏன் என்று தெரியவில்லையா? மிஸ்டர் கே. சூரிய நாராயண அய்யர்வாள் இங்கே விஜயம் செய்திருப்பதனால்தானே!" என்று சுண்டு சொல்லிவிட்டுச் சூரியா தன்னை அடிக்க வந்தால் அவனிடம் அகப்படாமல் தப்பிஓடுவதற்குத் தயாரானான்.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.