LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-81

2.081.திருவேணுபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2346 பூதத்தின் படையினீர் 
பூங்கொன்றைத் தாரினீர் 
ஓதத்தி னொலியொடு 
மும்பர்வா னவர்புகுந்து 
வேதத்தி னிசைபாடி 
விரைமலர்கள் சொரிந்தேத்தும் 
பாதத்தீர் வேணுபுரம் 
பதியாகக் கொண்டீரே.
2.081. 1
பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 
2347 சுடுகாடு மேவினீர் 
துன்னம்பெய் கோவணந்தோல் 
உடையாடை யதுகொண்டீ 
ருமையாளை யொருபாகம் 
அடையாள மதுகொண்டீ 
ரங்கையினிற் பரசுவெனும் 
படையாள்வீர் வேணுபுரம் 
பதியாகக் கொண்டீரே.
2.081. 2
சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 
2348 கங்கைசேர் சடைமுடியீர் 
காலனைமுன் செற்றுகந்தீர் 
திங்களோ டிளவரவந் 
திகழ்சென்னி வைத்துகந்தீர் 
மங்கையோர் கூறுடையீர் 
மறையோர்க ணிறைந்தேத்தப் 
பங்கயஞ்சேர் வேணுபுரம் 
பதியாகக் கொண்டீரே.
2.081. 3
கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச் செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்த தடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 
2349 நீர்கொண்ட சடைமுடிமே 
னீண்மதியம் பாம்பினொடும் 
ஏர்கொண்ட கொன்றையினோ 
டெழின்மத்த மிலங்கவே 
சீர்கொண்ட மாளிகைமேற் 
சேயிழையார் வாழ்த்துரைப்பக் 
கார்கொண்ட வேணுபுரம் 
பதியாகக் கலந்தீரே.
2.081. 4
கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர். 
2350 ஆலைசேர் தண்கழனி 
யழகாக நறவுண்டு 
சோலைசேர் வண்டினங்க 
ளிசைபாடத் தூமொழியார் 
காலையே புகுந்திறைஞ்சிக் 
கைதொழமெய் மாதினொடும் 
பாலையாழ் வேணுபுரம் 
பதியாகக் கொண்டீரே.
2.081. 5
கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசை பாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள் பேச்சுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித் தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினது மாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர். 
2351 மணிமல்கு மால்வரைமேன் 
மாதினொடு மகிழ்ந்திருந்தீர் 
துணிமல்கு கோவணத்தீர் 
சுடுகாட்டி லாட்டுகந்தீர் 
பணிமல்கு மறையோர்கள் 
பரிந்திறைஞ்ச வேணுபுரத் 
தணிமல்கு கோயிலே 
கோயிலாக வமர்ந்தீரே.
2.081. 6
மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது உமையம்மை யோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக் குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர். 
2352 நீலஞ்சேர் மிடற்றினீர் 
நீண்டசெஞ் சடையினீர் 
கோலஞ்சேர் விடையினீர் 
கொடுங்காலன் றனைச்செற்றீர் 
ஆலஞ்சேர் கழனி 
யழகார்வேணு புரமமருங் 
கோலஞ்சேர் கோயிலே 
கோயிலாக்கொண்டீரே.
2.081. 7
நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர். 
2353 இரைமண்டிச் சங்கேறுங் 
கடல்சூழ்தென் னிலங்கையர்கோன் 
விரைமண்டு முடிநெரிய 
விரல்வைத்தீர் வரைதன்னிற் 
கரைமண்டிப் பேரோதங் 
கலந்தெற்றுங் கடற்கவினார் 
விரைமண்டு வேணுபுர 
மேயமர்ந்து மிக்கீரே.
2.081. 8
சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில் ஏறி இளைப்பாறும் கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம் மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக் கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர். 
2354 தீயோம்பு மறைவாணர்க் 
காதியாந் திசைமுகன்மால் 
போயோங்கி யிழிந்தாரும் 
போற்றரிய திருவடியீர் 
பாயோங்கு மரக்கலங்கள் 
படுதிரையான் மொத்துண்டு 
சேயோங்கு வேணுபுரஞ் 
செழும்பதியாத் திகழ்ந்தீரே.
2.081. 9
முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப் பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர். 
2355 நிலையார்ந்த வுண்டியினர் 
 
நெடுங்குண்டர் சாக்கியர்கள் 
புனலயானா ரறவுரையைப் 
போற்றாதுன் பொன்னடியே 
நிலையாகப் பேணீநீ 
சரணென்றார் தமையென்றும் 
விலையாக வாட்கொண்டு 
வேணுபுரம் விரும்பினையே.
2.081. 10
பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட் படுத்தாது உம் பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக விரும்பியுள்ளீர். 
திருச்சிற்றம்பலம்

2.081.திருவேணுபுரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2346 பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர் ஓதத்தி னொலியொடு மும்பர்வா னவர்புகுந்து வேதத்தி னிசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.2.081. 1
பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 

2347 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல் உடையாடை யதுகொண்டீ ருமையாளை யொருபாகம் அடையாள மதுகொண்டீ ரங்கையினிற் பரசுவெனும் படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.2.081. 2
சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 

2348 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர் திங்களோ டிளவரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர் மங்கையோர் கூறுடையீர் மறையோர்க ணிறைந்தேத்தப் பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.2.081. 3
கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச் செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்த தடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர். 

2349 நீர்கொண்ட சடைமுடிமே னீண்மதியம் பாம்பினொடும் ஏர்கொண்ட கொன்றையினோ டெழின்மத்த மிலங்கவே சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக் கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.2.081. 4
கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர். 

2350 ஆலைசேர் தண்கழனி யழகாக நறவுண்டு சோலைசேர் வண்டினங்க ளிசைபாடத் தூமொழியார் காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.2.081. 5
கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசை பாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள் பேச்சுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித் தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினது மாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர். 

2351 மணிமல்கு மால்வரைமேன் மாதினொடு மகிழ்ந்திருந்தீர் துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டி லாட்டுகந்தீர் பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத் தணிமல்கு கோயிலே கோயிலாக வமர்ந்தீரே.2.081. 6
மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது உமையம்மை யோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக் குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர். 

2352 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர் கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் றனைச்செற்றீர் ஆலஞ்சேர் கழனி யழகார்வேணு புரமமருங் கோலஞ்சேர் கோயிலே கோயிலாக்கொண்டீரே.2.081. 7
நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர். 

2353 இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன் விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற் கரைமண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார் விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.2.081. 8
சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில் ஏறி இளைப்பாறும் கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம் மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக் கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர். 

2354 தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால் போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையான் மொத்துண்டு சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.2.081. 9
முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப் பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர். 

2355 நிலையார்ந்த வுண்டியினர்  நெடுங்குண்டர் சாக்கியர்கள் புனலயானா ரறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே நிலையாகப் பேணீநீ சரணென்றார் தமையென்றும் விலையாக வாட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.2.081. 10
பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட் படுத்தாது உம் பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக விரும்பியுள்ளீர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.