|
||||||||
தக்காளி சேவை ( tomato sevai ) |
||||||||
தேவையானவை: சேவை - 900 கிராம்
தக்காளி - 7
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரைடீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
1.சேவை தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
2.அடுப்பில்கடாயை வைத்து கடுகு சோம்பு தாளித்து, கடலைப் பருப்பைப் போடவும்.
3.பின்பு துண்டாக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
4.இப்போது தக்காளியையும் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைத்து, 5 நிமிடம் வாணலியை மூடிவைக்கவும்.
5.பின்பு ஆறவிட்டு சேவை கலந்து கறிவேப்பிலை கொத்தமல்லியுடன் பரிமாறவும்.
|
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|