|
||||||||
இஞ்சி துவையல் (ingi thuvaiyal ) |
||||||||
தேவையானவை: இஞ்சி - 100 கிராம்
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்
பச்சை மிளகாய் 3
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1.முதலில் இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2.ஒரு கடாயில்சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு 3.அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
4.வதக்கிய கலவை, இஞ்சி, வெல்லம், மஞ்சள்தூள், தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து கெட்டியாய் அரைத்து எடுக்கவும்.
|
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|