|
||||||||
காலிப்ளவர் மசால் ரோஸ்ட் (cauliflower masala roast) |
||||||||
தேவையானவை: இட்லி மாவு-ஒரு கப் காலிப்ளவர் - ஒன்று பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 தேங்காய் துருவல் - ஒரு கப் மிளகாய் தூள் - 2 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒன்று கிராம்பு - 2 சோம்பு - ஒரு சிட்டிகை பிரிஞ்சி இலை - ஒன்று கொத்தமல்லி தழை - சிறிது செய்முறை: 1.முதலில் தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலையை போட்டு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய காலிப்ளவர் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். 3.காலிப்ளவர் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 4.தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசை வார்த்து மசாலாவை பரவலாக தடவி வேக வைத்து எடுகத்து பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|