LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-82

2.082.திருத்தேவூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தேவகுருநாதர். 
தேவியார் - தேன்மொழியம்மை. 
2356 பண்ணி லாவிய மொழியுமை 
பங்கனெம் பெருமான் விண்ணில் 
வானவர் கோன்விம 
லன்விடை யூர்தி 
தெண்ணி லாமதி தவழ்தரு 
மாளிகைத் தேவூர் 
அண்ணல் சேவடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 1
இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தௌந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம். 
2357 ஓதி மண்டலத் தோர்முழு 
துய்யவெற் பேறு 
சோதி வானவன் றுதிசெய 
மகிழ்ந்தவன் றூநீர்த் 
தீதில் பங்கயந் தெரிவையர் 
முகமலர் தேவூர் 
ஆதி சேவடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 2
நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம். 
2358 மறைக ளான்மிக வழிபடு 
மாணியைக் கொல்வான் 
கறுவு கொண்டவக் காலனைக் 
காய்ந்தவெங் கடவுள் 
செறுவில் வாளைகள் சேலவை 
பொருவயற் றேவூர் 
அறவன் சேவடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 3
வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயான் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம். 
2359 முத்தன் சில்பலிக் கூர்தொறு 
முறைமுறை திரியும் 
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் 
றன்னடி யார்கள் 
சித்தன் மாளிகை செழுமதி 
தவழ்பொழிற் றேவூர் 
அத்தன் சேவடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 4
பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 
2360 பாடு வாரிசை பல்பொருட் 
பயனுகந் தன்பால் 
கூடு வார்துணைக் கொண்டதம் 
பற்றறப் பற்றித் 
தேடு வார்பொரு ளானவன் 
செறிபொழிற் றேவூர் 
ஆடு வானடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082.5
இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 
2361 பொங்கு பூண்முலைப் புரிகுழல் 
வரிவளைப் பொருப்பின் 
மங்கை பங்கினன் கங்கையை 
வளர்சடை வைத்தான் 
திங்கள் சூடிய தீநிறக் 
கடவுடென் றேவூர் 
அங்க ணன்றனை யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 6
கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்ககை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணை யாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 
2362 வன்பு யத்தவத் தானவர் 
புரங்களை யெரியத் 
தன்பு யத்துறத் தடவரை 
வளைத்தவன் றக்க 
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் 
பொருந்திய தேவூர் 
அன்பன் சேவடி யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 7
வலியதோள்களை உடைய அவுணர்தமபுரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 
2363 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் 
தசமுக னெரிந்து 
வெருவ வூன்றிய திருவிர 
னெகிழ்த்துவாள் பணித்தான் 
தெருவு தோறுநற் றென்றல்வந் 
துலவிய தேவூர் 
அரவு சூடியை யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 8
சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 
2364 முந்திக் கண்ணனு நான்முக 
னும்மவர் காணா 
எந்தை திண்டிற லிருங்களி 
றுரித்தவெம் பெருமான் 
செந்தி னத்திசை யறுபத 
முரறிருந் தேவூர் 
அந்தி வண்ணனை யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 9
திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 
2365 பாறு புத்தருந் தவமணி 
சமணரும் பலநாள் 
கூறி வைத்ததோர் குறியினைப் 
பிழையெனக் கொண்டு 
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் 
கடவுடென் றேவூர் 
ஆறு சூடியை யடைந்தன 
மல்லலொன் றிலமே.
2.082. 10
ஓடித் திரியும் ‘புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தௌவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந் தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 
2366 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் 
காழியர்க் கதிபன் 
நல்ல செந்தமிழ் வல்லவன் 
ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய 
வெழில்வளர் தேவூர்த் 
தொல்லை நம்பனைச் சொல்லிய 
பத்தும்வல் லாரே.
2.082. 11
காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர். 
திருச்சிற்றம்பலம்

2.082.திருத்தேவூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தேவகுருநாதர். தேவியார் - தேன்மொழியம்மை. 

2356 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 1
இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தௌந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம். 

2357 ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த் தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 2
நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம். 

2358 மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர் அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 3
வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயான் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம். 

2359 முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும் பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள் சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர் அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 4
பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 

2360 பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர் ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082.5
இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 

2361 பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர் அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 6
கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்ககை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணை யாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 

2362 வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 7
வலியதோள்களை உடைய அவுணர்தமபுரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 

2363 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான் தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர் அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 8
சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 

2364 முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான் செந்தி னத்திசை யறுபத முரறிருந் தேவூர் அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 9
திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம். 

2365 பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர் ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.2.082. 10
ஓடித் திரியும் ‘புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தௌவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந் தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம். 

2366 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.2.082. 11
காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.