LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-83

2.083.திருக்கொச்சைவயம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
2367 நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் 
நெடுமா வுரித்த நிகரில் 
சேலன கண்ணிவண்ண மொருகூறுருக்கொள் 
திகழ்தேவன் மேவு பதிதான் 
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை 
விழவோசை வேத வொலியின் 
சாலநல் வேலையோசை தருமாட வீதி 
கொடியாடு கொச்சை வயமே.
2.083. 1
நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும். 
2368 விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல 
விகிர்தத் துருக்கொள் விமலன் 
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் 
தகவைத்த சோதி பதிதான் 
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து 
கமலத்து வைகும் வயல்சூழ் 
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் 
வளர்கின்ற கொச்சை வயமே.
2.083. 2
விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப்பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும். 
2369 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை 
களைவிக்கும் எங்கள் பரமன் 
இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் 
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு 
நளிர்சோலை கோலு கனகக் 
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல 
மறையோது கொச்சை வயமே.
2.083. 3
படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம், மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப்பறவைகள் வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சை வயமாகும். 
2370 எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து 
முயல்வுற்ற சிந்தை முடுகிப் 
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு 
பணிவுற்ற பாதர் பதிதான் 
மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி 
வயல்பாய வாளை குழுமிக் 
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன 
வளர்கின்ற கொச்சை வயமே.
2.083. 4
எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரிசையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும். 
2371 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர 
னொடுதோழ மைக்கொள் பகவன் 
இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் 
இறைவன் னிடங்கொள் பதிதான் 
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் 
வளர் தூம மோடி யணவிக் 
குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து 
நிறைகின்ற கொச்சை வயமே.
2.083. 5
பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருமகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக் கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும். 
2372 புலியதள் கோவணங்க ளுடையாடை யாக 
வுடையா னினைக்கு மளவில் 
நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத 
னலமா விருந்த நகர்தான் 
கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை 
யுடையார் நிறைந்து வளரப் 
பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு 
வரைமேவு கொச்சை வயமே.
2.083. 6
புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும். 
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.083.7
2373 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் 
முடியோடு தோள்க ணெரியப் 
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ 
டுடனாடி மேய பதிதான் 
இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட 
விடுமூச லன்ன கமுகின் 
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க 
ளடிதேடு கொச்சை வயமே.
2.083. 8
மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும், பேய்களோடு உடனாடி மகிழ்பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல்குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத்தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும். 
2374 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய 
முழுதுண்ட மாலு மிகலிக் 
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து 
மறியாத சோதி பதிதான் 
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து 
விரைதேர போது மதுவிற் 
புண் ரி கங்களோடு குமுதம் மலர்ந்து 
வயன்மேவு கொச்சை வயமே.
2.083. 9
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும். 
2375 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட 
ரிடுசீவ ரத்தி னுடையார் 
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல 
விகிர்தத் துருக்கொள் விமலன் 
பையுடை நாகவாயில் எயிறார மிக்க 
குரவம் பயின்று மலரச் 
செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து 
மணநாறு கொச்சை வயமே.
2.083. 10
கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளையாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய திருச்சிற்றம்பலம் சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும். 
2376 இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை 
யுலகங்க ளேழு முடனே 
மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி 
யினிதா விருந்த மணியைக் 
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த 
தமிழ்மாலை பாடுமவர் போய் 
அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் 
அழகா விருப்ப தறிவே.
2.083. 11
எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறைவற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர். 
திருச்சிற்றம்பலம்

2.083.திருக்கொச்சைவயம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

2367 நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில் சேலன கண்ணிவண்ண மொருகூறுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான் வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின் சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே.2.083. 1
நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும். 

2368 விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான் மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ் கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.2.083. 2
விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப்பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும். 

2369 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் இடமாய வேர்கொள் பதிதான்நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு நளிர்சோலை கோலு கனகக் குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே.2.083. 3
படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம், மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப்பறவைகள் வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சை வயமாகும். 

2370 எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகிப் பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக் குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே.2.083. 4
எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரிசையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும். 

2371 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன் இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் னிடங்கொள் பதிதான் முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர் தூம மோடி யணவிக் குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.2.083. 5
பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருமகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக் கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும். 

2372 புலியதள் கோவணங்க ளுடையாடை யாக வுடையா னினைக்கு மளவில் நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத னலமா விருந்த நகர்தான் கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப் பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே.2.083. 6
புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும். 

இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.083.7

2373 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் முடியோடு தோள்க ணெரியப் பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ டுடனாடி மேய பதிதான் இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட விடுமூச லன்ன கமுகின் குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க ளடிதேடு கொச்சை வயமே.2.083. 8
மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும், பேய்களோடு உடனாடி மகிழ்பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல்குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத்தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும். 

2374 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலு மிகலிக் கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து மறியாத சோதி பதிதான் நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேர போது மதுவிற் புண் ரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயன்மேவு கொச்சை வயமே.2.083. 9
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும். 

2375 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட ரிடுசீவ ரத்தி னுடையார் மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச் செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே.2.083. 10
கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளையாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய திருச்சிற்றம்பலம் சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும். 

2376 இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை யுலகங்க ளேழு முடனே மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி யினிதா விருந்த மணியைக் குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர் போய் அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் அழகா விருப்ப தறிவே.2.083. 11
எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறைவற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.