LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

குறுந்தொகை பகுதி -5

 

101. குறிஞ்சி - தலைவன் கூற்று
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள் 5
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.  
- பரூஉ மோவாய்ப் பதுமனார்.  
102. நெய்தல் - தலைவி கூற்று
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.  
- அவ்வையார்.  
103. நெய்தல் - தலைவி கூற்று
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர் 5
வாழேன் போல்வல் தோழி யானே.  
- வாயிலான் தேவனார்.  
104. பாலை - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே. 5
- காவன் முல்லைப்பூதனார்.  
105. குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை 5
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.  
- நக்கீரர்.  
106. குறிஞ்சி - தலைவி கூற்று
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு 5
தான்மணந் தனையமென விடுகந் தூதே.  
- கபிலர்.  
107. மருதம் - தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 5
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.  
- மதுரைக் கண்ணனார்.  
108. முல்லை - தலைவி கூற்று
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே. 5
- வாயிலான் தேவனார்.  
109. நெய்தல் - தோழி கூற்று
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.  
- நம்பி குட்டுவனார்.  
110. முல்லை - தலைவி கூற்று
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த 5
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே.  
- கிள்ளிமங்கலங்கிழார்.  
111. குறிஞ்சி - தோழி கூற்று
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 5
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.  
- தீன்மதி நாகனார்.  
112. குறிஞ்சி - தலைவி கூற்று
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. 5
- ஆலத்தூர் கிழார்.  
113. மருதம் - தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் 5
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.  
- மாதீர்த்தனார்.  
114. நெய்தல் - தோழி கூற்று
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே. 5
- பொன்னாகனார்.  
115. குறிஞ்சி - தோழி கூற்று
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும் 5
நன்மலை நாட நின்னல திலளே.  
- கபிலர்.  
116. குறிஞ்சி - தலைவன் கூற்று
யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.  
- இளங்கீரனார்.  
117. நெய்தல் - தோழி கூற்று
மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக 5
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.  
- குன்றியனார்.  
118. நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே. 5
- நன்னாகையார்.  
119. குறிஞ்சி - தலைவன் கூற்று
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.  
- சத்திநாதனார்.  
120. குறிஞ்சி - தலைவன் கூற்று
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.  
- பரணர்.  
121. குறிஞ்சி - தலைவி கூற்று
மெய்யே வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத் 5
தாம்பசந் தனஎன் தடமென் தோளே.  
- கபிலர்.  
122. நெய்தல் - தலைவி கூற்று
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.  
- ஓரம் போகியார்.  
123. நெய்தல் - தோழி கூற்று
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. 5
- ஐயூர் முடவனார்.  
124. பாலை - தோழி கூற்று
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  
125. நெய்தல் - தலைவி கூற்று
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை 5
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.  
- அம்மூவனார்.  

101. குறிஞ்சி - தலைவன் கூற்று
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்இரண்டும் தூக்கிற் சீர்சா லாவேபூப்போல் உண்கண் பொன்போல் மேனிமாண்வரி அல்குற் குறுமகள் 5தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.  - பரூஉ மோவாய்ப் பதுமனார்.  


102. நெய்தல் - தலைவி கூற்று
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாதிருப்பினெம் அளவைத் தன்றே வருத்திவான்றோய் வற்றே காமம்சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.  - அவ்வையார்.  


103. நெய்தல் - தலைவி கூற்று
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்வாரார் போல்வர்நங் காதலர் 5வாழேன் போல்வல் தோழி யானே.  - வாயிலான் தேவனார்.  


104. பாலை - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி காதலர்நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்தாளித் தண்பவர் நாளா மேயும்பனிபடு நாளே பிரிந்தனர்பிரியும் நாளும் பலவா குபவே. 5- காவன் முல்லைப்பூதனார்.  


105. குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்சூர்மலை நாடன் கேண்மை 5நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.  - நக்கீரர்.  
106. குறிஞ்சி - தலைவி கூற்று
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்வரையிழி அருவியின் தோன்றும் நாடன்தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்வந்தன்று வாழி தோழி நாமும்நெய்பெய் தீயின் எதிர்கொண்டு 5தான்மணந் தனையமென விடுகந் தூதே.  - கபிலர்.  


107. மருதம் - தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்னதொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 5யாணர்ஊரன் தன்னொடு வதிந்தஏம இன்துயில் எடுப்பி யோயே.  - மதுரைக் கண்ணனார்.  


108. முல்லை - தலைவி கூற்று
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்கறவை கன்றுவயிற் படரப் புறவிற்பாசிலை முல்லை ஆசில் வான்பூச்செவ்வான் செவ்வி கொண்டன்றுஉய்யேன் போல்வல் தோழி யானே. 5- வாயிலான் தேவனார்.  


109. நெய்தல் - தோழி கூற்று
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளைபுணரி இகுதிரை தரூஉந் துறைவன்புணரிய இருந்த ஞான்றும்இன்னது மன்னோ நன்னுதற் கவினே.  - நம்பி குட்டுவனார்.  


110. முல்லை - தலைவி கூற்று
வாரா ராயினும் வரினும் அவர்நமக்குயாரா கியரோ தோழி நீரநீலப் பைம்போ துளரிப் புதலபீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டிநுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த 5வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்றுஇன்னா தெறிதரும் வாடையொடுஎன்னா யினள்கொல் என்னா தோரே.  - கிள்ளிமங்கலங்கிழார்.  


111. குறிஞ்சி - தோழி கூற்று
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்கூழை இரும்பிடிக் கைகரந் தன்னகேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 5வல்லே வருக தோழிநம்இல்லோர் பெருநகை காணிய சிறிதே.  - தீன்மதி நாகனார்.  


112. குறிஞ்சி - தலைவி கூற்று
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்எள்ளற விடினே உள்ளது நாணேபெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅநாருடை ஒசியல் அற்றேகண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. 5- ஆலத்தூர் கிழார்.  


113. மருதம் - தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்சேய்த்தும் அன்றே சிறுகான் யாறேஇரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் 5ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.  - மாதீர்த்தனார்.  


114. நெய்தல் - தோழி கூற்று
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பிநின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்கசெல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்ஆரல் அருந்த வயிற்றநாரை மிதிக்கும் என்மகள் நுதலே. 5- பொன்னாகனார்.  


115. குறிஞ்சி - தோழி கூற்று
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரேஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டுபுலவி தீர அளிமதி இலைகவர்பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்மென்னடை மரையா துஞ்சும் 5நன்மலை நாட நின்னல திலளே.  - கபிலர்.  


116. குறிஞ்சி - தலைவன் கூற்று
யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறைநுண்மணல் அறல்வார்ந் தன்னநன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.  - இளங்கீரனார்.  


117. நெய்தல் - தோழி கூற்று
மாரி ஆம்ப லன்ன கொக்கின்பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டுகண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்வாரா தமையினும் அமைக 5சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.  - குன்றியனார்.  


118. நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் மாவும் புலம்பொடு வதியநள்ளென வந்த நாரில் மாலைப்பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்வருவீர் உளீரோ எனவும்வாரார் தோழிநங் காத லோரே. 5- நன்னாகையார்.  


119. குறிஞ்சி - தலைவன் கூற்று
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளைகான யானை அணங்கி யாஅங்குஇளையள் முளைவாள் எயிற்றள்வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.  - சத்திநாதனார்.  


120. குறிஞ்சி - தலைவன் கூற்று
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்குஅரிதுவேட் டனையால் நெஞ்சே காதலிநல்லள் ஆகுதல் அறிந்தாங்குஅரியள் ஆகுதல் அறியா தோயே.  - பரணர்.  


121. குறிஞ்சி - தலைவி கூற்று
மெய்யே வாழி தோழி சாரல்மைபட் டன்ன மாமுக முசுக்கலைஆற்றப் பாயாத் தப்பல் ஏற்றகோட்டொடு போகி யாங்கு நாடன்தான்குறி வாயாத் தப்பற்குத் 5தாம்பசந் தனஎன் தடமென் தோளே.  - கபிலர்.  


122. நெய்தல் - தலைவி கூற்று
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்னகுண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியேவந்தன்று வாழியோ மாலைஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.  - ஓரம் போகியார்.  


123. நெய்தல் - தோழி கூற்று
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்பஇன்னும் வாரார் வரூஉம்பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. 5- ஐயூர் முடவனார்.  


124. பாலை - தோழி கூற்று
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலைஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடுஇன்னா என்றி ராயின்இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.  - பாலைபாடிய பெருங்கடுங்கோ.  


125. நெய்தல் - தலைவி கூற்று
இலங்குவளை நெகிழச் சாஅ யானேஉளெனே வாழி தோழி சாரல்தழையணி அல்குல் மகளி ருள்ளும்விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்பறைவலந் தப்பிய பைதல் நாரை 5திரைதோய் வாங்குசினை யிருக்கும்தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.  - அம்மூவனார்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.