LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

குறுந்தொகை பகுதி -6

 

126. முல்லை - தலைவி கூற்று
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே. 5
- ஒக்கூர் மாசாத்தியார்.  
127. மருதம் - தோழி கூற்று
குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம் 5
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.  
- ஓரம் போகியார்.  
128. நெய்தல் - தலைவன் கூற்று
குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயல் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 5
- பரணர்.  
129. குறிஞ்சி - தலைவன் கூற்று
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் 5
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.  
- கோப்பெருஞ்சோழன்.  
130. பாலை - தோழி கூற்று
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 5
- வெள்ளி வீதியார்.  
131. பாலை - தலைவன் கூற்று
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப் 5
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.  
- ஒரேருழவனார்.  
132. குறிஞ்சி - தலைவன் கூற்று
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன 5
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.  
- சிறைக்குடியாந்தையார்.  
133. குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே. 5
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.  
134. குறிஞ்சி - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி 5
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.  
- கோவேங்கைப் பெருங்கதவனார்.  
135. பாலை - தோழி கூற்று
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.  
- பாலைபாடிய பெருங் கடுங்கோ.  
136. குறிஞ்சி - தலைவன் கூற்று
காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. 5
- மிளைப்பெருங் கந்தனார்.  
137. பாலை - தலைவன் கூற்று
மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.  
- பாலை பாடிய பெருங் கடுங்கோ.  
138. மருதம் - தோழி கூற்று
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. 5
- கொல்லன் அழிசி.  
139. மருதம் - தோழி கூற்று
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு 5
வாரல் வாழிய ரையவெந் தெருவே.  
- ஒக்கூர் மாசாத்தியார்.  
140. பாலை - தலைவி கூற்று
வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 5
- அள்ளூர் நன்முல்லையார்.  
141. குறிஞ்சி - தலைவி கூற்று
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை 5
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.  
- மதுரைப் பெருங்கொல்லனார்.  
142. குறிஞ்சி - தலைவன் கூற்று
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. 5
- கபிலர்.  
143. குறிஞ்சி - தோழி கூற்று
அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் 5
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.  
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.  
144. பாலை - செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ 5
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.  
- மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.  
145. நெய்தல் - தலைவி கூற்று
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 5
- கொல்லனழிசியார்.  
146. குறிஞ்சி - தோழி கூற்று
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 5
- வெள்ளி வீதியார்.  
147. பாலை - தலைவன் கூற்று
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே. 5
- கோப்பெருஞ் சோழன்.  
148. முல்லை - தலைவி கூற்று
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்
காரன் றென்றி யாயிற் 5
கனவோ மற்றிது வினவுவல் யானே.  
- இளங் கீரந்தையார்.  
149. பாலை - தலைவி கூற்று
அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக் 5
காம நெரிதரக் கைந்நில் லாவே.  
- வெள்ளி வீதியார்.  
150. குறிஞ்சி - தலைவி கூற்று
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் 5
- மாடலூர் கிழார்.  

126. முல்லை - தலைவி கூற்று
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்இவணும் வாரார் எவண ரோவெனப்பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்தொகுமுகை இலங்கெயி றாகநகுமே தோழி நறுந்தண் காரே. 5- ஒக்கூர் மாசாத்தியார்.  


127. மருதம் - தோழி கூற்று
குருகுகொளக் குளித்த கெண்டை அயலதுஉருகெழு தாமரை வான்முகை வெரூஉம்கழனியம் படப்பைக் காஞ்சி யூரஒருநின் பாணன் பொய்ய னாகஉள்ள பாணர் எல்லாம் 5கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.  - ஓரம் போகியார்.  


128. நெய்தல் - தலைவன் கூற்று
குணகடல் திரையது பறைதபு நாரைதிண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறைஅயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்சேயல் அரியோட் படர்திநோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 5- பரணர்.  


129. குறிஞ்சி - தலைவன் கூற்று
எலுவ சிறாஅர் ஏமுறு நண்பபுலவர் தோழ கேளா யத்தைமாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் 5புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.  - கோப்பெருஞ்சோழன்.  


130. பாலை - தோழி கூற்று
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்குடிமுறை குடிமுறை தேரிற்கெடுநரும் உளரோநம் காதலோரே. 5- வெள்ளி வீதியார்.  


131. பாலை - தலைவன் கூற்று
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்பேரமர்க் கண்ணி யிருந்த ஊரேநெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சேஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்துஓரேர் உழவன் போலப் 5பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.  - ஒரேருழவனார்.  


132. குறிஞ்சி - தலைவன் கூற்று
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளேயாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவிதாய்காண் விருப்பி னன்ன 5சாஅய்நோக் கினளே மாஅ யோளே.  - சிறைக்குடியாந்தையார்.  


133. குறிஞ்சி - தலைவி கூற்று


புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைகிளிகுறைத் துண்ட கூழை யிருவிபெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்உரஞ் செத்தும் உளெனே தோழியென்நலம்புதி துண்ட புலம்பி னானே. 5- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.  


134. குறிஞ்சி - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி நம்மொடுபிரிவின் றாயின் நன்றுமற் றில்லகுறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி 5நிலங்கொள் பாம்பின் இழிதரும்விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.  - கோவேங்கைப் பெருங்கதவனார்.  


135. பாலை - தோழி கூற்று
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்மனையுறை மகளிர்க் காடவர் உயிரெனநமக்குரைத் தோருந் தாமேஅழாஅல் தோழி அழுங்குவர் செலவே.  - பாலைபாடிய பெருங் கடுங்கோ.  


136. குறிஞ்சி - தலைவன் கூற்று
காமங் காமம் என்ப காமம்அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்கடுத்தலுந் தணிதலும் இன்றே யானைகுளகுமென் றாள்மதம் போலப்பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. 5- மிளைப்பெருங் கந்தனார்.  


137. பாலை - தலைவன் கூற்று
மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்பநிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்திரவலர் வாரா வைகல்பலவா குகயான் செலவுறு தகவே.  - பாலை பாடிய பெருங் கடுங்கோ.  


138. மருதம் - தோழி கூற்று


கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமேஎம்மி லயல தேழி லும்பர்மயிலடி யிலைய மாக்குர னொச்சிஅணிமிகு மென்கொம் பூழ்த்தமணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. 5- கொல்லன் அழிசி.  


139. மருதம் - தோழி கூற்று
மனையுறை கோழிக் குறுங்காற் பேடைவேலி வெருகின மாலை யுற்றெனப்புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇயபைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கின்னா திசைக்கும் அம்பலொடு 5வாரல் வாழிய ரையவெந் தெருவே.  - ஒக்கூர் மாசாத்தியார்.  


140. பாலை - தலைவி கூற்று
வேதின வெரிநின் ஓதிமுது போத்துஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்சுரனே சென்றனர் காதலர் உரனழிந்துஈங்கியான் தாங்கிய எவ்வம்யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 5- அள்ளூர் நன்முல்லையார்.  


141. குறிஞ்சி - தலைவி கூற்று
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்செல்கென் றோளே அன்னை எனநீசொல்லின் எவனோ தோழி கொல்லைநெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்தகுறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை 5பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்ஆரிரு ணடுநாள் வருதிசாரல் நாட வாரலோ எனவே.  - மதுரைப் பெருங்கொல்லனார்.  


142. குறிஞ்சி - தலைவன் கூற்று
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி கடியும் பூங்கட் பேதைதானறிந் தனளோ இலளோ பானாட்பள்ளி யானையி னுயிர்த்தென்உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. 5- கபிலர்.  


143. குறிஞ்சி - தோழி கூற்று
அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்பழியும் அஞ்சும் பயமலை நாடன்நில்லா மையே நிலையிற் றாகலின்நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் 5தங்குதற் குரிய தன்றுநின்அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.  - மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.  


144. பாலை - செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும் கடலவெண்டலைப் புணரி யாடியும் நன்றேபிரிவி லாய முரியதொன் றயரஇவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ 5சென்மழை தவழும் சென்னிவிண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.  - மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.  


145. நெய்தல் - தலைவி கூற்று
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடிகானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றிஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்துஞ்சா துறைநரொ டுசாவாத்துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 5- கொல்லனழிசியார்.  


146. குறிஞ்சி - தோழி கூற்று
அம்ம வாழி தோழி நம்மூர்ப்பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோதண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்நன்றுநன் றென்னு மாக்களோடின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 5- வெள்ளி வீதியார்.  


147. பாலை - தலைவன் கூற்று
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்னமயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமைநுண்பூண் மடந்தையைத் தந்தோய் போலஇன்றுயில் எடுப்புதி கனவேஎள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே. 5- கோப்பெருஞ் சோழன்.  


148. முல்லை - தலைவி கூற்று
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்ததவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்காசி னன்ன போதீன் கொன்றைகுருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்காரன் றென்றி யாயிற் 5கனவோ மற்றிது வினவுவல் யானே.  - இளங் கீரந்தையார்.  


149. பாலை - தலைவி கூற்று
அளிதோ தானே நாணே நம்மொடுநனிநீ டுழந்தன்று மன்னே இனியேவான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைதீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்தாங்கு மளவைத் தாங்கிக் 5காம நெரிதரக் கைந்நில் லாவே.  - வெள்ளி வீதியார்.  


150. குறிஞ்சி - தலைவி கூற்று
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழிவான மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்உள்ளின் உண்ணோய் மல்கும்புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் 5- மாடலூர் கிழார்.  

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.