LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-117

1.117.திருப்பிரமபுரம் - மொழிமாற்று 
பண் - வியாழக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
1259 காட தணிகலங் காரர வம்பதி
காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக் காதினிற்
றூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்
வில்லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம
புரத்தரரே.
1.117.1
பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அருளியவர். 
1260 கற்றைச் சடையது கங்கண முன்கையிற்
றிங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை
சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை
யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள்
வேதியரே.
1.117.2
கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர். 
1261 கூவிளங் கையது பேரி சடைமுடிக்
கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத்
துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாக
முரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய
புண்ணியரே.
1.117.3
இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற் பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர். 
1262 உரித்தது பாம்பைஎயுடன்மிசை யிட்டதோ
ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது
முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை
வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற்
றிருந்தவரே.
1.117.4
பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர். 
1263 கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை
குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக
ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு
மேந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை
சுந்தரரே.
1.117.5
வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச் சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று. 
1264 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர்
கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர்
கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர்
பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய
புண்ணியரே.
1.117.6
தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர். 
1265 காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற்
கழல்சிலம்பு
மாலது வேந்தன் மழுவது பாகம்
வளர்கொழுங்கோட்
டாலது வூர்வ ரடலேற் றிருப்ப
ரணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர
மேயவரே.
1.117.7
அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர். 
1266 நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர்
நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர்
மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன்
மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி
புண்ணியரே.
1.117.8
வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவ நகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக்குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார். 
1267 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த
திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி
குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர்
காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய
தத்துவரே.
1.117.9
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத் தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர். 
1268 அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான்
முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர்
தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர்
கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுண் மேய
கறைக்கண்டரே.
1.117.10
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியுள் விளங்கும் கறைக் கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன்முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும். 
1269 கையது வெண்குழை காதது சூல
மமணர் புத்தர்
எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ
ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது
மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய
கொற்றவரே.
1.117.11
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர். 
1270 கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய
கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ்
நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர்
தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ
லோகமதே.
1.117.12
உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

1.117.திருப்பிரமபுரம் - மொழிமாற்று 
பண் - வியாழக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

1259 காட தணிகலங் காரர வம்பதிகாலதனில்தோட தணிகுவர் சுந்தரக் காதினிற்றூச்சிலம்பர்வேட தணிவர் விசயற் குருவம்வில்லுங்கொடுப்பர்பீட தணிமணி மாடப் பிரமபுரத்தரரே.1.117.1
பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அருளியவர். 

1260 கற்றைச் சடையது கங்கண முன்கையிற்றிங்கள்கங்கைபற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலைசுட்டதுபண்டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றையெழில்விளங்கும்வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள்வேதியரே.1.117.2
கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர். 

1261 கூவிளங் கையது பேரி சடைமுடிக்கூட்டத்ததுதூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத்துத்திநாகம்ஏவிளங் குந்நுத லாளையும் பாகமுரித்தனரின்பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவியபுண்ணியரே.1.117.3
இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற் பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர். 

1262 உரித்தது பாம்பைஎயுடன்மிசை யிட்டதோரொண்களிற்றைஎரித்ததொ ராமையை யின்புறப் பூண்டதுமுப்புரத்தைச்செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனைவேள்விபன்னூல்விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற்றிருந்தவரே.1.117.4
பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர். 

1263 கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கைகுறுந்தாளனவிட்டுவர் பூதங் கலப்பில ரின்புகழென்புலவின்மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமுமேந்துவர்வான்தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறைசுந்தரரே.1.117.5
வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச் சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று. 

1264 சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர்கோவணந்தங்கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர்கொக்கிறகும்பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர்பேரெழிலார்பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவியபுண்ணியரே.1.117.6
தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர். 

1265 காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற்கழல்சிலம்புமாலது வேந்தன் மழுவது பாகம்வளர்கொழுங்கோட்டாலது வூர்வ ரடலேற் றிருப்பரணிமணிநீர்ச்சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரமேயவரே.1.117.7
அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர். 

1266 நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர்நெற்றியின்கண்மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர்மாமுருகன்விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன்மாதவர்வாழ்பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணிபுண்ணியரே.1.117.8
வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவ நகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக்குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார். 

1267 இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்ததிரலையின்னாள்கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணிகுமைபெற்றதுகலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர்காட்டகத்துச்சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவியதத்துவரே.1.117.9
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத் தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர். 

1268 அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான்முடிகண்டிலன்கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர்தோலுடுப்பர்பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர்கூறுடையர்கடியணி யும்பொழிற் காழியுண் மேயகறைக்கண்டரே.1.117.10
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியுள் விளங்கும் கறைக் கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன்முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும். 

1269 கையது வெண்குழை காதது சூலமமணர் புத்தர்எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொரேனக்கொம்புமெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பதுமேதகையகொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவியகொற்றவரே.1.117.11
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர். 

1270 கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவியகடவுடன்னைநல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ்நன்குணரச்சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர்தங்களொடும்செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவலோகமதே.1.117.12
உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.