LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-84

2.084.திருநனிபள்ளி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நற்றுணையப்பர். 
தேவியார் - பர்வதராசபுத்திரி. 
2377 காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை 
படர்தொடரி கள்ளி கவினிச் 
சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த 
சிவன்மேய சோலை நகர்தான் 
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
குதிகொள்ள வள்ளை துவள 
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 1
நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய, சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும். 
2378 சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் 
வளர்திங்கள் கண்ணி அயலே 
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை 
யிறைவன் னிடங்கொள் பதிதான் 
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து 
மணநாறு நீலம் மலரும் 
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை 
நனிபள்ளி போலும் நமர்காள்
2.084. 2
சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீநிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும். 
2379 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் 
ஒழிபா டிலாத பெருமான் 
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை 
யிடமாய காதல் நகர்தான் 
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் 
விடுபோ தலர்ந்த விரைசூழ் 
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 3
அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத் தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும். 
2380 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு 
தலைமாலை யோடு குலவி 
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக 
வுடையா னுகந்த நகர்தான் 
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட 
பெடைவண்டு தானும் முரல 
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 4
குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும். 
2381 தோடொரு காதனாகி யொருகா திலங்கு 
சுரிசங்கு நின்று புரளக் 
காடிட மாகநின்று கனலாடும் எந்தை 
யிடமாய காதல் நகர்தான் 
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று 
வெறிநீர் தௌப்ப விரலால் 
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 5
ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதிமுறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தௌத்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடுமுழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும். 
2382 மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து 
மலையான் மடந்தை மணிபொன் 
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை 
பெருமான் அமர்ந்த நகர்தான் 
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப 
அகிலுந்தி யொண்பொன் இடறி 
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084.
மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளிய நகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும். 
2383 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் 
கொடுகொட்டிவீணை முரல 
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த 
பெருமான் உகந்த நகர்தான் 
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் 
பணிவார்கள் பாடல் பெருகி 
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 7
பெருமை பொருந்திய தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய், வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர், புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும், பணிந்து போற்றுவார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழபடப்பைகளை உடைய நனிபள்ளியாகும். 
2384 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று 
மதியா வரக்கன் வலியோ 
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த 
பெருமான் உகந்த நகர்தான் 
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை 
யெனநின்ற நீதி யதனை 
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 8
வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர், கீழுலகிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதிவடிவினனாகிய அவனை நன்மைமிக்க தாண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும். 
2385 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற 
தொருநீர்மை சீர்மை நினையார் 
அறவுறு வேதநாவன் அயனோடுமாலு 
மறியாத அண்ணல் நகர்தான் 
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை 
புனைகொன்றை துன்று பொதுளி 
நறவிரி போதுதாது புதுவாச நாறும் 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 9
நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாதவராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர், முல்லை நிலத்தில் விரிந்த முல்லை, மல்லிகை, அசோகு, புன்னை, கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் புத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும். 
2386 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் 
இடவுண்டு பட்ட அமணும் 
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் 
குணமின்றி நின்ற வடிவும் 
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் 
விடையான் உகந்த நகர்தான் 
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு 
நனிபள்ளி போலும் நமர்காள்.
2.084. 10
அன்னமாக, வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும், மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவனவற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர், தௌந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும். 
2387 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் 
கமழ்காழி யென்று கருதப் 
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த 
பதியான ஞான முனிவன் 
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் 
இசையா லுரைத்த பனுவல் 
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க 
வினை கெடுதலாணை நமதே.
2.084. 11
கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். 
திருச்சிற்றம்பலம்

2.084.திருநனிபள்ளி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நற்றுணையப்பர். தேவியார் - பர்வதராசபுத்திரி. 

2377 காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 1
நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய, சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும். 

2378 சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான் மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும் நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்2.084. 2
சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீநிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும். 

2379 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான் கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான் வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ் நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 3
அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத் தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும். 

2380 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான் குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 4
குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும். 

2381 தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக் காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான் வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தௌப்ப விரலால் நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 5
ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதிமுறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தௌத்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடுமுழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும். 

2382 மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன் ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.2.084.
மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளிய நகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும். 

2383 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 7
பெருமை பொருந்திய தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய், வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர், புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும், பணிந்து போற்றுவார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழபடப்பைகளை உடைய நனிபள்ளியாகும். 

2384 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான் நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 8
வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர், கீழுலகிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதிவடிவினனாகிய அவனை நன்மைமிக்க தாண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும். 

2385 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார் அறவுறு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான் புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 9
நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாதவராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர், முல்லை நிலத்தில் விரிந்த முல்லை, மல்லிகை, அசோகு, புன்னை, கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் புத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும். 

2386 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும் மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.2.084. 10
அன்னமாக, வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும், மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவனவற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர், தௌந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும். 

2387 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப் படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன் இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே.2.084. 11
கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.