LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை-இரண்டாம் திருமுறை-85

2.085.கோளாறு திருப்பதிகம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது. 
2388 வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் 
மிகநல்ல வீணை தடவி 
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
சனிபாம் பிரண்டு முடனே 
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 1
மூங்கில்போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும். 
2389 என்பொடு கொம்பொடாமை யினவமார் பிலங்க 
எருதேறி யேழை யுடனே 
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 
உடனாய நாள்க ளவைதாம் 
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 2
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். 
2390 உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து 
உமையோடும் வெள்ளை விடைமேல் 
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி 
திசைதய்வ மான பலவும் 
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 3
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும். 
2391 மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து 
மறையோது மெங்கள் பரமன் 
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் 
கொடுநோய்க ளான பலவும் 
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 4
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும். 
2392 நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் 
விடையேறு நங்கள் பரமன் 
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் 
மிகையான பூத மவையும் 
அஞ்சிடு நல்லநல்ல வவை நல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085.5
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்தவன்னிஇலை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். 
2393 வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் 
மடவாள் தனோடு உடனாய் 
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் 
கொடுநாக மோடு கரடி 
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 6
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தேலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலியகுரங்கு, புலி., கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும். 
2394 செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக 
விடையேறு செல்வ னடைவார் 
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் 
வினையான வந்து நலியா 
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 7
செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமைநங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவபிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத்தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும். 
2395 வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து 
மடவாள் தனோடு உடனாய் 
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் 
இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 8
மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும். 
2396 பலபல வேடமாகும் பரனாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன் 
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் 
வருகால மான பலவும் 
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085.9
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும். 
2397 கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு 
குணமாய வேட விகிர்தன் 
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் 
திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
2.085. 10
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும். 
2398 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே.
2.085. 11
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை. 
திருச்சிற்றம்பலம்

2.085.கோளாறு திருப்பதிகம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது. 

2388 வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 1
மூங்கில்போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும். 

2389 என்பொடு கொம்பொடாமை யினவமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 2
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். 

2390 உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 3
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும். 

2391 மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 4
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும். 

2392 நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல வவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085.5
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்தவன்னிஇலை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். 

2393 வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 6
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தேலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலியகுரங்கு, புலி., கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும். 

2394 செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 7
செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமைநங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவபிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத்தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும். 

2395 வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடு உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 8
மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும். 

2396 பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085.9
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும். 

2397 கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.2.085. 10
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும். 

2398 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னிவளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.2.085. 11
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.