|
||||||||
கோதுமை தோசை (wheat dosa) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை பொடி, புதினா பொடி – தலா அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். 2.பிறகு தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு ஸ்பூன் மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|