LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-86

2.086.திருநாரையூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சௌந்தரேசர். 
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 
2399 உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம 
செயறீங்கு குற்ற முலகில் 
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண 
மிகவேத்தி நித்த நினைமின் 
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து 
வளர்கங்குல் நங்கை வெருவத் 
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086.1
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ்சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக. 
2400 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற 
பிணிநோ யொருங்கு முயரும் 
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி 
விதியான வேத விகிர்தன் 
கானிடை யாடிபூதப் படையா னியங்கு 
விடையா னிலங்கு முடிமேல் 
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு 
திருநாரை யூர்கை தொழவே.
2.086.2
உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினளனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும். 
2401 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் 
றுயருற்ற தீங்கு விரவிப் 
பாரிடை மௌளவந்து பழியுற்ற வார்த்தை 
யொழிவுற்ற வண்ண மகலும் 
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று 
புகழ்வானு ளோர்கள் புணரும் 
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த 
திருநாரை யூர்கை தொழவே.
2.086.3
திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மௌளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும். 
2402 தீயுறு வாயவாக்கை யதுபற்றி வாழும் 
வினைசெற்ற வுற்ற வுலகின் 
தாயுற தன்மையாய தலைவன்றன் நாமம் 
நிலையாக நின்று மருவும் 
பேயுற வாயகானில் நடமாடி கோல 
விடமுண்ட கண்டன் முடிமேல் 
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவ.
2.086. 4
இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடனமாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும். 
2403 வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் 
தவமாய தன்மை வரும்வான் 
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு 
விரிநூலர் விண்ணு நிலனும் 
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி 
யமையாத காத லொடுசேர் 
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086. 5
மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும். 
2404 உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் 
உணர்வாக்கும் உண்மை யுலகில் 
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் 
நிறைவாற்று நேசம் வளரும் மறைவளர் 
நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் 
அரவார்த்த வண்ணல் கழலே 
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற 
திருநாரை யூர்கை தொழவே.
2.086.6
வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும. நேசம் வளரும். 
2405 தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து 
வருதிக் குழன்ற வுடலின் 
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செந்று 
நினைவொன்று சிந்தை பெருகும் 
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் 
சரமுன் றெரிந்த அவுணர் 
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086. 7
முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங்களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும். 
2406 உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற 
நனியஞ்சு மாத லுறநீர் 
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் 
இழிபா டிலாத கடலின் 
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் 
மழியத் தடக்கை முடிகள் 
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086. 8
அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர்களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக. 
2407 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க 
பகைதீர்க்கு மேய வுடலில் 
தேறிய சிந்தைவாய்மை தௌவிக்க நின்ற 
கரவைக் கரந்து திகழும் 
சேறுயர் புவின்மேய பெருமானும் மற்றைத் 
திருமாலு நேட எரியாய்ச் 
சீறிய செம்யைமாகுஞ் சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086. 9
சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தௌந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும். 
2408 மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் 
வெளியாக்கு முன்னி யுணரும் 
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண 
மொலிபாடி யாடி பெருமை 
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் 
உரைமாயும் வண்ண மழியச் 
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
2.086. 10
சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளியாக்கும. ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள். 
2409 எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை 
பெருமானை யுள்கி நினையார் 
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழுவான் 
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் 
உரைமாலை பத்து மொழிவார் 
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க 
துளதென்பர் செம்மை யனிரே.
2.086. 11
தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர். 
திருச்சிற்றம்பலம்

2.086.திருநாரையூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சௌந்தரேசர். தேவியார் - திரிபுரசுந்தரியம்மை. 

2399 உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில் வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின் வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத் திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086.1
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ்சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக. 

2400 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும் வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன் கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல் தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.2.086.2
உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினளனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும். 

2401 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப் பாரிடை மௌளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும் போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும் தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.2.086.3
திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மௌளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும். 

2402 தீயுறு வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின் தாயுற தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும் பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல் தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவ.2.086. 4
இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடனமாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும். 

2403 வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான் மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும் இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர் திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086. 5
மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும். 

2404 உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில் குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும் மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.2.086.6
வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும. நேசம் வளரும். 

2405 தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின் இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செந்று நினைவொன்று சிந்தை பெருகும் முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர் சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086. 7
முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங்களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும். 

2406 உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர் மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின் அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள் திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086. 8
அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர்களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக. 

2407 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தௌவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும் சேறுயர் புவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச் சீறிய செம்யைமாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086. 9
சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தௌந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும். 

2408 மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும் படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.2.086. 10
சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளியாக்கும. ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள். 

2409 எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார் திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான் பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யனிரே.2.086. 11
தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.