LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-88

2.088.திருமுல்லைவாயில் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனநாதர். 
தேவியார் - கோதையம்மை. 
2421 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் 
நடமன்னு துன்னு சுடரோன் 
ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த 
உமைபங்கன் எங்க ளரனூர் 
களிமண்டு சோலை கழனிக் கலந்த 
கமலங்கள் தங்கு மதுவிற் 
தௌமண்டி யுண்டு சிறைவண்டு பாடும் 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 1
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தௌவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும். 
2422 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் 
அயனைப் படைத்த பரமன் 
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு 
மரவிக்க நின்ற வரனூர் 
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி 
யவையோத மோத வெருவித் 
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 2
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும். 
2423 வாராத நாடன் வருவார்தம் வில்லின் 
உருமெல்கி நாளு முருகில் 
ஆராத வின்ப னகலாத அன்பன் 
அருண்மேவி நின்ற வரனூர் 
பேராத சோதி பிரியாத மார்பின் 
அலர்மேவு பேதை பிரியாள் 
தீராத காத னெதிநேர நீடு 
திருமுல்லை வாயி யிதுவே.
2.088. 3
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பன் அருள் பவன் அகலாத அன்புடையவன் அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்காத ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2424 ஒன்றொன்றொ டொன்று மொருநான்கொ டைந்து 
மிருமூன்றொ டேழு முடனாய் 
அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் 
அறியாமை நின்ற வரனூர் 
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று 
கொடியொன்றொ டொன்று குழுமிச் 
சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 4
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2425 கொம்பன்ன மின்னி னிடையாளொர் கூறன் 
விடைநாளு மேறு குழகன் 
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் 
மதியேறு சென்னி யரனூர் 
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் 
அணிகோ புரங்க ளழகார் 
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 5
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம் மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர், ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும். 
2426 ஊனேறு வேலி னுருவேறு கண்ணி 
யொளியேறு கொண்ட வொருவன் 
ஆனேற தேறி யழகேறு நீறன் 
அரவேறு பூணு மரனூர் 
மானேறு கொல்லை மயிலேறி வந்து 
குயிலேறு சோலை மருவித் 
தேனேறு மாவின் வளமேறி யாடு 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 6
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகுதரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணிகலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2427 நெஞ்சார நீடு நினைவாரை மூடு 
வினைதேய நின்ற நிமலன் 
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் 
அனலாடு மேனி யரனூர் 
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் 
உளதென்று வைகி வரினுஞ் 
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 7
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல்போன்றமேனியன் அவ் அவனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2428 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் 
முடிபத்து மிற்று நெரிய 
உரைவந்த பொன்னி னுருவந்த மேனி 
உமைபங்க னெங்க ளரனூர் 
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து 
மிளிர்கின்ற பொன்னி வடபால் 
திரைவந்து வந்து செறிதேற லாடு 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 8
கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனிய ளாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2429 மேலோடி நீடு விளையாடல் மேவு 
விரிநூலன் வேத முதல்வன் 
பாலாடு மேனி கரியானு முன்னி 
யவர்தேட நின்ற பரனூர் 
காலாடு நீல மலர்துன்றி நின்ற 
கதிரேறு செந்நெல் வயலிற் 
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088. 9
திருமேனி நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும். 
2430 பனைமல்கு திண்கை மதமா வுரித்த 
பரமன்ன நம்பன் அடியே 
நினைவன்ன சிந்தை யடையாத தேரர் 
அமண்மாய நின்ற வரனூர் 
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு 
முகுளங்ளெங்கு நெரியச் 
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு 
திருமுல்லை வாயி லிதுவே.
2.088.10
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமண தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 
2431 அணிகொண்ட கோதை யவணன்று மேத்த 
வருள்செய்த வெந்தை மருவார் 
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி 
திருமுல்லை வாயி லிதன்மேல் 
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான 
மிகுபந்தன் ஒண் தமிழ்களின் 
அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் 
அகல்வானம் ஆள்வர் மிகவே.
2.088. 11
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர். பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர். 
திருச்சிற்றம்பலம்

2.088.திருமுல்லைவாயில் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனநாதர். தேவியார் - கோதையம்மை. 

2421 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன் ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர் களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவிற் தௌமண்டி யுண்டு சிறைவண்டு பாடும் திருமுல்லை வாயி லிதுவே.2.088. 1
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தௌவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும். 

2422 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன் அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற வரனூர் உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி யவையோத மோத வெருவித் தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.2.088. 2
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும். 

2423 வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில் ஆராத வின்ப னகலாத அன்பன் அருண்மேவி நின்ற வரனூர் பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள் தீராத காத னெதிநேர நீடு திருமுல்லை வாயி யிதுவே.2.088. 3
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பன் அருள் பவன் அகலாத அன்புடையவன் அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்காத ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2424 ஒன்றொன்றொ டொன்று மொருநான்கொ டைந்து மிருமூன்றொ டேழு முடனாய் அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் அறியாமை நின்ற வரனூர் குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச் சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த திருமுல்லை வாயி லிதுவே.2.088. 4
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2425 கொம்பன்ன மின்னி னிடையாளொர் கூறன் விடைநாளு மேறு குழகன் நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி யரனூர் அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோ புரங்க ளழகார் செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லை வாயி லிதுவே.2.088. 5
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம் மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர், ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும். 

2426 ஊனேறு வேலி னுருவேறு கண்ணி யொளியேறு கொண்ட வொருவன் ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர் மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித் தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே.2.088. 6
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகுதரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணிகலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2427 நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன் அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர் மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ் செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.2.088. 7
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல்போன்றமேனியன் அவ் அவனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2428 வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய உரைவந்த பொன்னி னுருவந்த மேனி உமைபங்க னெங்க ளரனூர் வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே.2.088. 8
கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனிய ளாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2429 மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன் பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர் காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற் சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே.2.088. 9
திருமேனி நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும். 

2430 பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்பன் அடியே நினைவன்ன சிந்தை யடையாத தேரர் அமண்மாய நின்ற வரனூர் வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்ளெங்கு நெரியச் சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.2.088.10
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமண தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும். 

2431 அணிகொண்ட கோதை யவணன்று மேத்த வருள்செய்த வெந்தை மருவார் திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல் தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண் தமிழ்களின் அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.2.088. 11
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர். பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.