LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-89

2.089.திருக்கொச்சைவயம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
2432 அறையும் பூம்புன லோடும் 
ஆடர வச்சடை தன்மேற் 
பிறையுஞ் சூடுவர் மார்பிற் 
பெண்ணொரு பாக மமர்ந்தார் 
மறையி னொல்லொலி யோவா 
மந்திர வேள்வி யறாத 
குறைவி லந்தணர் வாழுங் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 1
வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். 
2433 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் 
மார்பினர் துன்னிய பூதக் 
கண்ணத்தர் வெங்கன லேந்திக் 
கங்குனின் றாடுவர் கேடில் 
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி 
யறாதவர் மாலெரி யோம்பும் 
வண்ணத்த வந்தணர் வாழுங் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089.2
வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்விகளைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மாபினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில் ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர். 
2434 பாலை யன்னவெண் ணீறு 
பூசுவர் பல்சடை தாழ 
மாலை யாடுவர் கீத 
மாமறை பாடுதன் மகிழ்வர் 
வேலை மால்கட லோதம் 
வெண்டிரை கரைமிசை விளங்குங் 
கோல மாமணி சிந்துங் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 3
வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ளமாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரைமிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர். 
2435 கடிகொள் கூவிள மத்தங் 
கமழ்சடை நெடுமுடிக் கணிவர் 
பொடிகள் பூசிய மார்பிற் 
புனைவர்நன் மங்கையொர் பங்கர் 
கடிகொ ணீடொலி சங்கி 
னொலியொடு கலையொலி துதைந்து 
கொடிக ளோங்கிய மாடக் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 4
மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலியோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர். 
2436 ஆடன் மாமதி யுடையார் 
ஆயின பாரிடஞ் சூழ 
வாடல் வெண்டலை யேந்தி 
வையக மிடுபலிக் குழல்வார் 
ஆடன் மாமட மஞ்ஞை 
யணிதிகழ் பேடையொ டாடிக் 
கூடு தண்பொழில் சூழ்ந்த 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 5
ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத்தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர். 
2437 மண்டு கங்கையும் அரவும் 
மல்கிய வளர்சடை தன்மேற் 
றுண்ட வெண்பிறை யணிவர் 
தொல்வரை வில்லது வாக 
விண்ட தானவ ரரணம் 
வெவ்வழ லெரிகொள விடைமேற் 
கொண்ட கோலம துடையார் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 6
கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத்துடன் காட்சி தருபவர். 
2438 அன்ற வானிழ லமர்ந்து 
வறவுரை நால்வர்க் கருளிப் 
பொன்றி னார்தலை யோட்டில் 
உண்பது பொருகட லிலங்கை 
வென்றி வேந்தனை யொல்க 
வூன்றிய விரலினர் வான்றோய் 
குன்ற மன்னபொன் மாடக் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089. 8
வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடுகளைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக்காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர். 
2439 சீர்கொண் மாமல ரானுஞ் 
செங்கண்மா லென்றிவ ரேத்த 
ஏர்கொள் வெவ்வழ லாகி 
எங்கும் உறநிமிர்ந் தாரும் 
பார்கொள் விண்ணழல் கானீர்ப் 
பண்பினர் பான்மொழி யோடுங் 
கூர்கொள் வேல்வல னேந்திக் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089.9
பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப்பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர். 
2440 குண்டர் வண்டுவ ராடை 
போர்த்ததொர் கொள்கை யினார்கள் 
மிண்டர் பேசிய பேச்சு 
மெய்யல மையணி கண்டன் 
பண்டை நம்வினை தீர்க்கும் 
பண்பின ரொண்கொடி யோடுங் 
கொண்டல் சேர்மணி மாடக் 
கொச்சை வயமமர்ந் தாரே.
2.089.10
குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந்தருளியிருப்பவர். 
2441 கொந்த ணிபொழில் சூழ்ந்த 
கொச்சை வயநகர் மேய 
அந்த ணன்அடி யேத்தும் 
அருமறை ஞானசம் பந்தன் 
சந்த மார்ந்தழ காய 
தண்டமிழ் மாலைவல் லோர்போய் 
முந்தி வானவ ரோடும் 
புகவலர் முனைகெட வினையே.
2.089. 11
கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.089.திருக்கொச்சைவயம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

2432 அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேற் பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவி லந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 1
வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். 

2433 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக் கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குனின் றாடுவர் கேடில் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் வண்ணத்த வந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.2.089.2
வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்விகளைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மாபினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில் ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர். 

2434 பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ மாலை யாடுவர் கீத மாமறை பாடுதன் மகிழ்வர் வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 3
வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ளமாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரைமிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர். 

2435 கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையொர் பங்கர் கடிகொ ணீடொலி சங்கி னொலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 4
மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலியோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர். 

2436 ஆடன் மாமதி யுடையார் ஆயின பாரிடஞ் சூழ வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் ஆடன் மாமட மஞ்ஞை யணிதிகழ் பேடையொ டாடிக் கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 5
ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத்தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர். 

2437 மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேற் றுண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக விண்ட தானவ ரரணம் வெவ்வழ லெரிகொள விடைமேற் கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 6
கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத்துடன் காட்சி தருபவர். 

2438 அன்ற வானிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் பொன்றி னார்தலை யோட்டில் உண்பது பொருகட லிலங்கை வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்றோய் குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.2.089. 8
வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடுகளைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக்காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர். 

2439 சீர்கொண் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த ஏர்கொள் வெவ்வழ லாகி எங்கும் உறநிமிர்ந் தாரும் பார்கொள் விண்ணழல் கானீர்ப் பண்பினர் பான்மொழி யோடுங் கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.2.089.9
பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப்பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர். 

2440 குண்டர் வண்டுவ ராடை போர்த்ததொர் கொள்கை யினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன் பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.2.089.10
குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந்தருளியிருப்பவர். 

2441 கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய அந்த ணன்அடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.2.089. 11
கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.