LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-91

2.091.திருமறைக்காடு 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
2453 பொங்கு வெண்மணற் கானற் 
பொருகடற் றிரைதவழ் முத்தம் 
கங்கு லாரிருள் போழுங் 
கலிமறைக் காடமர்ந் தார்தாம் 
திங்கள் சூடின ரேனுந் 
திரிபுர மெரித்தன ரேனும் 
எங்கு மெங்கள் பிரானார் 
புகழல திகழ்பழி யிலரே.
2.091. 1
பொங்கியது போன்ற வெண்மையான மணற்பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை. 
2454 கூனி ளம்பிறை சூடிக் 
கொடுவரித் தோலுடை யாடை 
ஆனி லங்கிள ரைந்தும் 
ஆடுவர் பூண்பது மரவம் 
கான லங்கழி யோதங் 
கரையொடு கதிர்மணி ததும்பத் 
தேன லங்கமழ் சோலைத் 
திருமறைக் காடமர்ந் தாரே.
2.091. 2
கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும். 
2455 நுண்ணி தாய்வெளி தாகி 
நூல்கிடந் திலங்குபொன் மார்பில் 
பண்ணி யாழென முரலும் 
பணிமொழி யுமையொரு பாகன் 
தண்ணி தாயவெள் ளருவி 
சலசல நுரைமணி ததும்பக் 
கண்ணி தானுமொர் பிறையார் 
கலிமறைக் காடமர்ந் தாரே.
2.091. 3
ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார் பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மையான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்டதோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார். 
2456 ஏழை வெண்குரு கயலே 
யிளம்பெடை தனதெனக் கருதித் 
தாழை வெண்மடற் புல்குந் 
தண்மறைக் காடமர்ந் தார்தாம் 
மாழை யங்கய லொண்கண் 
மலைமகள் கணவன தடியின் 
நீழ லேசர ணாக 
நினைபவர் வினைநலி விலரே.
2.091. 4
அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர். 
2457 அரவம் வீக்கிய அரையும் 
அதிர்கழல் தழுவிய அடியும் 
பரவ நாஞ்செய்த பாவம் 
பறைதர வருளுவர் பதிதான் 
மரவ நீடுயர் சோலை 
மழலைவண் டியாழ்செயு மறைக்காட் 
டிரவு மெல்லியும் பகலும் 
ஏத்துதல் குணமென லாமே.
2.091. 5
பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும். 
2458 பல்லி லோடுகை யேந்திப் 
பாடியு மாடியும் பலிதேர் 
அல்லல் வாழ்க்கைய ரேனும் 
அழகிய தறிவரெம் மடிகள் 
புல்ல மேறுவர் பூதம் 
புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் 
மல்கு வெண்டிரை ஓத 
மாமறைக் காடது தானே.
2.091. 6
பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும். 
2459 > நாகந் தான்கயி றாக 
நளிர்வரை யதற்குமத் தாகப் 
பாகந் தேவரொ டசுரர் 
படுகட லளறெழக் கடைய 
வேக நஞ்செழ வாங்கே 
வெருவொடு மிரிந்தெங்கு மோட 
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் 
ஆக்குவித் தான்மறைக் காடே.
2.091. 7
வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும். 
2460 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் 
தனதொரு பெருமையை யோரான் 
மிக்கு மேற்சென்று மலையை 
யெடுத்தலு மலைமகள் நடுங்க 
நக்குத் தன்றிரு விரலால் 
ஊன்றலும் நடுநடுத் தரக்கன் 
பக்க வாயும்விட் டலறப் 
பரிந்தவன் பதிமறைக் காடே.
2.091. 8
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும். 
2461 விண்ட மாமல ரோனும் 
விளங்கொளி யரவணை யானும் 
பண்டுங் காண்பரி தாய 
பரிசின னவனுறை பதிதான் 
கண்ட லங்கழி யோதங் 
கரையொடு கதிர்மணி ததும்ப 
வண்ட லங்கமழ் சோலை 
மாமறைக் காடது தானே.
2.091.9
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும். 
2462 பெரிய வாகிய குடையும் 
பீலியும் அவைவெயிற் கரவாக் 
கரிய மண்டைகை யேந்திக் 
கல்லென வுழிதருங் கழுக்கள் 
அரிய வாகவுண் டோது 
மவர்திற மொழிந்துநம் மடிகள் 
பெரிய சீர்மறைக் காடே 
பேணுமின் மனமுடை யீரே.
2.091. 10
பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக. 
2463 மையு லாம்பொழில் சூழ்ந்த 
மாமறைக் காடமர்ந் தாரைக் 
கையி னாற்றொழு தெழுவான் 
காழியுண் ஞானசம் பந்தன் 
செய்த செந்தமிழ் பத்துஞ் 
சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப் 
பொய்யில் வானவ ரோடும் 
புகவலர் கொளவலர் புகழே.
2.091. 11
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர். 
திருச்சிற்றம்பலம்

2.091.திருமறைக்காடு 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 

2453 பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம் கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம் திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும் எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.2.091. 1
பொங்கியது போன்ற வெண்மையான மணற்பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும், ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ்விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய, இகழும் பழி உளவாதல் இல்லை. 

2454 கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவம் கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.2.091. 2
கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும். 

2455 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில் பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக் கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.2.091. 3
ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார் பினை உடையவர். இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மையான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்டதோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார். 

2456 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித் தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம் மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின் நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.2.091. 4
அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர். 

2457 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும் பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான் மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயு மறைக்காட் டிரவு மெல்லியும் பகலும் ஏத்துதல் குணமென லாமே.2.091. 5
பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும். 

2458 பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர் அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே.2.091. 6
பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும் அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும். 

2459 > நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப் பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.2.091. 7
வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும். 

2460 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான் மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன் பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.2.091. 8
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும். 

2461 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும் பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான் கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.2.091.9
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி, தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும். 

2462 பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக் கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள் அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள் பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.2.091. 10
பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க, கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக. 

2463 மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக் கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன் செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப் பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.2.091. 11
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.