LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-92

2.092.திருப்புகலூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
2464 பட்டம் பால்நிற மதியம் 
படர்சடைச் சுடர்விடு பாணி 
நட்டம் நள்ளிரு ளாடும் 
நாதன் நவின்றுறை கோயில் 
புட்டன் பேடையொ டாடும் 
பூம்புக லூர்த்தொண்டர் போற்றி 
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 1
ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார்.அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும். 
2465 முயல்வ ளாவிய திங்கள் 
வாண்முகத் தரிவையில் தெரிவை 
இயல்வ ளாவிய துடைய 
வின்னமு தெந்தையெம் பெருமான் 
கயல்வ ளாவிய கழனிக் 
கருநிறக் குவளைகள் மலரும் 
வயல்வ ளாவிய புகலூர் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 2
கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர். எமக்குத் தந்தையாகவும் தலைவராகவும் விளங்குபவர். 
2466 தொண்டர் தண்கய மூழ்கித் 
துணையலுஞ் சாந்தமும் புகையும் 
கொண்டு கொண்டடி பரவிக் 
குறிப்பறி முருகன்செய் கோலம் 
கண்டு கண்டுகண் குளிரக் 
களிபரந் தொளிமல்கு கள்ளார் 
வண்டு பண்செயும் புகலூர் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092.
தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர் மாலை சாந்து, மணப்புகை கொண்டு திருவடிப்பரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும். வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார். 
2467 பண்ண வண்ணத்த ராகிப் 
பாடலொ டாடல றாத 
விண்ண வண்ணத்த ராய 
விரிபுக லூரரொர் பாகம் 
பெண்ண வண்ணத்த ராகும் 
பெற்றியொ டாணிணை பிணைந்த 
வண்ண வண்ணத்தெம் பெருமான் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 4
விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமானவரும், ஆகாய வடிவினராய் விளங்குபவரும், பெண்ணொர் பாகமான வடிவினரும், ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர். 
2468 ஈச னேறமர் கடவுள் 
இன்னமு தெந்தையெம் பெருமான் 
பூசு மாசில்வெண் ணீற்றர் 
பொலிவுடைப் பூம்புக லூரில் 
மூசு வண்டறை கொன்றை 
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் 
வாச மாமல ருடையார் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092.5
அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர். விடையேறு உடையவர். இனிய அமுதம் போன்றவர். எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர். 
2469 தளிரி ளங்கொடி வளரத் 
தண்கய மிரியவண் டேறிக் 
கிளரி ளம்முழை நுழையக் 
கிழிதரு பொழிற்புக லூரில் 
உளரி ளஞ்சுனை மலரு 
மொளிதரு சடைமுடி யதன்மேல் 
வளரி ளம்பிறை யுடையார் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 6
குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங்கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர். 
2470 தென்சொல் விஞ்சமர் வடசொற் 
றிசைமொழி யெழினரம் பெடுத்துத் 
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் 
தொழுதெழு தொல்புக லூரில் 
அஞ்ச னம்பிதிர்ந் தனைய 
வலைகடல் கடையவன் றெழுந்த 
வஞ்ச நஞ்சணி கண்டர் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092.7
அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில், அன்று அலைகடலைக் கடந்த போது, மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத்தினராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர். 
2471 சாம வேதமொர் கீத 
மோதியத் தசமுகன் பரவும் 
நாம தேயம துடையார் 
நன்குணர்ந் தடிகளென் றேத்தக் 
காம தேவனை வேவக் 
கனலெரி கொளுவிய கண்ணார் 
வாம தேவர்தண் புகலூர் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092.8
தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர். இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர். நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர். காமதேவனை எரித்த கண்ணையுடையவர்.
2472 சீர ணங்குற நின்ற 
செருவுறு திசைமுக னோடு 
நார ணன்கருத் தழிய 
நகைசெய்த சடைமுடி நம்பர் 
ஆர ணங்குறு முமையை 
யஞ்சுவித் தருளுதல் பொருட்டால் 
வார ணத்துரி போர்த்தார் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 9
வர்த்தமானீச்சரத்து இறைவர், சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர். உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர். 
2473 > கையி லுண்டுழல் வாருங் 
கமழ்துவ ராடையி னால்தம் 
செய்யைப் போர்த்துழல் வாரு 
முரைப்பன மெய்யென விரும்பேல் 
மெய்யில் வாளைக ளோடு 
செங்கயல் குதிகொளும் புகலூர் 
மைகொள் கண்டத்தெம் பெருமான் 
வர்த்தமா னீச்சரத் தாரே.
2.092. 10
வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளையாடும் வயல்களைக் கொண்ட புகலூல் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மமையானவை. கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல். 
2474 பொங்கு தண்புனல் சூழ்ந்து 
போதணி பொழிற்புக லூரில் 
மங்குன் மாமதி தவழும் 
வர்த்தமா னீச்சரத் தாரைத் 
தங்கு சீர்திகழ் ஞான 
சம்பந்தன் றண்டமிழ் பத்தும் 
எங்கு மேத்தவல் லார்கள் 
எய்துவ ரிமையவ ருலகே.
2.092. 11
மிகுதியான தண்ணிய நீராலும், மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர். 
திருச்சிற்றம்பலம்

2.092.திருப்புகலூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர். தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 

2464 பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில் புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 1
ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார்.அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும். 

2465 முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான் கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும் வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 2
கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர். எமக்குத் தந்தையாகவும் தலைவராகவும் விளங்குபவர். 

2466 தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம் கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092.
தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர் மாலை சாந்து, மணப்புகை கொண்டு திருவடிப்பரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும். வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார். 

2467 பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 4
விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமானவரும், ஆகாய வடிவினராய் விளங்குபவரும், பெண்ணொர் பாகமான வடிவினரும், ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர். 

2468 ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான் பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில் மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092.5
அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர். விடையேறு உடையவர். இனிய அமுதம் போன்றவர். எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர். 

2469 தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக் கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல் வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 6
குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங்கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர். 

2470 தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092.7
அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில், அன்று அலைகடலைக் கடந்த போது, மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத்தினராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர். 

2471 சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும் நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக் காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார் வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092.8
தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர். இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர். நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர். காமதேவனை எரித்த கண்ணையுடையவர்.

2472 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால் வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 9
வர்த்தமானீச்சரத்து இறைவர், சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர். உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர். 

2473 > கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம் செய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல் மெய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.2.092. 10
வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளையாடும் வயல்களைக் கொண்ட புகலூல் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மமையானவை. கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல். 

2474 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில் மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத் தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும் எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.2.092. 11
மிகுதியான தண்ணிய நீராலும், மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.