LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-93

2.093.திருத்தெங்கூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர். 
தேவியார் - பெரியாம்பிகையம்மை. 
2475 புரைசெய் வல்வினை தீர்க்கும் 
புண்ணியர் விண்ணவர் போற்றக் 
கரைசெய் மால்கடல் நஞ்சை 
உண்டவர் கருதலர் புரங்கள் 
இரைசெய் தாரழ லூட்டி 
யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர் 
விரைசெய் பூம்பொழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 1
மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர். 
2476 சித்தந் தன்னடி நினைவார் 
செடிபடு கொடுவினை தீர்க்கும் 
கொத்தின் றாழ்சடை முடிமேற் 
கோளெயிற் றரவொடு பிறையன் 
பத்தர் தாம்பணிந் தேத்தும் 
பரம்பரன் பைம்புனல் பதித்த 
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 2
தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர். கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர். 
2477 அடையும் வல்வினை யகல 
அருள்பவ ரனலுடை மழுவாட் 
படையர் பாய்புலித் தோலர் 
பைம்புனற் கொன்றையர் படர்புன் 
சடையில் வெண்பிறை சூடித் 
தார்மணி யணிதரு தறுகண் 
விடையர் வீங்கெழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 3
அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர். அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர். கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர். 
2478 பண்டு நான்செய்த வினைகள் 
பறையவோர் நெறியருள் பயப்பார் 
கொண்டல் வான்மதி சூடிக் 
குரைகடல் விடமணி கண்டர் 
வண்டு மாமல ரூதி 
மதுவுண விதழ்மறி வெய்தி 
விண்ட வார்பொழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 4
மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர், முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர். வானத்து இளம்பிறையைச் சூடியவர். கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர். 
2479 சுழித்த வார்புனற் கங்கை 
சூடியொர் காலனைக் காலால் 
தெழித்து வானவர் நடுங்கச் 
செற்றவர் சிறையணி பறவை 
கழித்த வெண்டலை யேந்திக் 
காமன துடல்பொடி யாக 
விழித்த வர்திருத் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 5
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர். அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர். காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர். 
2480 தொல்லை வல்வினை தீர்ப்பார் 
சுடலைவெண் பொடியணி சுவண்டர் 
எல்லி சூடிநின் றாடும் 
இறையவ ரிமையவ ரேத்தச் 
சில்லை மால்விடை யேறித் 
திரிபுரந் தீயெழச் செற்ற 
வில்லி னார்திருத் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 6
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம் எரித்த வில்லினர். 
2481 > நெறிகொள் சிந்தைய ராகி 
நினைபவர் வினைகெட நின்றார் 
முறிகொண் மேனிமுக் கண்ணர் 
முளைமதி நடுநடுத் திலங்கப் 
பொறிகொள் வாளர வணிந்த 
புண்ணியர் வெண்பொடிப் பூசி 
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 7
வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர், நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர். தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர். பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர். 
2482 எண்ணி லாவிறல் அரக்கன் 
எழில்திகழ் மால்வரை யெடுக்கக் 
கண்ணெ லாம்பொடிந் தலறக் 
கால்விர லூன்றிய கருத்தர் 
தண்ணு லாம்புனற் கண்ணி 
தயங்கிய சடைமுடிச் சதுரர் 
விண்ணு லாம்பொழில் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 8
விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய், அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர். தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர். 
2483 தேடித் தானயன் மாலுந் 
திருமுடி யடியிணை காணார் 
பாடத் தான்பல பூதப் 
படையினர் சுடலையிற் பலகால் 
ஆடத் தான்மிக வல்லர் 
அருச்சுனற் கருள்செயக் கருதும் 
வேடத் தார்திருத் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 9
திருத்தெங்கூரில், அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர். 
2484 சடங்கொள் சீவரப் போர்வைச் 
சாக்கியர் சமணர்சொற் றவிர 
இடங்கொள் வல்வினை தீர்க்கும் 
ஏத்துமி னிருமருப் பொருகைக் 
கடங்கொண் மால்களிற் றுரியர் 
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த 
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
2.093. 10
திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத் தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர். 
2485 வெந்த நீற்றினர் தெங்கூர் 
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் 
கந்த மார்பொழில் சூழ்ந்த 
காழியுண் ஞானசம் பந்தன் 
சந்த மாயின பாடல் 
தண்டமிழ் பத்தும்வல் லார்மேல் 
பந்த மாயின பாவம் 
பாறுதல் தேறுதல் பயனே.
2.093. 11
வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும். அவர்கள் தௌவு பெறுதல் வந்துறும் பயனாகும். 
திருச்சிற்றம்பலம்

2.093.திருத்தெங்கூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர். தேவியார் - பெரியாம்பிகையம்மை. 

2475 புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர் விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 1
மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர். 

2476 சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும் கொத்தின் றாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன் பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 2
தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர். கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர். 

2477 அடையும் வல்வினை யகல அருள்பவ ரனலுடை மழுவாட் படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 3
அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர். அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர். கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர். 

2478 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார் கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர் வண்டு மாமல ரூதி மதுவுண விதழ்மறி வெய்தி விண்ட வார்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 4
மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர், முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர். வானத்து இளம்பிறையைச் சூடியவர். கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர். 

2479 சுழித்த வார்புனற் கங்கை சூடியொர் காலனைக் காலால் தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல்பொடி யாக விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 5
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர். அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர். காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர். 

2480 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின் றாடும் இறையவ ரிமையவ ரேத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 6
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம் எரித்த வில்லினர். 

2481 > நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார் முறிகொண் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப் பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 7
வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர், நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர். தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர். பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர். 

2482 எண்ணி லாவிறல் அரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக் கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர் தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் விண்ணு லாம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 8
விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய், அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர். தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர். 

2483 தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார் பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால் ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 9
திருத்தெங்கூரில், அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர். 

2484 சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர்சொற் றவிர இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமி னிருமருப் பொருகைக் கடங்கொண் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.2.093. 10
திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத் தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர். 

2485 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன் சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும்வல் லார்மேல் பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.2.093. 11
வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும். அவர்கள் தௌவு பெறுதல் வந்துறும் பயனாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.