LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-38

5.038.திருக்கடவூர்மயானம் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர். 
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை. 
1448 குழைகொள் காதினர் கோவண ஆடையர் 
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செய்த பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே. 5.038.1
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர்; கோவண ஆடையினர்; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க அண்மையில் உள்ளவர்; தம் பழைய அடியார்கள் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர்.
1449 உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே. 5.038.2
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தம்மை உன்னித் தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும் இனிப்பவர்; தம்மை நோக்கித் தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் 'பிறகு அருள்செய்வோம்' என்னாது அப்போதே அருளும் பெருங்கருணை உடையவர்.
1450 சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. 5.038.3
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சூலம் ஏந்தியிருப்பவர்; புலித்தோலை உடுத்திருப்பவர்; ஆலம் உண்டு அமுதைப் பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர்; மாலையணிந்த மார்பினர்.
1451 இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. 5.038.4
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர்; வீரம் உடையவர்; அறமே வடிவானவர்; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர்.
1452 கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே. 5.038.5
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர்; மதம் பொருந்தியவர் (ஊமத்தமலரைச் சூடியவர்) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற பித்தர்போல்வர்; காண்பீர்களாக.
1453 எரிகொள் மேனி யிளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரிய ரண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே. 5.038.6
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சிவந்த தழல் வண்ணம் கொண்ட திருமேனியும், இளம்பிறை வைத்த சடையும் உடையவர்; அயிராவணம் என்ற ஆனையை உடையவர்; அயன், திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும் காண்டற்கு அரியர்; பெரியர்; காண்பீர்களாக.
1454 அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. 5.038.7
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், உமை ஒருபாகம் உடையவர்; ஆரணங்களாகிய நான் மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர்; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத் தீர்ப்பவர்; மயக்கம் மிகுவிக்கும் பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர்.
1455 அரவு கையின ராதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. 5.038.8
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், அரவம் உடைய கையினர்; ஆதியிற்றோன்றிய பழமையானவர்; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத் தீர்ப்பவர்; அவர்களைப் பணியும் கொள்பவர்; பிரமன், மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர்.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.