LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-94

2.094.திருவாழ்கொளிபுத்தூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர். 
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 
2486 சாகை யாயிர முடையார் 
சாமமு மோதுவ துடையார் 
ஈகை யார்கடை நோக்கி 
யிரப்பதும் பலபல வுடையார் 
தோகை மாமயி லனைய 
துடியிடை பாகமு முடையார் 
வாகை நுண்டுளி வீசும் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 1
வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர். சாமகானம் பாடுபவர். கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர். மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். 
2487 எண்ணி லீரமு முடையா 
ரெத்தனை யோரிவ ரறங்கள் 
கண்ணு மாயிர முடையார் 
கையுமொ ராயிர முடையார் 
பெண்ணு மாயிர முடையார் 
பெருமையொ ராயிர முடையார் 
வண்ண மாயிர முடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 2
வாழ்கொளிபுத்தூர் இறைவர், எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர். இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர். இவர் ஆயிரங்கண், கைகளை உடையவர். சக்தியின் அம்சமாகப் பலவற்றை உடையவர். பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும். 
2488 நொடியொ ராயிர முடையார் 
நுண்ணிய ராமவர் நோக்கும் 
வடிவு மாயிர முடையார் 
வண்ணமு மாயிர முடையார் 
முடியு மாயிர முடையார் 
மொய்குழ லாளையு முடையார் 
வடிவு மாயிர முடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 3
வாழ்கொளிபுத்தூர் இறைவர், நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர். மிகவும் நுண்மையானவர். அவர் பார் வையும் பலவேறு வகைப்பட்டவை. பல்வேறு வண்ணங்கள் கொண்டவர். பல்வாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். பல்வேறு வடிவங்கள் கொண்டவர். 
2489 பஞ்சி நுண்டுகி லன்ன 
பைங்கழற் சேவடி யுடையார் 
குஞ்சி மேகலை யுடையார் 
கொந்தணி வேல்வல னுடையார் 
அஞ்சும் வென்றவர்க் கணியார் 
ஆனையி னீருரி யுடையார் 
வஞ்சி நுண்ணிடை யுடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 4
வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில் ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர். 
2490 பரவு வாரையு முடையார் 
பழித்திகழ் வாரையு முடையார் 
விரவு வாரையு முடையார் 
வெண்டலைப் பலிகொள்வ துடையார் 
அரவம் பூண்பது முடையார் 
ஆயிரம் பேர்மிக வுடையார் 
வரமு மாயிர முடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 5
வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில் பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல அருள்பவர். 
2491 தண்டுந் தாளமுங் குழலுந் 
தண்ணுமைக் கருவியும் புறவில் 
கொண்ட பூதமு முடையார் 
கோலமும் பலபலவுடையார் 
கண்டு கோடலு மாயார் 
காட்சியு மரியதொர் கரந்தை 
வண்டு வாழ்பதி யுடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே
2.094. 6
கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர். பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர். 
2492 மான வாழ்க்கைய துடையார் 
மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் 
தான வாழ்க்கைய துடையார் 
தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த 
ஞான வாழ்க்கைய துடிடயார் 
நள்ளிருண் மகளிர்நின் றேத்த 
வான வாழ்க்கையை துடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 7
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பெருமை பொருந்திய வாழ்க்கையர். தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர். அருட் கொடை வழங்கும் இயல்புடையவர். தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர். நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர். 
2493 ஏழு மூன்றுமொர் தலைகள் 
உடையவ னிடர்பட வடர்த்து 
வேழ்வி செற்றதும் விரும்பி 
விருப்பவர் பலபல வுடையார் 
கேழல் வெண்பிறை யன்ன 
கெழுமணி மிடறுநின் றிலங்க 
வாழி சாந்தமு முடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 8
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர். தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர். பலப்பல விருப்புடையவர். வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர். சாந்தம் அணிந்தவர். 
2494 வென்றி மாமல ரோனும் 
விரிகடற் றுயின்றவன் றானும் 
என்று மேத்துகை யுடையார் 
இமையவர் துதிசெய விரும்பி 
முன்றின் மாமலர் வாச 
முதுமதி தவழ்பொழிற் றில்லை 
மன்றி லாடல துடையார் 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 9
வாழ்கொளிபுத்தூர் இறைவர், தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள்தோறும் துதித்து வணங்கப் பெறுபவர். இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர். 
2495 மண்டை கொண்டுழல் தேரர் 
மாசுடை மேனிவன் சமணர் 
குண்டர் பேசிய பேச்சுக் 
கொள்ளன்மின் திகழொளி நல்ல 
துண்ட வெண்பிறை சூடிச் 
சுண்ணவெண்பொடியணிந் தெங்கும் 
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த 
வாழ்கொளி புத்தூ ருளாரே.
2.094. 10
மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக. 
2496 நலங்கொள் பூம்பொழிற் காழி 
நற்றமிழ் ஞானசம் பந்தன் 
வலங்கொள் வெண்மழு வாளன் 
வாழ்கொளி புத்தூ ருளானை 
இலங்கு வெண்பிறை யானை 
ஏத்திய தமிழிவை வல்லார் 
நலங்கொள் சிந்தைய ராகி 
நன்னெறி யெய்துவர் தாமே.
2.094. 11
நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர். 
திருச்சிற்றம்பலம்

2.094.திருவாழ்கொளிபுத்தூர் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 

2486 சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமு முடையார் வாகை நுண்டுளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 1
வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர். சாமகானம் பாடுபவர். கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர். மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். 

2487 எண்ணி லீரமு முடையா ரெத்தனை யோரிவ ரறங்கள் கண்ணு மாயிர முடையார் கையுமொ ராயிர முடையார் பெண்ணு மாயிர முடையார் பெருமையொ ராயிர முடையார் வண்ண மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 2
வாழ்கொளிபுத்தூர் இறைவர், எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர். இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர். இவர் ஆயிரங்கண், கைகளை உடையவர். சக்தியின் அம்சமாகப் பலவற்றை உடையவர். பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும். 

2488 நொடியொ ராயிர முடையார் நுண்ணிய ராமவர் நோக்கும் வடிவு மாயிர முடையார் வண்ணமு மாயிர முடையார் முடியு மாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார் வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 3
வாழ்கொளிபுத்தூர் இறைவர், நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர். மிகவும் நுண்மையானவர். அவர் பார் வையும் பலவேறு வகைப்பட்டவை. பல்வேறு வண்ணங்கள் கொண்டவர். பல்வாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். பல்வேறு வடிவங்கள் கொண்டவர். 

2489 பஞ்சி நுண்டுகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார் குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையி னீருரி யுடையார் வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 4
வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில் ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர். 

2490 பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார் விரவு வாரையு முடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் அரவம் பூண்பது முடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் வரமு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 5
வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில் பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல அருள்பவர். 

2491 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமு முடையார் கோலமும் பலபலவுடையார் கண்டு கோடலு மாயார் காட்சியு மரியதொர் கரந்தை வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே2.094. 6
கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர். பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர். 

2492 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த ஞான வாழ்க்கைய துடிடயார் நள்ளிருண் மகளிர்நின் றேத்த வான வாழ்க்கையை துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 7
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பெருமை பொருந்திய வாழ்க்கையர். தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர். அருட் கொடை வழங்கும் இயல்புடையவர். தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர். நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர். 

2493 ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவ னிடர்பட வடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார் கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க வாழி சாந்தமு முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 8
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர். தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர். பலப்பல விருப்புடையவர். வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர். சாந்தம் அணிந்தவர். 

2494 வென்றி மாமல ரோனும் விரிகடற் றுயின்றவன் றானும் என்று மேத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழிற் றில்லை மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 9
வாழ்கொளிபுத்தூர் இறைவர், தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள்தோறும் துதித்து வணங்கப் பெறுபவர். இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர். 

2495 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர் குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண்பொடியணிந் தெங்கும் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.2.094. 10
மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக. 

2496 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை இலங்கு வெண்பிறை யானை ஏத்திய தமிழிவை வல்லார் நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.2.094. 11
நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.