LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-95

2.095.திருஅரைசிலி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அரைசிலிநாதர். 
தேவியார் - பெரியம்மை. 
2497 பாடல் வண்டறை கொன்றை 
பான்மதி பாய்புனற் கங்கை 
கோடல் கூவிள மாலை 
மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி 
வாடல் வெண்டலை மாலை 
மருவிட வல்லியந் தோண்மேல் 
ஆடன் மாசுண மசைத்த 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095. 1
செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும். 
2498 ஏறு பேணிய தேறி 
யிளமதக் களிற்றினை யெற்றி 
வேறு செய்தத னுரிவை 
வெண்புலால் கலக்கமெய் போர்த்த 
ஊறு தேனவ னும்பர்க் 
கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் 
ஆறு சேர்தரு சென்னி 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095. 2
விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்குபவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும். 
2499 கங்கை நீர்சடை மேலே 
கதமிகக் கதிரிள வனமென் 
கொங்கை யாளொரு பாகம் 
மருவிய கொல்லைவெள் ளேற்றன் 
சங்கை யாய்த்திரி யாமே 
தன்னடி யார்கருள் செய்து 
அங்கை யாலன லேந்து 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.3
வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் ‘முல்லை’ நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 
2500 மிக்க காலனை வீட்டி 
மெய்கெடக் காமனை விழித்துப் 
புக்க வூரிடு பிச்சை 
யுண்பது பொன்றிகழ் கொன்றை 
தக்க நூல்திகழ் மார்பில் 
தவளவெண் ணீறணிந் தாமை 
அக்கி னாரமும் பூண்ட 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.4
அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துக் காமன் உடல் நீறாகும்படி விழித்து ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமையோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிய வரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 
2501 மானஞ் சும்மட நோக்கி 
மலைமகள் பாகமு மருவித் 
தானஞ் சாவரண் மூன்றுந் 
தழலெழச் சரமது துரந்து 
வானஞ் சும்பெரு விடத்தை 
யுண்டவன் மாமறை யோதி 
ஆனஞ் சாடிய சென்னி 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.5
மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வானவரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும். 
2502 பரிய மாசுணங் கயிறாப் 
பருப்பத மதற்குமத் தாகப் 
பெரிய வேலையைக் கலங்கப் 
பேணிய வானவர் கடையக் 
கரிய நஞ்சது தோன்றக் 
கலங்கிய வவர்தமைக் கண்டு 
அரிய வாரமு தாக்கும் 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.6
அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 
2503 வண்ண மால்வரை தன்னை 
மறித்திட லுற்றவல் லரக்கன் 
கண்ணுந் தோளுநல் வாயும் 
நெரிதரக் கால்விர லூன்றிப் 
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் 
பாடிய பாடலைக் கேட்டு 
அண்ண லாயருள் செய்த 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.8
அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும். 
2504 குறிய மாணுரு வாகிக் 
குவலய மளந்தவன் றானும் 
வெறிகொள் தாமரை மேலே 
விரும்பிய மெய்த்தவத் தோனும் 
செறிவொ ணாவகை யெங்குந் 
தேடியுந் திருவடி காண 
அறிவொ ணாவுரு வத்தெம் 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.9
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 
2505 குருளை யெய்திய மடவார் 
நிற்பவே குஞ்சியைப் பறித்துத் 
திரளை கையிலுண் பவருந் 
தேரருஞ் சொல்லிய தேறேல் 
பொருளைப் பொய்யிலி மெய்யெம் 
நாதனைப் பொன்னடி வணங்கும் 
அருளை யார்தர நல்கும் 
அடிகளுக் கிடமர சிலியே.
2.095.10
இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடிவாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டைகளைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாதவரும் உண்மையின் வடிவானரும், தம் பொன்னடிகளை வணங்குவார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள். 
2506 அல்லி நீள்வயல் சூழ்ந்த 
அரசிலி அடிகளைக் காழி 
நல்ல ஞானசம் பந்தன் 
நற்றமிழ் பத்திவை நாளும் 
சொல்ல வல்லவர் தம்மைச் 
சூழ்ந்தம ரர்தொழு தேத்த 
வல்ல வானுல கெய்தி 
வைகலு மகிழ்ந்திருப் பாரே.
2.095. 11
நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

2.095.திருஅரைசிலி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அரைசிலிநாதர். தேவியார் - பெரியம்மை. 

2497 பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல் ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே.2.095. 1
செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும். 

2498 ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் ஆறு சேர்தரு சென்னி அடிகளுக் கிடமர சிலியே.2.095. 2
விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்குபவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும். 

2499 கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென் கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன் சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்கருள் செய்து அங்கை யாலன லேந்து அடிகளுக் கிடமர சிலியே.2.095.3
வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் ‘முல்லை’ நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 

2500 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை அக்கி னாரமும் பூண்ட அடிகளுக் கிடமர சிலியே.2.095.4
அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துக் காமன் உடல் நீறாகும்படி விழித்து ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமையோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிய வரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 

2501 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித் தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கிடமர சிலியே.2.095.5
மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வானவரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும். 

2502 பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப் பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய வவர்தமைக் கண்டு அரிய வாரமு தாக்கும் அடிகளுக் கிடமர சிலியே.2.095.6
அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 

2503 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன் கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப் பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடமர சிலியே.2.095.8
அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும். 

2504 குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும் வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும் செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடமர சிலியே.2.095.9
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும். 

2505 குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் அருளை யார்தர நல்கும் அடிகளுக் கிடமர சிலியே.2.095.10
இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடிவாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டைகளைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாதவரும் உண்மையின் வடிவானரும், தம் பொன்னடிகளை வணங்குவார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள். 

2506 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும் சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே.2.095. 11
நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.