LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-97

4.097.திருச்சத்திமுற்றம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
933 கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங்
குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை
போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங்
குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.1
ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய தேவனே! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம், தாமரைப் பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக. அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக.
934 காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக்
காலனைமுன்
பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம்
பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன்
னன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.2
திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! மன்மதன் உடம்பு சாம்பலாகுமாறு அவனை வெகுண்டாய். கூற்றுவனை அவன் உயிர்போகும்படி உதைத்தாய். உன் திருவடிகளைப் பணிபவர்களின் பல பிறவிகளையும் அறுத்தருளுவாய். உன்னை வழிபடும் அடியவர்களுடைய உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்ட நீ அடியேனுக்கு அருள்செய்வாயாக.
935 பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும்
புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை
மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா
யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.3
தேவர்கள் உள்ளத்தில் இருப்பவனாய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக் கொழுந்துப் பெருமானே! பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.
936 நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந்
நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந்
தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா
விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.4
வில் போன்ற புருவத்தை உடைய பார்வதி கணவனே! செல்வனே! சிவக்கொழுந்தே! நிலைபேறு இல்லாத உடம்பை நிலைபேறு உடையதாகக் கருதி இந்த நீண்ட உலகத்திலே பல துன்பங்களாகிய குழிகளில் விழுந்து சோர்வுறும் அடியேனை நீயாகவே வந்து அடிமை கொண்டுள்ளாய். அடியேனைக் கை விட்டால் அழிந்துவிடுவேன்.
937 கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன்
கருப்புவியில்
தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத்
திகைப்பொழிவி
உருவிற் றிகழு முமையாள் கணவா
விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.5
வடிவால் விளங்கும் பார்வதி கணவனே! செல்வத்தால் பொலிவுபெறும் சத்தி முற்றப் பெருமானே! கருப்பையை அடைந்த காலத்தும் உன் திருவடிகளையே தியானித்தேன். கருவில் இருந்து வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் புகுந்தபோது வியப்புற்ற அடியேனை உலகப்பொருள்களை வியப்போடு பற்றும் நிலையைப் போக்குவிப்பாய். அடியேனை உலகப்பற்றில் விடுவாயானால் வீணாகக் கெட்டுவிடுவேன்.
938 வெம்மை நமன்றமர் மிக்கு விரவி
விழுப்பதன்முன்
இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை
யீங்கிகழில்
அம்மை யடியேற் கருளுதி யென்பதிங்
காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.6
பேரின்பவீட்டை நல்கும் சத்திமுற்றச் சிவக்கொழுந்தே! கொடிய இயமனுடைய ஏவலர் மிகுதியாகக் கூடி என்னைக் கீழே தள்ளுவதன் முன் இம்மை வாழ்விலேயே உன் திருவடிகளை என் நெஞ்சில் சுவடுபடும்படியாக வைப்பாயாக. இவ்வுலகில் என்னை நீ இகழ்ந்து புறக்கணித்து இருப்பாயானால் மறுமையிலே நீ அடியேனுக்கு அருளப் போகும் செய்தியை யாவர் அறிவார்கள்?
939 விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர்
வெங்கணையால்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள்
தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை
மகிழ்ந்தருளும்
சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.7
வண்டுகள் நெருங்கும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! சிவக்கொழுந்தே! பகைவருடைய மதில்கள் ஒருநொடியில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக
940 இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர்
பொறையிரப்ப
நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது
நீலகண்டா
புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப்
புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.097.8
விளங்குகின்ற சத்திமுற்றச் சிவக்கொழுந்தே! நீலகண்டா! உன்னை அலட்சியம் செய்த தக்கனுடைய வேள்வியை அழித்து வேள்விக்கு வந்த தேவர்கள் தம்பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்ட உலகப் பிரசித்தமாக அந்நாளிலேயே வெற்றி கொண்ட உன் செயலைப் புகழ்ந்த அடியேனுடைய குறைபாடுகள் நீங்க விரும்பி அருளுவாயாக.
941 தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன்
சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிற மல்லா
லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிகவட
மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே.
4.097.9
சான்றோர் வாழும் தில்லைநகரில் விருப்புடையவனே! வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே! சிவக்கொழுந்தே! பொருத்தமான விருப்பத்தைப் பொருந்திச் சமண் சமயத்தை விடுத்து உன் அடைக்கலமாக வந்து சேர்ந்தேன். உன்னைப் பற்றி செய்திகளைத் தவிர வேற்றுச் செய்திகளில் எந்த விருப்பமும் இல்லை. அவற்றால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.
942 பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன்
பொன்முடிதோள்
இறத்தா ளொருவிர லூன்றிட் டலற
விரங்கியொள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக்
கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ்
சிவக்கொழுந்தே. 
4.097.10
சிவக்கொழுந்தே! இயந்திரத் தேரை உடைய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக அவனுடைய பொன்னாலாகிய முடிகளை அணிந்த தலைகளும் தோள்களும் நொறுங்குமாறு ஒரு விரலை அழுத்த அவன் அலற அவனிடம் இரக்கம் காட்டிப் பிரகாசமான வாளினை அவன் நலன் குறித்துக் கொடுத்தாய். தீவினையை உடைய அடியேன் செய்த குற்றமாகிய கொடிய வினையின் பயனாகிய நோயினை அழித்தாய்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.