LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-96

2.096.சீகாழி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2507 பொங்கு வெண்புரி வளரும் 
பொற்புடை மார்பனெம் பெருமான் 
செங்க ணாடர வாட்டுஞ் 
செல்வனெஞ் சிவனுறை கோயில் 
பங்க மில்பல மறைகள் 
வல்லவர் பத்தர்கள் பரவுந் 
தங்கு வெண்டிரைக் கானல் 
தண்வயற் காழிநன் னகரே.
2.096. 1
வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது தோல்வியுறாத வேதங்களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடையதும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும். 
2508 தேவர் தானவர் பரந்து 
திண்வரை மால்கட னிறுவி 
நாவ தாலமிர் துண்ண 
நயந்தவ ரிரிந்திடக் கண்டு 
ஆவ வென்றரு நஞ்ச 
முண்டவ னமர்தரு மூதூர் 
காவ லார்மதில் சூழ்ந்த 
கடிபொழில் காழிநன் னகரே.
2.096. 2
தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர்தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும். 
2509 கரியின் மாமுக முடைய 
கணபதி தாதைபல் பூதந் 
திரிய வில்பலிக் கேகுஞ் 
செழுஞ்சுடர் சேர் தரு மூதூர் 
சரியின் முன்கைநன் மாதர் 
சதிபட மாநட மாடி 
உரிய நாமங்க ளேத்தும் 
ஒலிபுனற் காழிநன் னகரே.
2.096.3
யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரிபவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந்தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக்கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும். 
2510 சங்க வெண்குழைச் செவியன் 
தண்மதி சூடிய சென்னி 
அங்கம் பூணென வுடைய 
வப்பனுக் கழகிய வூராந் 
துங்க மாளிகை யுயர்ந்த 
தொகுகொடி வானிடை மிடைந்து 
வங்க வாண்மதி தடவு 
மணிபொழில் காழிநன் னகரே.
2.096. 4
சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண்மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்குவது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதிகள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும். 
2511 மங்கை கூறமர் மெய்யான் 
மான்மறி யேந்திய கையான் 
எங்க ளீசனென் றெழுவார் 
இடர்வினை கெடுப்பவற் கூராஞ் 
சங்கை யின்றிநன் னியமந் 
தாஞ்செய்து தகுதியின் மிக்க 
கங்கை நாடுயர் கீர்த்தி 
மறையவர் காழிநன் னகரே.
2.096. 5
உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும். 
2512 நாறு கூவிள மத்த 
நாகமுஞ் சூடிய நம்பன் 
ஏறு மேறிய ஈசன் 
இருந்தினி தமர்தரு மூதூர் 
நீறு பூசிய வுருவர் 
நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் 
தேறு வார்கள்சென் றேத்துஞ் 
சீர்திகழ் காழிநன் னகரே.
2.096. 6
மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தௌவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும். 
2513 நடம தாடிய நாதன் 
நந்திதன் முழவிடைக் காட்டில் 
விடம மர்ந்தொரு காலம் 
விரித்தற முரைத்தவற் கூராம் 
இடம தாமறை பயில்வார் 
இருந்தவர் திருந்தியம் போதிக் 
குடம தார்மணி மாடங் 
குலாவிய காழிநன் னகரே.
2.096.7
நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய பொதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும். 
2514 கார்கொண் மேனியவ் வரக்கன் 
றன்கடுந் திறலினைக் கருதி 
ஏர்கொண் மங்கையு மஞ்ச 
வெழின்மலை யெடுத்தவ னெரியச் 
சீர்கொள் பாதத்தொர் விரலாற் 
செறுத்தவெஞ் சிவனுறை கோயில் 
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த 
தண்வயல் காழிநன் னகரே.
2.096.8
கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும். 
2515 மாலு மாமல ரானும் 
மருவிநின் றிகலிய மனத்தாற் 
பாலுங் காண்பரி தாய 
பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் 
சேலும் வாளையுங் கயலுஞ் 
செறிந்துதன் கிளையொடு மேய 
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் 
அணிவயற் காழிநன் னகரே.
2.096. 9
திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும். 
2516 புத்தர் பொய்மிகு சமணர் 
பொலிகழ லடியிணை காணுஞ் 
சித்த மற்றவர்க் கிலாமைத் 
திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் 
சித்த ரோடுநல் லமரர் 
செறிந்தநன் மாமலர் கொண்டு 
முத்த னேயரு ளென்று 
முறைமைசெய் காழிநன் னகரே.
2.096. 10
அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மனமற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறையோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து “முத்தனே அருள்” என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும். 
2517 ஊழி யானவை பலவு 
மொழித்திடுங் காலத்தி லோங்கு. 
* * * * * * * *
2.096.
பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.
திருச்சிற்றம்பலம்

2.096.சீகாழி 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2507 பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான் செங்க ணாடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந் தங்கு வெண்டிரைக் கானல் தண்வயற் காழிநன் னகரே.2.096. 1
வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது தோல்வியுறாத வேதங்களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடையதும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும். 

2508 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கட னிறுவி நாவ தாலமிர் துண்ண நயந்தவ ரிரிந்திடக் கண்டு ஆவ வென்றரு நஞ்ச முண்டவ னமர்தரு மூதூர் காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழில் காழிநன் னகரே.2.096. 2
தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர்தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும். 

2509 கரியின் மாமுக முடைய கணபதி தாதைபல் பூதந் திரிய வில்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர் தரு மூதூர் சரியின் முன்கைநன் மாதர் சதிபட மாநட மாடி உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.2.096.3
யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரிபவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந்தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக்கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும். 

2510 சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி அங்கம் பூணென வுடைய வப்பனுக் கழகிய வூராந் துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து வங்க வாண்மதி தடவு மணிபொழில் காழிநன் னகரே.2.096. 4
சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண்மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்குவது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதிகள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும். 

2511 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான் எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் சங்கை யின்றிநன் னியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.2.096. 5
உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும். 

2512 நாறு கூவிள மத்த நாகமுஞ் சூடிய நம்பன் ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.2.096. 6
மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தௌவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும். 

2513 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில் விடம மர்ந்தொரு காலம் விரித்தற முரைத்தவற் கூராம் இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிக் குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.2.096.7
நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய பொதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும். 

2514 கார்கொண் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி ஏர்கொண் மங்கையு மஞ்ச வெழின்மலை யெடுத்தவ னெரியச் சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.2.096.8
கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும். 

2515 மாலு மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற் பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.2.096. 9
திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும். 

2516 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ் சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.2.096. 10
அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மனமற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறையோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து “முத்தனே அருள்” என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும். 

2517 ஊழி யானவை பலவு மொழித்திடுங் காலத்தி லோங்கு. * * * * * * * *2.096.
பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.