LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-97

2.097.சீகாழி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2518 நம்பொருள் நம்மக்களென்று 
நச்சியிச்சை செய்துநீர் 
அம்பர மடைந்துசால 
அல்லலுய்ப்ப தன்முனம் 
உம்பர்நாத னுத்தமன் 
ஒளிமிகுந்த செஞ்சடை 
நம்பன்மேவு நன்னகர் 
நலங்கொள்காழி சேர்மினே.
2.097. 1
நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 
2519 பாவமேவு முள்ளமோடு 
பத்தியின்றி நித்தலும் 
ஏவமான செய்துசாவ 
தன்முனம்மி சைந்துநீர் 
தீவமாலை தூபமுஞ் 
செறிந்தகைய ராகிநம் 
தேவதேவன் மன்னுமூர் 
திருந்துகாழி சேர்மினே.
2.097.2
பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக. 
2520 சோறுகூறை யின்றியே 
துவண்டுதூர மாய்நுமக் 
கேறுசுற்ற மௌகவே 
இடுக்கணுய்ப்ப தன்முனம் 
ஆறுமோர் சடையினான் 
ஆதியானை செற்றவன் 
நாறுதேன் மலர்ப்பொழில் 
நலங்கொள்காழி சேர்மினே.
2.097. 3
உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக. 
2521 நச்சிநீர் பிறன்கடை 
நடந்துசெல்ல நாளையும் 
உச்சிவம் மெனும்முரை 
உணர்ந்துகேட்ப தன்முனம் 
பிச்சர்நச் சரவரைப் 
பெரியசோதி பேணுவார் 
இச்சைசெய்யு மெம்பிரான் 
எழில்கொள்காழி சேர்மினே.
2.097. 4
பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் ‘நாளை நண்பகற்போதில் வருக ‘எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடுபாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 
2522 கண்கள்காண் பொழிந்துமேனி 
கன்றியொன்ற லாதநோய் 
உண்கிலாமை செய்துநும்மை 
யுய்த்தழிப்ப தன்முனம் 
விண்குலாவு தேவருய்ய 
வேலைநஞ் சமுதுசெய் 
கண்கள்மூன் றுடையவெம் 
கருத்தர்காழி சேர்மினே.
2.097.5
கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத்தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ணராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக. 
2523 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் 
கவத்தமேபிறந்துநீர் 
எல்லையில் பிணக்கினிற் 
கிடந்திடா தெழும்மினோ 
பல்லில்வெண் டலையினிற் 
பலிக்கியங்கு பான்மையான் 
கொல்லையேற தேறுவான் 
கோலக்காழி சேர்மினே.
2.097.6
துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 
2524 பொய்மிகுத்த வாயராய்ப் 
பொறாமையோடு சொல்லுநீர் 
ஐமிகுத்த கண்டரா 
யடுத்திரைப்ப தன்முனம் 
மைமிகுத்த மேனிவா 
ளரக்கனை நெரித்தவன் 
பைமிகுத்த பாம்பரைப் 
பரமர்காழி சேர்மினே.
2.097. 8
மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக 
2525 காலினோடு கைகளுந் 
தளர்ந்துகாம நோய்தனால் 
ஏலவார் குழலினா 
ரிகழ்ந்துரைப்ப தன்முனம் 
மாலினோடு நான்முகன் 
மதித்தவர்கள் காண்கிலா 
நீலமேவு கண்டனார் 
நிகழ்ந்தகாழி சேர்மினே.
2.097.9
கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.
2526 நிலைவெறுத்த நெஞ்சமோடு 
நேசமில் புதல்வர்கள் 
முலைவெறுத்த பேர்தொடங்கி 
யேமுனிவ தன்முனந் 
ப தலைபறித்த கையர்தேரர் 
தாந்தரிப் பரியவன் 
சிலைபிடித் தெயிலெய்தான் 
திருந்துகாழி சேர்மினே.
2.097. 10
பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலானோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக. 
2527 தக்கனார் தலையரிந்த 
சங்கரன் தனதரை 
அக்கினோ டரவசைத்த 
வந்திவண்ணர் காழியை 
ஒக்கஞான சம்பந்தன் 
உரைத்தபாடல் வல்லவர் 
மிக்கவின்ப மெய்திவீற் 
றிருந்துவாழ்தன் மெய்ம்மையே.
2.097. 11
தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும். 
திருச்சிற்றம்பலம்

2.097.சீகாழி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2518 நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர் அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.2.097. 1
நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 

2519 பாவமேவு முள்ளமோடு பத்தியின்றி நித்தலும் ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர் தீவமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம் தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.2.097.2
பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக. 

2520 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் கேறுசுற்ற மௌகவே இடுக்கணுய்ப்ப தன்முனம் ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.2.097. 3
உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக. 

2521 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் இச்சைசெய்யு மெம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.2.097. 4
பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் ‘நாளை நண்பகற்போதில் வருக ‘எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடுபாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 

2522 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன்ற லாதநோய் உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே.2.097.5
கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத்தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ணராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக. 

2523 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமேபிறந்துநீர் எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.2.097.6
துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக. 

2524 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் ஐமிகுத்த கண்டரா யடுத்திரைப்ப தன்முனம் மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.2.097. 8
மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக 

2525 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.2.097.9
கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.

2526 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் ப தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.2.097. 10
பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலானோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக. 

2527 தக்கனார் தலையரிந்த சங்கரன் தனதரை அக்கினோ டரவசைத்த வந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கவின்ப மெய்திவீற் றிருந்துவாழ்தன் மெய்ம்மையே.2.097. 11
தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.