LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-98

2.098.திருத்துருத்தி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதேசுவரர். 
தேவியார் - முகிழாம்பிகையம்மை. 
2528 வரைத்தலைப் பசும்பொனோ 
டருங்கலன்க ளுந்திவந் 
திரைத்தலைச் சுமந்துகொண் 
டெறிந்திலங்கு காவிரிக் 
கரைத்தலைத் துருத்திபுக் 
கிருப்பதே கருத்தினாய் 
உரைத்தலைப் பொலிந்துனக் 
குணர்த்துமாறு வல்லமே.
2.098. 1
மலைகளிலிருந்து பொன்னையும், அரிய அணிகளையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரையிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே! சொன்னவாற றிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ? 
2529 அடுத்தடுத்த கத்தியோடு 
வன்னிகொன்றை கூவிளம் 
தொடுத்துடன் சடைப்பெய்தாய் 
துருத்தியாயோர் காலனைக் 
கடுத்தடிப் புறத்தினா 
னிறத்துதைத்த காரணம் 
எடுத்தெடுத் துரைக்குமாறு 
வல்லமாகில் நல்லமே.
2.098. 2
சடையில் அகத்திப்பூ, வன்னி, வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே! திருத்துருத்தியில் எழுந்தருளியவனே! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம். 
2530 கங்குல்கொண்ட திங்களோடு 
கங்கைதங்கு செஞ்சடைச் 
சங்கிலங்கு வெண்குழை 
சரிந்திலங்கு காதினாய் 
பொங்கிலங்கு பூணநூ 
லுருத்திரா துருத்திபுக் 
கெங்குநின் னிடங்களா 
அடங்கிவாழ்வ தென்கொலோ.
2.098. 3
கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும், சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும், பொங்கி விளங்கும் பூணநூலையும் உடைய உருத்திரமூர்த்தியே! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க, திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ? 
2531 கருத்தினாலொர் காணியில் 
விருத்தியில்லை தொண்டர்தம் 
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி 
யையமேற்ப தன்றியும் 
ஒருத்திபால் பொருத்திவைத் 
துடம்புவிட்டு யோகியாய் 
இருத்திநீ துருத்திபுக் 
கிதென்னமாய மென்பதே.
2.098.4
கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை. தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி, ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ? 
2532 துறக்குமா சொலப்படாய் 
துருத்தியாய் திருந்தடி 
மறக்குமா றிலாதவென்னை 
மையல்செய்திம் மண்ணின்மேல் 
பிறக்குமாறு காட்டினாய் 
பிணிப்படு முடம்புவிட் 
டிறக்குமாறு காட்டினாய்க் 
கிழுக்குகின்ற தென்னையே.
2.098. 5
திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல்வாயாக. 
2533 வெயிற்கெதிர்ந் திடங்கொடா 
தகங்குளிர்ந்த பைம்பொழில் 
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் 
மல்குதண் துருத்தியாய் 
மயிற்கெதிர்ந் தணங்குசாயன் 
மாதொர்பாக மாகமூ 
வெயிற்கெதிர்ந் தொரம்பினால் 
எரித்தவில்லி யல்லையே.
2.098. 6
வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவை இனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ! 
2534 கணிச்சியம் படைச்செல்வா 
கழிந்தவர்க் கொழிந்தசீர் 
துணிச்சிரக் கிரந்தையாய் 
கரந்தையாய் துருத்தியாய் 
அணிப்படுந் தனிப்பிறைப் 
பனிக்கதிர்க் கவாவுநல் 
மணிப்படும்பை நாகநீ 
மகிழ்ந்தவண்ண லல்லையே.
2.098. 7
மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர்களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே, திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றதுமான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர். 
2535 சுடப்பொடிந் துடம்பிழந் 
தநங்கனாய மன்மதன் 
இடர்ப்படக் கடந்திடந் 
துருத்தியாக வெண்ணினாய் 
கடற்படை யுடையவக் 
கடலிலங்கை மன்னனை 
அடற்பட வடுக்கலில் 
லடர்த்தவண்ண லல்லையே.
2.098. 8
நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோநீர். 
2536 களங்குளிர்ந் திலங்குபோது 
காதலானு மாலுமாய் 
வளங்கிளம்பொ னங்கழல் 
வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் 
துருத்தியாய் திருந்தடி 
உளங்குளிர்ந்த போதெலா 
முகந்துகந் துரைப்பனே.
2.098.9
தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர். ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன். 
2537 புத்தர்தத் துவமிலாச் 
சமணுரைத்த பொய்தனை 
உத்தம மெனக்கொளா 
துகந்தெழுந்து வண்டினம் 
துத்தநின்று பண்செயுஞ் 
சூழ்பொழில் துருத்தியெம் 
பித்தர்பித்த னைத்தொழப் 
பிறப்பறுத்தல் பெற்றியே.
2.098. 10
புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது, வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும். 
2538 கற்றுமுற்றி னார்தொழுங் 
கழுமலத் தருந்தமிழ் 
சுற்றுமுற்று மாயினா 
னவன்பகர்ந்த சொற்களால் 
பெற்றமொன் றுயர்த்தவன் 
பெருந்துருத்தி பேணவே 
குற்றமுற்று மின்மையிற் 
குணங்கள்வந்து கூடுமே.
2.098. 11
கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும். 
திருச்சிற்றம்பலம்

2.098.திருத்துருத்தி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதேசுவரர். தேவியார் - முகிழாம்பிகையம்மை. 

2528 வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந் திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.2.098. 1
மலைகளிலிருந்து பொன்னையும், அரிய அணிகளையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரையிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே! சொன்னவாற றிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ? 

2529 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம் தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக் கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம் எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே.2.098. 2
சடையில் அகத்திப்பூ, வன்னி, வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே! திருத்துருத்தியில் எழுந்தருளியவனே! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம். 

2530 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.2.098. 3
கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும், சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும், பொங்கி விளங்கும் பூணநூலையும் உடைய உருத்திரமூர்த்தியே! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க, திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ? 

2531 கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம் அருத்தியாற்றம் மல்லல்சொல்லி யையமேற்ப தன்றியும் ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய் இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாய மென்பதே.2.098.4
கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை. தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி, ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ? 

2532 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.2.098. 5
திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல்வாயாக. 

2533 வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில் துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய் மயிற்கெதிர்ந் தணங்குசாயன் மாதொர்பாக மாகமூ வெயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே.2.098. 6
வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவை இனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ! 

2534 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல் மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்தவண்ண லல்லையே.2.098. 7
மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர்களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே, திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றதுமான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர். 

2535 சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன் இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக வெண்ணினாய் கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை அடற்பட வடுக்கலில் லடர்த்தவண்ண லல்லையே.2.098. 8
நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோநீர். 

2536 களங்குளிர்ந் திலங்குபோது காதலானு மாலுமாய் வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.2.098.9
தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர். ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன். 

2537 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம் துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம் பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.2.098. 10
புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது, வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும். 

2538 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ் சுற்றுமுற்று மாயினா னவன்பகர்ந்த சொற்களால் பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே குற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே.2.098. 11
கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.