LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-99

2.099.திருக்கோடிகா 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோடீசுவரர். 
தேவியார் - வடிவாம்பிகையம்மை. 
2539 இன்றுநன்று நாளைநன் 
றென்றுநின்ற விச்சையால் 
பொன்றுகின்ற வாழ்க்கையைப் 
போகவிட்டுப் போதுமின் 
மின்றயங்கு சோதியான் 
வெண்மதி விரிபுனல் 
கொன்றைதுன்று சென்னியான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 1
இன்றையநாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக. 
2540 அல்லன்மிக்க வாழ்க்கையை 
யாதரித் திராதுநீர் 
நல்லதோர் நெறியினை 
நாடுதுந் நடம்மினோ 
வில்லையன்ன வாணுதல் 
வெள்வளையொர் பாகமாங் 
கொல்லைவெள்ளை யேற்றினான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 2
அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக. வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும், வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2541 துக்கமிக்க வாழ்க்கையின் 
சோர்வினைத் துறந்துநீர் 
தக்கதோர் நெறியினைச் 
சார்தல்செய்யப் போதுமின் 
அக்கணிந் தரைமிசை 
யாறணிந்த சென்னிமேல் 
கொக்கிற கணிந்தவன் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 3
துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி, நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள். அரைமிசை என்பு மாலையை அணிந்தவனாய், கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள். 
2542 பண்டுசெய்த வல்வினை 
பற்றறக் கெடும்வகை 
உண்டுமக் குரைப்பனா 
னொல்லை நீ ரெழுமினோ 
மண்டுகங்கை செஞ்சடை 
வைத்துமாதொர் பாகமாக் 
கொண்டுகந்த மார்பினான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 4
முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு அதனை உங்கட்குக் கூறுகிறேன். விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2543 முன்னைநீர்செய் பாவத்தான் 
மூர்த்திபாதஞ் சிந்தியா 
தின்னநீரி டும்பையின் 
மூழ்கிறீ ரெழும்மினோ 
பொன்னைவென்ற கொன்றையான் 
பூதம்பாட வாடலான் 
கொன்னவிலும் வேலினான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 5
முற்பிறவியில் நீர், செய்த பாவத்தால் சிவமூர்த்தியின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே, புறப்படுவீர்களாக. பொன்னையும் வென்ற அழகிய கொன்றைசூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும் தன்மை வாய்ந்த வேலிகனை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2544 ஏவமிக்க சிந்தையோ 
டின்பமெய்த லாமெனப் 
பாவமெத் தனையுநீர் 
செய்தொரு பயனிலைக் 
காவன்மிக்க மாநகர் 
காய்ந்துவெங் கனல்படக் 
கோவமிக்க நெற்றியான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 6
பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு, பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2545 ஏணழிந்த வாழ்க்கையை 
யின்பமென் றிருந்துநீர் 
மாணழிந்த மூப்பினால் 
வருந்தன்முன்னம் வம்மினோ 
பூணல்வெள் ளெலும்பினான் 
பொன்றிகழ் சடைமுடிக் 
கோணல்வெண் பிறையினான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 7
பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணிகலனாகப் பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2546 மற்றிவாழ்க்கை மெய்யெனும் 
மனத்தினைத் தவிர்ந்துநீர் 
பற்றிவாழ்மின் சேவடி 
பணிந்துவந் தெழுமினோ 
வெற்றிகொள் தசமுகன் 
விறல்கெட விருந்ததோர் 
குற்றமில் வரையினான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 8
இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக. வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2547 மங்குநோ யுறும்பிணி 
மாயும்வண்ணஞ் சொல்லுவன் 
செங்கண்மால் திசைமுகன் 
சென்றளந்துங் காண்கிலா 
வெங்கண்மால் விடையுடை 
வேதியன் விரும்புமூர் 
கொங்குலாம் வளம்பொழிற் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 9
வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் கேளுங்கள். செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற்கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக. 
2548 தட்டொடு தழைமயிற் 
பீலிகொள் சமணரும் 
பட்டுடை விரிதுகிலி 
னார்கள்சொற் பயனிலை 
விட்டபுன் சடையினான் 
மேதகும் முழவொடும் 
கொட்டமைந்த வாடலான் 
கோடிகாவு சேர்மினே.
2.099. 10
தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும், பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின் கோடிகாவை அடைவீர்களாக. 
2549 கொந்தணி குளிர்பொழிற் 
கோடிகாவு மேவிய 
செந்தழ லுருவனைச் 
சீர்மிகு திறலுடை 
அந்தணர் புகலியு 
ளாயகேள்வி ஞானசம் 
பந்தன தமிழ்வல்லார் 
பாவமான பாறுமே.
2.099.11
பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

2.099.திருக்கோடிகா 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோடீசுவரர். தேவியார் - வடிவாம்பிகையம்மை. 

2539 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.2.099. 1
இன்றையநாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக. 

2540 அல்லன்மிக்க வாழ்க்கையை யாதரித் திராதுநீர் நல்லதோர் நெறியினை நாடுதுந் நடம்மினோ வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாங் கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.2.099. 2
அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக. வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும், வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2541 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.2.099. 3
துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி, நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள். அரைமிசை என்பு மாலையை அணிந்தவனாய், கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள். 

2542 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை உண்டுமக் குரைப்பனா னொல்லை நீ ரெழுமினோ மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக் கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.2.099. 4
முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு அதனை உங்கட்குக் கூறுகிறேன். விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2543 முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா தின்னநீரி டும்பையின் மூழ்கிறீ ரெழும்மினோ பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட வாடலான் கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.2.099. 5
முற்பிறவியில் நீர், செய்த பாவத்தால் சிவமூர்த்தியின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே, புறப்படுவீர்களாக. பொன்னையும் வென்ற அழகிய கொன்றைசூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும் தன்மை வாய்ந்த வேலிகனை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2544 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக் காவன்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.2.099. 6
பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு, பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2545 ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென் றிருந்துநீர் மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.2.099. 7
பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணிகலனாகப் பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2546 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ வெற்றிகொள் தசமுகன் விறல்கெட விருந்ததோர் குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.2.099. 8
இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக. வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2547 மங்குநோ யுறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர் கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.2.099. 9
வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் கேளுங்கள். செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற்கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக. 

2548 தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும் பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும் கொட்டமைந்த வாடலான் கோடிகாவு சேர்மினே.2.099. 10
தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும், பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின் கோடிகாவை அடைவீர்களாக. 

2549 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.2.099.11
பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.