LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-100

2.100.திருக்கோவலூர் வீரட்டம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - சிவானந்தவல்லியம்மை. 
2550 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் 
பாசம்விட்ட போதின்கண் 
இடைகொள்வா ரெமக்கிலை 
யெழுகபோது நெஞ்சமே 
குடைகொள்வேந்தன் மூதாதை 
குழகன்கோவ லூர்தனுள் 
விடையதேறுங் கொடியினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 1
படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை. நெஞ்சே! எழுக. என்னோடு போதுக. வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலையமானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனுமாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். 
2551 கரவலாளர் தம்மனைக் 
கடைகடோறுங் கானிமிர்த் 
திரவலாழி நெஞ்சமே 
யினியதெய்த வேண்டிநீ 
குரவமேறி வண்டினங் 
குழலொடியாழ்செய் கோவலூர் 
விரவிநாறு கொன்றையான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 2
நெஞ்சே! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். 
2552 உள்ளத்தீரே போதுமின் 
னுறுதியாவ தறிதிரேல் 
அள்ளற்சேற்றிற் காலிட்டிங் 
கவலத்துள் ளழுந்தாதே 
கொள்ளப்பாடு கீதத்தான் 
குழகன்கோவ லூர்தனுள் 
வெள்ளந்தாங்கு சடையினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 3
நல்ல உள்ளம் உடையவர்களே! உயிருக்கு உறுதியானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயருறாமல், செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம். வருக. 
2553 கனைகொளிருமல் சூலைநோய் 
கம்பதாளி குன்மமும் 
இனையபலவு மூப்பினோ 
டெய்திவந்து நலியாமுன் 
பனைகளுலவு பைம்பொழிற் 
பழனஞ்சூழ்ந்த கோவலூர் 
வினையைவென்ற வேடத்தான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 4
மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல், சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக. 
2554 உளங்கொள்போக முய்த்திடா 
ருடம்பிழந்த போதின்கண் 
துளங்கிநின்று நாடொறுந் 
துயரலாழி நெஞ்சமே 
வளங்கொள்பெண்ணை வந்துலா 
வயல்கள்சூழ்ந்த கோவலூர் 
விளங்குகோவ ணத்தினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 5
ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள் தோறும் துளங்கித் துயருறாதே. வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம். 
2555 கேடுமூப்புச் சாக்காடு 
கெழுமிவந்து நாடொறும் 
ஆடுபோல நரைகளா 
யாக்கைபோக்க தன்றியும் 
கூடிநின்று பைம்பொழிற் 
குழகன்கோவ லூர்தனுள் 
வீடுகாட்டு நெறியினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 6
நம் உடல் நரையுடையதாய், ஆடுபோல அலைதலால் கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது. பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும், வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே! வருக. 
2556 உரையும்பாட்டுந் தளர்வெய்தி 
யுடம்புமூத்த போதின்கண் 
நரையுந்திரையுங் கண்டௌகி 
நகுவர் நமர்க ளாதலால் 
வரைகொள்பெண்ணை வந்துலா 
வயல்கள்சூழ்ந்த கோவலூர் 
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 7
பேச்சும், பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர். ஆதலால், மலையிலிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம். 
2557 ஏதமிக்க மூப்பினோ 
டிருமலீளை யென்றிவை 
ஊதலாக்கை யோம்புவீ 
ருறுதியாவ தறிதிரேல் 
போதில்வண்டு பண்செயும் 
பூந்தண்கோவலூதனுள் 
வேதமோது நெறியினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 8
துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில், வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக. 
2558 ஆறுபட்ட புன்சடை 
அழகனாயி ழைக்கொரு 
கூறுபட்ட மேனியான் 
குழகன்கோவ லூர்தனுள் 
நீறுபட்ட கோலத்தான் 
நீலகண்ட னிருவர்க்கும் 
வேறுபட்ட சிந்தையான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 9
கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக. 
2559 குறிகொளாழி நெஞ்சமே 
கூறைதுவரிட் டார்களும் 
அறிவிலாத வமணர்சொல் 
லவத்தமாவ தறிதிரேல் 
பொறிகொள்வண்டு பண்செயும் 
பூந்தண்கோவ லூர்தனுள் 
வெறிகொள்கங்கை தாங்கினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 10
ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக. 
2560 கழியொடுலவு கானல்சூழ் 
காழிஞான சம்பந்தன் 
பழிகள்தீரச் சொன்னசொற் 
பாவநாச மாதலால் 
அழிவிலீர்கொண் டேத்துமின் 
அந்தண்கோவ லூர்தனுள் 
விழிகொள்பூதப் படையினான் 
வீரட்டானஞ் சேர்துமே.
2.100. 11
வீணே அழிதல் இல்லாதவர்களே! உப்பங்கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ்சொல், பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழிபடுங்கள். அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக. 
திருச்சிற்றம்பலம்

2.100.திருக்கோவலூர் வீரட்டம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - சிவானந்தவல்லியம்மை. 

2550 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 1
படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை. நெஞ்சே! எழுக. என்னோடு போதுக. வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலையமானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனுமாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். 

2551 கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த் திரவலாழி நெஞ்சமே யினியதெய்த வேண்டிநீ குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 2
நெஞ்சே! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். 

2552 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் ளழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 3
நல்ல உள்ளம் உடையவர்களே! உயிருக்கு உறுதியானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயருறாமல், செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம். வருக. 

2553 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 4
மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல், சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக. 

2554 உளங்கொள்போக முய்த்திடா ருடம்பிழந்த போதின்கண் துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 5
ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள் தோறும் துளங்கித் துயருறாதே. வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம். 

2555 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் ஆடுபோல நரைகளா யாக்கைபோக்க தன்றியும் கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 6
நம் உடல் நரையுடையதாய், ஆடுபோல அலைதலால் கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது. பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும், வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே! வருக. 

2556 உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டௌகி நகுவர் நமர்க ளாதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 7
பேச்சும், பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர். ஆதலால், மலையிலிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம். 

2557 ஏதமிக்க மூப்பினோ டிருமலீளை யென்றிவை ஊதலாக்கை யோம்புவீ ருறுதியாவ தறிதிரேல் போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூதனுள் வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 8
துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில், வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக. 

2558 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள் நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 9
கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக. 

2559 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் அறிவிலாத வமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 10
ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக. 

2560 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் பழிகள்தீரச் சொன்னசொற் பாவநாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள் விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.2.100. 11
வீணே அழிதல் இல்லாதவர்களே! உப்பங்கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ்சொல், பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழிபடுங்கள். அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.