LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-101

2.101.திருவாரூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
2561 பருக்கையானை மத்தகத் 
தரிக்குலத் துகிர்ப்புக 
நெருக்கிவாய நித்திலந் 
நிரக்குநீள் பொருப்பனூர் 
கருக்கொள்சோலை சூழநீடு 
மாடமாளி கைக்கொடி 
அருக்கன்மண்ட லத்தணாவு 
மந்தணாரு ரென்பதே.
2.101. 1
பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாடமாளிகைகளை உடைய திருவாரூர். 
2562 விண்டவெள் ளெருக்கலர்ந்த 
வன்னிகொன்றை மத்தமும் 
இண்டைகொண்ட செஞ்சடை 
முடிச்சிவ னிருந்தவூர் 
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி 
னார்கள்கீத வோசைபோய் 
அண்டரண்ட மூடறுக்கு 
மந்தணாரு ரென்பதே.
2.101. 2
‘மலர்ந்த வெள்ளெருக்குமலர், விரிந்தவன்னியிலை, கொன்றைமலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர், கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர். 
2563 கறுத்தநஞ்ச முண்டிருண்ட 
கண்டர்கால னின்னுயிர் 
மறுத்தமாணி தன்றனாகம் 
வண்மைசெய்த மைந்தனூர் 
வெறித்துமேதி யோடிமூசு 
வள்ளைவெள்ளை நீள்கொடி 
அறுத்துமண்டி யாவிபாயு 
மந்தணாரு ரென்பதே.
2.101. 3
கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர், எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர். 
2564 அஞ்சுமொன்றி யாறுவீசி 
நீறுபூசி மேனியில் 
குஞ்சியார வந்திசெய்ய 
வஞ்சலென்னி மன்னுமூர் 
பஞ்சியாரு மெல்லடிப் 
பணைத்தகொங்கை நுண்ணிடை 
அஞ்சொலார் அரங்கெடுக்கு 
மந்தணாரூ ரென்பதே.
2.101.4
காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து, ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர், பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும், நுண்ணியடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர். 
2565 சங்குலாவு திங்கள்சூடி 
தன்னையுன்னு வார்மனத் 
தங்குலாவி நின்றவெங்க 
ளாதிதேவன் மன்னுமூர் 
தெங்குலாவு சோலைநீடு 
தேனுலாவு செண்பகம் 
அங்குலாவி யண்டநாறு 
மந்தணாரூ ரென்பதே.
2.101. 5
சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ்சோலைகளையும், வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர். 
2566 கள்ளநெஞ்ச வஞ்சகக் 
கருத்தைவிட் டருத்தியோ 
டுள்ளமொன்றி யுள்குவா 
ருளத்துளா னுகந்தவூர் 
துள்ளிவாளை பாய்வயற் 
சுரும்புலாவு நெய்தல்வாய் 
அள்ளல்நாரை யாரல்வாரு 
மந்தணாரு ரென்பதே.
2.101. 6
கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும். தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர், வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர். 
2567 கங்கைபொங்கு செஞ்சடைக் 
கரந்தகண்டர் காமனை 
மங்கவெங்க ணால்விழித்த 
மங்கைபங்கன் மன்னுமூர் 
தெங்கினூடு போகிவாழை 
கொத்திறுத்து மாவின்மேல் 
அங்கண்மந்தி முந்தியேறு 
மந்தணாரூ ரென்பதே.
2.101. 7
பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும், மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக்குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்றதிருவாரூர். 
2568 வரைத்தலம் மெடுத்தவன் 
முடித்தலம் முரத்தொடும் 
நெரித்தவன் புரத்தைமுன் 
னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவி 
னேரனார்கள் வெண்ணகை 
அரத்தவாய் மடந்தைமார்க 
ளாடுமாரூ ரென்பதே.
2.101. 8
திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும் செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர். 
2569 இருந்தவன் கிடந்தவன் 
னிடந்துவிண் பறந்துமெய் 
வருந்தியு மளப்பொணாத 
வானவன் மகிழ்ந்தவூர் 
செருந்திஞாழல் புன்னைவன்னி 
செண்பகஞ் செழுங்குரா 
அரும்புசோலை வாசநாறு 
மந்தணாரூ ரென்பதே.
2.101. 9
தாமரைமலரில் இருந்த நான்முகனும், பாம்பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர். 
2570 பறித்தவெண் டலைக்கடுப் 
படுத்தமேனி யார்தவம் 
வெறித்தவேடன் வேலைநஞ்ச 
முண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி 
மிண்டுநீர் வயற்செந்நெல் 
அறுத்தவா யசும்புபாயு 
மந்தணாரூ ரென்பதே.
2.101. 10
பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும், மண்வளமும், நீர்வளமும் உடைய திருவாரூர். 
2571 வல்லிசோலை சூதநீடு 
மன்னுவீதி பொன்னுலா 
அல்லிமா தமர்ந்திருந்த 
வந்தணாரூ ராதியை 
நல்லசொல்லு ஞானசம் 
பந்தன்நாவின் இன்னுரை 
வல்லதொண்டர் வானமாள 
வல்லர்வாய்மை யாகவே.
2.101. 11
கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர்; இஃது உண்மை. 
திருச்சிற்றம்பலம்

2.101.திருவாரூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். தேவியார் - கரும்பனையாளம்மை. 

2561 பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி அருக்கன்மண்ட லத்தணாவு மந்தணாரு ரென்பதே.2.101. 1
பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாடமாளிகைகளை உடைய திருவாரூர். 

2562 விண்டவெள் ளெருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும் இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர் கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் அண்டரண்ட மூடறுக்கு மந்தணாரு ரென்பதே.2.101. 2
‘மலர்ந்த வெள்ளெருக்குமலர், விரிந்தவன்னியிலை, கொன்றைமலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர், கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர். 

2563 கறுத்தநஞ்ச முண்டிருண்ட கண்டர்கால னின்னுயிர் மறுத்தமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர் வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி அறுத்துமண்டி யாவிபாயு மந்தணாரு ரென்பதே.2.101. 3
கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர், எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர். 

2564 அஞ்சுமொன்றி யாறுவீசி நீறுபூசி மேனியில் குஞ்சியார வந்திசெய்ய வஞ்சலென்னி மன்னுமூர் பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை அஞ்சொலார் அரங்கெடுக்கு மந்தணாரூ ரென்பதே.2.101.4
காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து, ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர், பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும், நுண்ணியடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர். 

2565 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத் தங்குலாவி நின்றவெங்க ளாதிதேவன் மன்னுமூர் தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம் அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.2.101. 5
சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ்சோலைகளையும், வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர். 

2566 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ டுள்ளமொன்றி யுள்குவா ருளத்துளா னுகந்தவூர் துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் அள்ளல்நாரை யாரல்வாரு மந்தணாரு ரென்பதே.2.101. 6
கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும். தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர், வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர். 

2567 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர் தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் அங்கண்மந்தி முந்தியேறு மந்தணாரூ ரென்பதே.2.101. 7
பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும், மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக்குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்றதிருவாரூர். 

2568 வரைத்தலம் மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும் நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்நிரைத்தமாளி கைத்திருவி னேரனார்கள் வெண்ணகை அரத்தவாய் மடந்தைமார்க ளாடுமாரூ ரென்பதே.2.101. 8
திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும் செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர். 

2569 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய் வருந்தியு மளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர் செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா அரும்புசோலை வாசநாறு மந்தணாரூ ரென்பதே.2.101. 9
தாமரைமலரில் இருந்த நான்முகனும், பாம்பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர். 

2570 பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம் வெறித்தவேடன் வேலைநஞ்ச முண்டகண்டன் மேவுமூர்மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செந்நெல் அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.2.101. 10
பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும், மண்வளமும், நீர்வளமும் உடைய திருவாரூர். 

2571 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா அல்லிமா தமர்ந்திருந்த வந்தணாரூ ராதியை நல்லசொல்லு ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.2.101. 11
கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர்; இஃது உண்மை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.