LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-39

4.039.திருவையாறு 
திருநேரிசை : பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
384 குண்டனாய்ச் சமண ரோடே
கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ
தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே
திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ்
சொல்லி நான்றிரிகின் றேனே.
4.039.1
அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைக் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.
385 பீலிகை யிடுக்கி நாளும்
பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல
மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந்
திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச
மழகிதா வெழுந்த வாறே.
4.039.2
மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி,  மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள்? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தரளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது.
386 தட்டிடு சமண ரோடே
தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே
யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்
திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே
யும்மைநா னுகந்திட் டேனே.
4.039.3
உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன்? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும், மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன்.
387 பாசிப்பன் மாசு மெய்யர்
பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை
நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்
திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
வல்வினை மாயு மன்றே.
4.039.4
பல்துலக்காததனால் பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன். உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன்.
388 கடுப்பொடி யட்டி மெய்யிற்
கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே
மதியிலீ பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்
திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே
யருந்தவஞ் செய்த வாறே.
4.039.5
கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன்தான் யாது? நீர்த்தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய்.
389 துறவியென் றவம தோரேன்
சொல்லிய செலவு செய்து
உறவினா லமண ரோடு
முணர்விலே னுணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த
திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்
மதியுனக் கடைந்த வாறே.
4.039.6
வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன். தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே!
390 பல்லுரைச் சமண ரோடே
பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன்
சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்
திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா
நினைந்தபோ தினிய வாறே.
4.039.7
வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன். மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே!
391 மண்ணுளார் விண்ணு ளாரும்
வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே
யிசைந்தனை யேழை நெஞ்சே
தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித்
திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக்
கருதிற்றே முடிந்த வாறே.
4.039.8
அறிவில்லாத மனமே! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தௌந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக, நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே. அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று.
392 குருந்தம தொசித்த மாலும்
குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந்
திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்
திருவையா றமாந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே
பொய்வினை மாயு மன்றே.
4.039.9
இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும், மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக, மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தௌவு.
393 அறிவிலா வரக்க னோடி
யருவரை யெடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு
மூதறி வாள னோக்கி
நிறுவினான் சிறு விரலா
னெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினா லருள்கள் செய்தான்
றிருவையா றமர்ந்த தேனே.
4.039.10
இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு, உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட, அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான்.
திருச்சிற்றம்பலம்

4.039.திருவையாறு 

திருநேரிசை : பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 

தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 

384 குண்டனாய்ச் சமண ரோடே

கூடிநான் கொண்ட மாலைத்

துண்டனே சுடர்கொள் சோதீ

தூநெறி யாகி நின்ற

அண்டனே யமர ரேறே

திருவையா றமர்ந்த தேனே

தொண்டனேன் றொழுதுன் பாதஞ்

சொல்லி நான்றிரிகின் றேனே.(4.039.1)

  அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைக் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.

385 பீலிகை யிடுக்கி நாளும்

பெரியதோர் தவமென் றெண்ணி

வாலிய தறிகள் போல

மதியிலார் பட்ட தென்னே

வாலியார் வணங்கி யேத்துந்

திருவையா றமர்ந்த தேனோ

டாலியா வெழுந்த நெஞ்ச

மழகிதா வெழுந்த வாறே.(4.039.2)

  மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி,  மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள்? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தரளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது.

386 தட்டிடு சமண ரோடே

தருக்கிநான் றவமென் றெண்ணி

ஒட்டிடு மனத்தி னீரே

யும்மையான் செய்வ தென்னே

மொட்டிடு கமலப் பொய்கைத்

திருவையா றமர்ந்த தேனோ

டொட்டிடு முள்ளத் தீரே

யும்மைநா னுகந்திட் டேனே.(4.039.3)

  உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன்? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும், மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன்.

387 பாசிப்பன் மாசு மெய்யர்

பலமிலாச் சமண ரோடு

நேசத்தா லிருந்த நெஞ்சை

நீக்குமா றறிய மாட்டேன்

தேசத்தார் பரவி யேத்துந்

திருவையா றமர்ந்த தேனை

வாசத்தால் வணங்க வல்லார்

வல்வினை மாயு மன்றே.(4.039.4)

  பல்துலக்காததனால் பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன். உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன்.

388 கடுப்பொடி யட்டி மெய்யிற்

கருதியோர் தவமென் றெண்ணி

வடுக்களோ டிசைந்த நெஞ்சே

மதியிலீ பட்ட தென்னே

மடுக்களில் வாளை பாயுந்

திருவையா றமர்ந்த தேனை

அடுத்துநின் றுன்னு நெஞ்சே

யருந்தவஞ் செய்த வாறே.(4.039.5)

  கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன்தான் யாது? நீர்த்தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய்.

389 துறவியென் றவம தோரேன்

சொல்லிய செலவு செய்து

உறவினா லமண ரோடு

முணர்விலே னுணர்வொன் றின்றி

நறவமார் பொழில்கள் சூழ்ந்த

திருவையா றமர்ந்த தேனை

மறவிலா நெஞ்ச மேநன்

மதியுனக் கடைந்த வாறே.(4.039.6)

  வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன். தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே!

390 பல்லுரைச் சமண ரோடே

பலபல கால மெல்லாம்

சொல்லிய செலவு செய்தேன்

சோர்வனா னினைந்த போது

மல்லிகை மலருஞ் சோலைத்

திருவையா றமர்ந்த தேனை

எல்லியும் பகலு மெல்லா

நினைந்தபோ தினிய வாறே.(4.039.7)

  வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன். மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே!

391 மண்ணுளார் விண்ணு ளாரும்

வணங்குவார் பாவம் போக

எண்ணிலாச் சமண ரோடே

யிசைந்தனை யேழை நெஞ்சே

தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித்

திருவையா றமர்ந்த தேனைக்

கண்ணினாற் காணப் பெற்றுக்

கருதிற்றே முடிந்த வாறே.(4.039.8)

  அறிவில்லாத மனமே! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தௌந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக, நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே. அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று.

392 குருந்தம தொசித்த மாலும்

குலமலர் மேவி னானும்

திருந்துநற் றிருவ டியுந்

திருமுடி காண மாட்டார்

அருந்தவ முனிவ ரேத்துந்

திருவையா றமாந்த தேனைப்

பொருந்திநின் றுன்னு நெஞ்சே

பொய்வினை மாயு மன்றே.(4.039.9)

  இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும், மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக, மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தௌவு.

393 அறிவிலா வரக்க னோடி

யருவரை யெடுக்க லுற்று

முறுகினான் முறுகக் கண்டு

மூதறி வாள னோக்கி

நிறுவினான் சிறு விரலா

னெரிந்துபோய் நிலத்தில் வீழ

அறிவினா லருள்கள் செய்தான்

றிருவையா றமர்ந்த தேனே.(4.039.10)

  இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு, உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட, அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.