LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-102

2.102.திருச்சிரபுரம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2572 அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை 
யமரர்தம் பெருமானார் 
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் 
வைத்தவர் வேதந்தாம் 
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் 
சிரபுரத் தார்சீரார் 
பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் 
வினையொடும் பொருந்தாரே.
2.102. 1
அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும், ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும். வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடிகளைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார். 
2573 கோல மாகரி யுரித்தவ ராவொடு 
மேனக்கொம் பிளவாமை 
சாலப் பூண்டுதண் மதியது சூடிய 
சங்கர னார்தம்மைப் 
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் 
பொருகடல் விடமுண்ட 
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் 
தொழவினை நில்லாவே.
2.102. 2
அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு, பன்றிப்பல், இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண்மதி சூடிய சங்கரனாரும், தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும், பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும். 
2574 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் 
தவங்கெட மதித்தன்று 
கானத் தேதிரி வேடனா யமர்செயக் 
கண்டருள் புரிந்தார்பூந் 
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் 
சிரபுரத் துறையெங்கள் 
கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை 
குற்றங்கள் குறுகாவே.
2.102. 3
பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும், வண்டுகள் பூந்தேனைத் தேர்ந்து திரியும் மலர்மனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடுவினைக்குற்றங்கள் குறுகா. 
2575 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் 
காலனை யுதைசெய்தார் 
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் 
பிணக்கறுத் தருள்செய்வார் 
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் 
சிரபுரத் தமர்கின்ற 
ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் 
கருவினை யடையாவே.
2.102. 4
மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும், தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள் புரிபவரும், சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப்பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா. 
2576 பாரு நீரொடு பல்கதி ரிரவியும் 
பனிமதி யாகாசம் 
ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் 
றலைவனு மாய்நின்றார் 
சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி 
செழும்புனற் கோட்டாறு 
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு 
மடியவர் வருந்தாரே.
2.102. 5
மண், நீர், பல கதிர்களை உடைய இரவி, தண்மதி, ஆகாயம், வாயு, ஒளிபொருந்திய கனல் வேள்வித் தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய, ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார். 
2577 ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் 
வுலகங்க ளவைமூட 
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக 
வந்தரத் துயர்ந்தார்தாம் 
யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை 
யின்பனெம் பெருமானார் 
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ 
வல்வினை யடையாவே.
2.102. 6
ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து “அருட்கடலே! எந்தையே” என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணிபுரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய, யாழ்போலும் மொழியினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழுதெழ வல்வினைகள் அடையா. 
2578 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் 
பிணமிடு சுடுகாட்டில் 
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட 
மாடும்வித் தகனாரொண் 
சாய்க டான்மிக வுடையதண் மறையவர் 
தகுசிர புரத்தார்தாந் 
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் 
தொழுமவர் தளராரே.
2.102. 7
பேய்கள் பாடவும், பலபூதங்கள் துதிக்கவும், பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில், மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும், பல்வகை உயிர்கட்கும் அவ்வற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார். 
2579 இலங்கு பூண்வரை மார்புடை யிராவண 
னெழில்கொள்வெற் பெடுத்தன்று 
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி 
நெரியவைத் தருள்செய்தார் 
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் 
றதனிடைப் புகுந்தாருங் 
குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு 
தெழவினை குறுகாவே.
2.102. 8
விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலைபோலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச் செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றினிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா. 
2580 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் 
மாயனென் றிவரன்று 
கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் 
கிளறியும் பறந்துந்தாம் 
பண்டு கண்டது காணவே நீண்டவெம் 
பசுபதி பரமேட்டி 
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ 
வினையவை கூடாவே.
2.102. 9
வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும், பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா. 
2581 பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் 
பார்மிசைத் துவர்தோய்ந்த 
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் 
தேவர்கள் பெருமானார் 
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் 
மூழ்கிட விளவாளை 
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை 
விட்டிடு மிகத்தானே.
2.102. 10
மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும், உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும், அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய, எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங்களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப்பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும். 
2582 பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப் 
பையர வோடக்கு 
நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை 
நித்திலப் பெருந்தொத்தை 
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை 
விண்ணவர் பெருமானைப் 
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் 
பரமனைப் பணிவாரே.
2.102.11
மழுவேந்திய கையனை, பக்தர்கள் தலைவனை, படப்பாம்பு, என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை, முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை, மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை, தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார். 
திருச்சிற்றம்பலம்

2.102.திருச்சிரபுரம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2572 அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை யமரர்தம் பெருமானார் மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம் பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார் பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் வினையொடும் பொருந்தாரே.2.102. 1
அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும், ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும். வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடிகளைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார். 

2573 கோல மாகரி யுரித்தவ ராவொடு மேனக்கொம் பிளவாமை சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப் போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.2.102. 2
அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு, பன்றிப்பல், இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண்மதி சூடிய சங்கரனாரும், தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும், பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும். 

2574 மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று கானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந் தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள் கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.2.102. 3
பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும், வண்டுகள் பூந்தேனைத் தேர்ந்து திரியும் மலர்மனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடுவினைக்குற்றங்கள் குறுகா. 

2575 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை யுதைசெய்தார் பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார் வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே.2.102. 4
மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும், தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள் புரிபவரும், சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப்பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா. 

2576 பாரு நீரொடு பல்கதி ரிரவியும் பனிமதி யாகாசம் ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் றலைவனு மாய்நின்றார் சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு மடியவர் வருந்தாரே.2.102. 5
மண், நீர், பல கதிர்களை உடைய இரவி, தண்மதி, ஆகாயம், வாயு, ஒளிபொருந்திய கனல் வேள்வித் தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய, ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார். 

2577 ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் வுலகங்க ளவைமூட ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக வந்தரத் துயர்ந்தார்தாம் யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை யின்பனெம் பெருமானார் வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை யடையாவே.2.102. 6
ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து “அருட்கடலே! எந்தையே” என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணிபுரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய, யாழ்போலும் மொழியினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழுதெழ வல்வினைகள் அடையா. 

2578 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில் வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட மாடும்வித் தகனாரொண் சாய்க டான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந் தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.2.102. 7
பேய்கள் பாடவும், பலபூதங்கள் துதிக்கவும், பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில், மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும், பல்வகை உயிர்கட்கும் அவ்வற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார். 

2579 இலங்கு பூண்வரை மார்புடை யிராவண னெழில்கொள்வெற் பெடுத்தன்று கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார் புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் றதனிடைப் புகுந்தாருங் குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.2.102. 8
விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலைபோலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச் செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றினிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா. 

2580 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம் பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.2.102. 9
வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும், பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா. 

2581 பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார் முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் மூழ்கிட விளவாளை வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை விட்டிடு மிகத்தானே.2.102. 10
மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும், உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும், அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய, எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங்களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப்பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும். 

2582 பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப் பையர வோடக்கு நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை விண்ணவர் பெருமானைப் பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.2.102.11
மழுவேந்திய கையனை, பக்தர்கள் தலைவனை, படப்பாம்பு, என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை, முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை, மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை, தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.