LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-103

2.103.திருஅம்பர்த்திருமாகாளம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர். 
தேவியார் - பட்சநாயகியம்மை. 
2583 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் 
போழிள மதிசூடிப் 
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் 
பிணையல்செய் தவர்மேய 
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் 
கருவினை யடையாவே.
2.103. 1
பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா. 
2584 அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் 
அங்கையி லனலேந்தி 
இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் 
இசைவன பலபூதம் 
மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் 
பயன்றலைப் படுவாரே.
2.103. 2
பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர், புலித்தோலை ஆடையாக உடுப்பவர். அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர், அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன. வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமாகாளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர். 
2585 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் 
குரைகழ லடிசேரக் 
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் 
கருத்தறிந் தவர்மேய 
மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை 
வல்வினை யடையாவே.
2.103.3
அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின், பூதகணங்கள் பாடவும், அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப்பெருமான்நம், கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான். அவ்விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா. 
2586 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் 
இழைவளர் நறுங்கொன்றை 
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் 
தாமகிழ்ந் தவர்மேய 
மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
கங்கு லும்பக லுந்தொழு மடியவர் 
காதன்மை யுடையாரே.
2.103.4
மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும், அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம் கமழும் கொன்றைமாலை, தாமம், கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர். 
2587 நெதிய மென்னுள போகமற் றென்னுள 
நிலமிசை நலமாய 
கதிய மென்னுள வானவ ரென்னுளர் 
கருதிய பொருள்கூடில் 
மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் 
டேத்துதல் புரிந்தோர்க்கே.
2.103. 5
திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும், அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறுநிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ? 
2588 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் 
கனல்விடு சுடர்நாகம் 
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை 
திகழவைத் தவர்மேய 
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் 
வுலகினி லுயர்வரே.
2.103. 6
கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர். 
2589 > தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் 
சுடர்விடு நறுங்கொன்றை 
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் 
புகழ்புரிந் தவர்மேய 
மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் 
பெருமையைப் பெறுவாரே.
2.103.7
தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடையாகும். கொன்றையே அவர்தம் கண்ணி, பூசுவது வெண்பொடி. புகழை விரும்புபவர். அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர். 
2590 பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் 
பருவரைக் கீழூன்றி 
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த 
விறையவ னுறைகோயில் 
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை 
கனலிடைச் செதிளன்றே.
2.103.8
கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம். அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும். 
2591 உய்யுங் காரண முண்டென்று கருதுமி 
னொளிகிளர் மலரோனும் 
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் 
பரவநின் றவர்மேய 
மையுலாம்பொழி லரிசின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் 
கவலையுங் களைவாரே.
2.103.9
கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள். நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார். அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர். 
2592 பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் 
பீலிகொண் டுழல்வாரும் 
கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் 
கழறநின் றவர்மேய 
வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை 
வருபுனன் மாகாளம் 
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் 
பரவுதல் செய்வோமே.
2.103. 10
மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப்பவரும், மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும், பீலிகொண்டு உழல்வோரும், கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும், கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங்களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம். 
2593 மாறு தன்னொடு மண்மிசை யில்லது 
வருபுனன் மாகாளத் 
தீறு மாதியு மாகிய சோதியை 
யேறமர் பெருமானை 
நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் 
பந்தன தமிழ்மாலை 
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் 
குற்றங்கள் குறுகாவே.
2.103. 11
இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை, விடை ஏறும் பெருமானை, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும், கேட்போரையும் குற்றங்கள் குறுகா. 
திருச்சிற்றம்பலம்

2.103.திருஅம்பர்த்திருமாகாளம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர். தேவியார் - பட்சநாயகியம்மை. 

2583 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் கருவினை யடையாவே.2.103. 1
பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா. 

2584 அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையி லனலேந்தி இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம் மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்றலைப் படுவாரே.2.103. 2
பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர், புலித்தோலை ஆடையாக உடுப்பவர். அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர், அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன. வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமாகாளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர். 

2585 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக் கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை வல்வினை யடையாவே.2.103.3
அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின், பூதகணங்கள் பாடவும், அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப்பெருமான்நம், கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான். அவ்விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா. 

2586 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் கங்கு லும்பக லுந்தொழு மடியவர் காதன்மை யுடையாரே.2.103.4
மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும், அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம் கமழும் கொன்றைமாலை, தாமம், கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர். 

2587 நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய கதிய மென்னுள வானவ ரென்னுளர் கருதிய பொருள்கூடில் மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.2.103. 5
திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும், அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறுநிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ? 

2588 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம் தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினி லுயர்வரே.2.103. 6
கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர். 

2589 > தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.2.103.7
தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடையாகும். கொன்றையே அவர்தம் கண்ணி, பூசுவது வெண்பொடி. புகழை விரும்புபவர். அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர். 

2590 பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த விறையவ னுறைகோயில் மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.2.103.8
கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம். அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும். 

2591 உய்யுங் காரண முண்டென்று கருதுமி னொளிகிளர் மலரோனும் பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் பரவநின் றவர்மேய மையுலாம்பொழி லரிசின் வடகரை வருபுனன் மாகாளம் கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.2.103.9
கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள். நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார். அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர். 

2592 பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண் டுழல்வாரும் கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் கழறநின் றவர்மேய வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.2.103. 10
மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப்பவரும், மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும், பீலிகொண்டு உழல்வோரும், கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும், கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங்களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம். 

2593 மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனன் மாகாளத் தீறு மாதியு மாகிய சோதியை யேறமர் பெருமானை நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன தமிழ்மாலை கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.2.103. 11
இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை, விடை ஏறும் பெருமானை, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும், கேட்போரையும் குற்றங்கள் குறுகா. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.