LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-104

2.104.திருக்கடிக்குளம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கற்பகேசுவரர். 
தேவியார் - சவுந்தரநாயகியம்மை. 
2594 பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர் 
புலியுரி யதளாடை 
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு 
குரைகழல் சிலம்பார்க்கக் 
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் 
துறையுங்கற் பகத்தைத்தம் 
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை 
முன்வினை மூடாவே.
2.104. 1
திருநீறணிந்த மேனியராய், வெண்ணூல் அணிந்தவராய், புலித்தோலுடுத்தவராய், யானைத்தோலைப் போர்த்தியவராய், விடைக்கொடி உடையவராய், கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக், கால்களில் சுழல் சிலம்பு ஆகிய ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்தன கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழவினைகள் தொடரா. 
2595 விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா 
விகிர்தனை விழவாரும் 
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் 
வள்ளலை மருவித்தம் 
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தைப் 
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் 
பழியிலர் புகழாமே.
2.104.2
தேவர்கள் தொழும் திருவிளக்கை, தளர்ச்சியுறாத விகிர்தனை, விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை, சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர். பழியிலர். அவரைப் புகழ்வந்தடையும். 
2596 >பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது 
புலியத ளழனாகம் 
தங்க மங்கையைப் பாகதுடையவர் 
தழல்புரை திருமேனிக் 
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தை 
எங்கு மேத்திநின் றின்புறு மடியரை 
யிடும்பைவந் தடையாவே.
2.104. 3
சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து, புலித்தோலை உடுத்து, கொடிய பாம்பு திருமேனியில் விளையாட, உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு, தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா. 
2597 நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத் 
தொத்தினை நிகரில்லாப் 
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் 
பசும்பொனை விசும்பாரும் 
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் 
துறையுங்கற் பகந்தன்னைச் 
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை 
தேய்வது திணமாமே.
2.104. 4
கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை, முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை, உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை, பசும் பொன்னை, வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட்செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம். 
2598 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு 
துன்னிய தழனாகம் 
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல 
கொண்டடி யவர்போற்றக் 
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தை 
விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர் 
விதியுடையவர்தாமே.
2.104. 5
வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும், கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும், அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற, கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர். 
2599 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ 
டலைபுன லழனாகம் 
போதி லங்கிய கொன்றையு மத்தமும் 
புரிசடைக் கழகாகக் 
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தின் 
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை 
பற்றறக் கெடுமன்றே.
2.104.6
உமைமாது விளங்கும் பாகத்தினனும், திங்கள், கங்கை, சினம் மிக்க பாம்பு, கொன்றைமலர், ஊமத்தை மலர் ஆகியனவற்றை வளைந்த சடையின் மேல், அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும், ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங்களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும். 
2600 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் 
குழாம்பல குளிர்பொய்கை 
புலவு புள்ளின மன்னங்க ளாலிடும் 
பூவைசே ருங்கூந்தல் 
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் 
துறையுங்கற் பகத்தைச்சீர் 
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை 
நிற்ககில் லாதானே.
2.104. 7
விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா. 
2601 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன் 
மதியிலா மையிலோடி 
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற 
விறையவன் விரலூன்றக் 
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் 
கடிக்குளந் தனின்மேவிக் 
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் 
குணமுடை யவர்தாமே.
2.104. 8
பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில், அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற, பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர். 
2602 நீரினார் கடற் றுயின்றவ னயனொடு 
நிகழடி முடிகாணார் 
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் 
பவளத்தின் படியாகிக் 
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத் 
துறையுங்கற் பகத்தின்றன் 
சீரினார்கழ லேத்தவல் லார்களைத் 
தீவினை யடையாவே.
2.104. 9
நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும், பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து, மண்ணுலகில் அடித்தளம், விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி, மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா. 
2603 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் 
குறியினி னெறிநில்லா 
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் 
கொள்ளன்மின் விடமுண்ட 
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் 
துறைதரு மெம்மீசர் 
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி யௌதாமே.
2.104. 10
குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள். அவர்தம் பொய்யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர். விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம். 
2604 >தனமலி புகழ் தயங்குபூந் தராயவர் 
மன்னன்நற் சம்பந்தன் 
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் 
மாலதாய் மகிழ்வோடும் 
கனமலி கட லோதம் வந்துலவிய 
கடிக்குளத் தமர்வானை 
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ 
யிறைவனோ டுறைவாரே.
2.104. 11
செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு, கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.104.திருக்கடிக்குளம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கற்பகேசுவரர். தேவியார் - சவுந்தரநாயகியம்மை. 

2594 பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.2.104. 1
திருநீறணிந்த மேனியராய், வெண்ணூல் அணிந்தவராய், புலித்தோலுடுத்தவராய், யானைத்தோலைப் போர்த்தியவராய், விடைக்கொடி உடையவராய், கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக், கால்களில் சுழல் சிலம்பு ஆகிய ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்தன கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழவினைகள் தொடரா. 

2595 விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும் மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம் கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.2.104.2
தேவர்கள் தொழும் திருவிளக்கை, தளர்ச்சியுறாத விகிர்தனை, விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை, சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர். பழியிலர். அவரைப் புகழ்வந்தடையும். 

2596 >பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியத ளழனாகம் தங்க மங்கையைப் பாகதுடையவர் தழல்புரை திருமேனிக் கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை எங்கு மேத்திநின் றின்புறு மடியரை யிடும்பைவந் தடையாவே.2.104. 3
சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து, புலித்தோலை உடுத்து, கொடிய பாம்பு திருமேனியில் விளையாட, உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு, தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா. 

2597 நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப் பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும் கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச் சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.2.104. 4
கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை, முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை, உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை, பசும் பொன்னை, வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட்செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம். 

2598 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழனாகம் அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக் கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடையவர்தாமே.2.104. 5
வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும், கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும், அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற, கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர். 

2599 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுன லழனாகம் போதி லங்கிய கொன்றையு மத்தமும் புரிசடைக் கழகாகக் காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின் பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.2.104.6
உமைமாது விளங்கும் பாகத்தினனும், திங்கள், கங்கை, சினம் மிக்க பாம்பு, கொன்றைமலர், ஊமத்தை மலர் ஆகியனவற்றை வளைந்த சடையின் மேல், அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும், ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங்களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும். 

2600 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை புலவு புள்ளின மன்னங்க ளாலிடும் பூவைசே ருங்கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர் நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.2.104. 7
விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா. 

2601 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன் மதியிலா மையிலோடி எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற விறையவன் விரலூன்றக் கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனின்மேவிக் கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.2.104. 8
பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில், அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற, பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர். 

2602 நீரினார் கடற் றுயின்றவ னயனொடு நிகழடி முடிகாணார் பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக் காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன் சீரினார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.2.104. 9
நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும், பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து, மண்ணுலகில் அடித்தளம், விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி, மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா. 

2603 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினி னெறிநில்லா மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரு மெம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்தூநெறி யௌதாமே.2.104. 10
குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள். அவர்தம் பொய்யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர். விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம். 

2604 >தனமலி புகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன் மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும் கனமலி கட லோதம் வந்துலவிய கடிக்குளத் தமர்வானை இனம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.2.104. 11
செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு, கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.