LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-105

2.105.திருக்கீழ்வேளூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர். 
தேவியார் - வனமுலைநாயகியம்மை. 
2605 மின்னு லாவிய சடையினர் விடையினர் 
மிளிர்தரு மரவோடும் 
பன்னு லாவிய மறையொலி நாவினர் 
கறையணி கண்டத்தர் 
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் 
புகழ்மிகு கீழ்வேளூர் 
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை 
யோடிட வீடாமே.
2.105. 1
ன்னலைப்போல ஒளிவிடும் சடையினரும், விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும். 
2606 நீரு விய சடையிடை யரவொடு 
மதிசிர நிரைமாலை 
வாரு லாவிய வனமுலை யவளொடு 
மணிசிலம் பவையார்க்க 
ஏரு லாவிய விறைவன துறைவிட 
மெழில்திகழ் கீழ்வேளூர் 
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் 
பிணியொடு வினைபோமே.
2.105. 2
கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும். இத்தலத்தைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போகும். 
2607 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு 
வெள்ளெருக் கலர்மத்தம் 
பண்ணி லாவிய பாடலோ டாடலர் 
பயில்வுறு கீழ்வேளூர்ப் 
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் 
கோயிலெம் பெருமானை 
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா 
ருலகினி லுள்ளாரே.
2.105. 3
வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரிசடையில் அரவு, வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து, இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண்ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலைபெற்றிருப்பர். 
2608 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் 
தொங்கவைத் தழகாக 
நாடு லாவிய பலிகொளு நாதனார் 
நலமிகு கீழ்வேளூர்ப் 
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் 
கோயிலுட் பிரியாது 
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் 
நிலைமிகப் பெறுவாரே.
2.105. 4
பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர். 
2609 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை 
வடமணி சிரமாலை 
மன்று லாவிய மாதவ ரினிதியன் 
மணமிகு கீழ்வேளூர் 
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் 
நிமலனை நினைவோடும் 
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை 
தேய்வது திணமாமே.
2.105.5
நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம். 
2610 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் 
கூத்தனை மகிழ்ந்துள்கித் 
தொத்து லாவிய நூலணி மார்பினர் 
தொழுதெழு கீழ்வேளூர்ப் 
பித்து லாவிய பத்தர்கள் பேணிய 
பெருந்திருக் கோயின்மன்னு 
முத்து லாவிய வித்தினை யேத்துமின் 
முடுகிய விடர்போமே.
2.105. 6
பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும், கூத்தனும், நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும், முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின். வலிந்துவரும் இடர்போகும். 
2611 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் 
வன்னியுந் துன்னாரும் 
கறைநி லாவிய கண்டரெண் டோளினர் 
காதல்செய் கீழ்வேளூர் 
மறைநி லாவிய வந்தணர்மலிதரு 
பெருந்திருக் கோயின்மன்னு 
நிறைநி லாவிய வீசனை நேசத்தால் 
நினைபவர் வினைபோமே.
2.105.7
பிறையணிந்த சடைமுடியில் கங்கை, வன்னி ஆகியவற்றை அணிந்தவனும், கறைக் கண்டனும், எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும். 
2612 மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை 
யெடுத்தலு மரக்கன்றன் 
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் 
உறைதரு கீழ்வேளூர்க் 
கலைநி லாவிய நாவினர்கா தல்செய் 
பெருந்திருக் கோயிலுள் 
நிலைநி லாவிய வீசனை நேசத்தா 
னினையவல் வினைபோமே.
2.105. 8
திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும், அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும், கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினைபோகும். 
2613 மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு 
மலரவன் காண்பொண்ணாப் 
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி 
பாகனைப் பரிவொடும் 
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் 
மல்கிய கீழ்வேளூர் 
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் 
நடலைகள் நணுகாவே.
2.105.9
மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும், பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள் நம்மை அடையா. 
2614 சீறு லாவிய தலையினர் நிலையிலா 
வமணர்கள் சீவரார் 
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் 
சுரும்பமர் கீழ்வேளூர் 
ஏறு லாவிய கொடியனை யேதமில் 
பெருந்திருக் கோயின்மன்னு 
பேறு லாவிய பெருமையன் றிருவடி 
பேணுமின் தவமாமே.
2.105. 10
மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும். 
2615 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை 
யழகமர் கீழ்வேளூர்த் 
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் 
கோயிலெம் பெருமானை 
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு 
புகலிமன் சம்பந்தன் 
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி 
பெறுவது திடமாமே.
2.105. 11
கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தௌந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல் உறுதி. 
திருச்சிற்றம்பலம்

2.105.திருக்கீழ்வேளூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர். தேவியார் - வனமுலைநாயகியம்மை. 

2605 மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும் பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.2.105. 1
ன்னலைப்போல ஒளிவிடும் சடையினரும், விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும். 

2606 நீரு விய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலை வாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்க ஏரு லாவிய விறைவன துறைவிட மெழில்திகழ் கீழ்வேளூர் சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.2.105. 2
கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும். இத்தலத்தைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போகும். 

2607 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு வெள்ளெருக் கலர்மத்தம் பண்ணி லாவிய பாடலோ டாடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப் பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா ருலகினி லுள்ளாரே.2.105. 3
வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரிசடையில் அரவு, வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து, இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண்ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலைபெற்றிருப்பர். 

2608 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாக நாடு லாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப் பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாது நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.2.105. 4
பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர். 

2609 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை மன்று லாவிய மாதவ ரினிதியன் மணமிகு கீழ்வேளூர் நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடும் சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.2.105.5
நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம். 

2610 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித் தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப் பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயின்மன்னு முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய விடர்போமே.2.105. 6
பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும், கூத்தனும், நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும், முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின். வலிந்துவரும் இடர்போகும். 

2611 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும் கறைநி லாவிய கண்டரெண் டோளினர் காதல்செய் கீழ்வேளூர் மறைநி லாவிய வந்தணர்மலிதரு பெருந்திருக் கோயின்மன்னு நிறைநி லாவிய வீசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.2.105.7
பிறையணிந்த சடைமுடியில் கங்கை, வன்னி ஆகியவற்றை அணிந்தவனும், கறைக் கண்டனும், எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும். 

2612 மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை யெடுத்தலு மரக்கன்றன் தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க் கலைநி லாவிய நாவினர்கா தல்செய் பெருந்திருக் கோயிலுள் நிலைநி லாவிய வீசனை நேசத்தா னினையவல் வினைபோமே.2.105. 8
திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும், அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும், கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினைபோகும். 

2613 மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப் பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவொடும் செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர் நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.2.105.9
மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும், பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள் நம்மை அடையா. 

2614 சீறு லாவிய தலையினர் நிலையிலா வமணர்கள் சீவரார் வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர் ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயின்மன்னு பேறு லாவிய பெருமையன் றிருவடி பேணுமின் தவமாமே.2.105. 10
மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும். 

2615 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை யழகமர் கீழ்வேளூர்த் திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு புகலிமன் சம்பந்தன் தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.2.105. 11
கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தௌந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல் உறுதி. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.