LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-109

4.109.திருமாற்பேறு 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர். 
தேவியார் - கருணைநாயகியம்மை. 
1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன
மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன
கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன
பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே றுடையான்
மலரடியே. 
4.109.1
மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன. மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன. ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன. மாணிக்கம் போன்று ஒளி வீசுவன. மேலும் வீடுபேற்றை நல்குவன.
1027 கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன
காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன
கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம
லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான்
மலரடியே. 
4.109.2
கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன. அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.